பனியன் தொழிலாளர்களுக்கான சம்பள பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும்

திருப்பூர், அக்.24: திருப்பூர் மாவட்ட ஐஎன்டியூசி தமிழ்நாடு தேசிய பனியன் ஜின்னிங் மற்றும் பொது தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம் திருப்பூர் பூங்கா சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று நடைப்பெற்றது. மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திருப்பூரில் அனைத்து பனியன் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக துவங்க வேண்டும்....

திருப்பூர் மாநகராட்சி 22வது வார்டு தூய்மை பணியாளருக்கு தீபாவளி பரிசு

By Ranjith
18 Oct 2025

திருப்பூர், அக். 18: திருப்பூர் மாநகராட்சி 22வது வார்டில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளி பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் 25வது ஆண்டாக தீபாவளி பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தூய்மை பணியாளர்கள், குடிநீர் பணியாளர்கள், குடிநீர் பராமரிப்பாளர்கள், தெருவிளக்கு பணியாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், மலேரியா கொசுமருந்து அடிக்கும் பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள்,...

சிவன்மலை கோயில் கிரிவல பாதையில் பள்ளம் சூரசம்ஹாரத்திற்கு முன்பு சரிசெய்ய வேண்டும்

By Ranjith
18 Oct 2025

காங்கயம், அக். 18: சிவன்மலை கோயில் கிரிவல பாதையில் ஏற்பட்ட பள்ளத்தை சூரசம்ஹாரத்திற்கு முன்பே சரிசெய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காங்கயம் அருகே பிரசித்தி பெற்ற திருத்தலமான சிவன்மலை முருகன் கோயில் அமைந்துள்ளது. இதன் அடிவாரத்தில் தேர் வலம்வரும் கிரிவலப் பாதையில் சிறிய பள்ளம் ஏற்பட்டது. இப்பள்ளம் நாளடைவில் பெரிதாகி தற்போது வாகனங்கள்...

கூட்ட நெரிசலை தவிர்க்க மாநாட்டு மைய வளாகத்தில் வாகனங்களை நிறுத்தலாம்

By Ranjith
18 Oct 2025

திருப்பூர், அக். 18: திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் அமித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் அதிகளவில் கடைவீதிகளுக்கு செல்ல வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்துவதால் கூட்டநெரிசல் மற்றும் போக்குவரத்து பாதிக்கப்படும். இதனால், பொதுமக்களின் நலன்கருதி கூட்ட நெரிசல்களை தவிர்க்கவும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குமரன் சாலையில் உள்ள மாநாட்டு மைய வளாகத்தில், தனியாக...

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

By Ranjith
16 Oct 2025

திருப்பூர், அக்.17:திருப்பூர் காந்திநகரை சேர்ந்தவர் அபினாஷ் (20), எலக்ட்ரீசியன். இவர், நேற்று திருமுருகன்பூண்டியை அடுத்த ராக்கியாபாளையம், ஜெயம் கார்டன் பகுதியில் பாலாஜி என்பவரின் வீட்டில் எலக்ட்ரிக் வேலை பார்த்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி அபினாஷ் தூக்கி வீசப்பட்டார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை...

செயின்ட் ஜோசப் மகளிர் கல்லூரியில் உலக மாணவர் தினம் கொண்டாட்டம்

By Ranjith
16 Oct 2025

திருப்பூர், அக். 17: திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள செயின்ட் ஜோசப் மகளிர் கல்லூரியில் அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு உலக மாணவர் தினம் கொண்டாடப்பட்டது. இதில், சிறப்பு விருந்தினராக கவிஞர் கவி உழவன் கலந்துகொண்டு ‘இளைய சமுதாயமே எழுக’ என்னும் தலைப்பில் பேசினார். நிகழ்ச்சியில் கல்லூரியின் செயலாளர் அருள்சகோதரி அருள்சீலி, கல்லூரியின் முதல்வர் சகாய தமிழ்ச்செல்வி...

தூய்மை பணியாளருக்கு போனஸ் கவுன்சிலர் நாகராஜ் வழங்கினார்

By Ranjith
16 Oct 2025

திருப்பூர், அக். 17: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளரும், 24வது வார்டு கவுன்சிலருமான ஆர்.நாகராஜ் ஏற்பாட்டில், வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வேலைசெய்து வரும் தூய்மை பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் 140 பேருக்கு காந்திநகர் ஈ.பி.காலனியில் உள்ள ம.தி.மு.க. அலுவலகத்தில் தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது. இதனை கவுன்சிலர் நாகராஜ் வழங்கினார். இதன்...

ஆட்டோ கன்சல்டிங் உரிமையாளருக்கு கத்திக்குத்து: 4 பேர் கும்பலுக்கு வலை

By Ranjith
16 Oct 2025

திருப்பூர், அக். 16: திருப்பூர், காசிபாளையம் ரோடு, எம்.ஜி.ஆர் நகர் 3வது வீதியை சேர்ந்தவர் தினேஷ் (எ)விஷ்ணு (30). இவர், ராக்கியாபாளையம் பகுதியில் ஆட்டோ கன்சல்டிங் நடத்தி வருகிறார். இந்நிலையில் தினேஷ் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நான்கு பேர் இரண்டு பைக்கில் வந்து தினேஷிடம், விஷ்ணு,...

வீட்டுமனை பட்டா வழங்க திமுக நிர்வாகி கோரிக்கை

By Ranjith
16 Oct 2025

பல்லடம், அக். 16: திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. துணைச்செயலாளர் சிவக்குமார் தலைமையில் இச்சிப்பட்டி ஊராட்சி கிராம மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: இச்சிப்பட்டி ஊராட்சியில் 250 குடும்பங்களுக்கு மேல் வீடு இல்லாமல் உள்ளனர். இதற்கிடையில் வீடற்ற ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க 68 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்....

திருமூர்த்தி அணை நீர்மட்டம் சரிவு

By Ranjith
16 Oct 2025

உடுமலை, அக். 16: உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை 60 அடி உயரம் கொண்டது. பிஏபி தொகுப்பு அணைகளில் இது கடைசி அணையாகும். இந்த அணையின் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நான்கு மண்டலங்களாக பிரித்து பாசனத்துக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. தற்போது 4-ம்...