செல்போன், பைக் பறிப்பு; 4 பேர் கைது
திருப்பூர், அக். 28: திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தர் (26). இவர் பூ மார்க்கெட்டில் ஒரு கடையில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர் பூக்கடையில் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றார். அப்போது ஈஸ்வரன் கோவில் அருகே மதுபோதையில் இருந்த 4 பேர் தரை வழிமறித்து, அவரிடம் இருந்த...
எரிசனம்பட்டி நூலக கட்டிடத்தை புதுப்பிக்க கோரிக்கை
உடுமலை, அக். 28: உடுமலை அருகே உள்ள எரிசனம்பட்டி கிராமத்தில் நூலக வளாகம் உள்ளது. இந்த நூலக கட்டிடம் மிகவும் பழமையானதால் பழுதடைந்து காணப்படுகிறது. இந்த நூலகத்துக்கு தினசரி ஏராளமான வாசகர்கள் வந்து படித்து செல்கின்றனர்.நூலக வளாகத்தில் கிராம வறுமை ஒழிப்பு சங்க கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் எப்போதும் பூட்டியே கிடக்கிறது. இதனால்,...
சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்களுக்கு பயிற்சி பட்டறை
திருப்பூர், அக்.28: தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, திருப்பூர் மாவட்ட காலநிலை மாற்றம் மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளி சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்களுக்கான பயிற்சி பட்டறை நேற்று நடைபெற்றது. திருப்பூர் அங்கேரிபாளையம் சாலையில் உள்ள தனியார் பள்ளி கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் காளிமுத்து தலைமை...
குணசீலம் பகுதியில் இன்று மின்தடை
முசிறி, அக்.28: முசிறி அடுத்த குணசீலம் பகுதியில் 33/11 கிலோவாட் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், இம்மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான அய்யம்பாளையம், ஏவூர், ஆமூர், குணசீலம், வாத்தலை, மாங்கரைப்பேட்டை, நெய்வேலி, கொடுந்துறை, மணப்பாளையம், நாச்சம்பட்டி, வீரமணி பட்டி, தின்ன கோணம், சித்தாம்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில்...
புதுமைப்பெண், தமிழ்புதல்வன் திட்டத்தில் 54 ஆயிரத்து 622 மாணவ, மாணவிகள் பயன்
திருப்பூர், அக். 25: திருப்பூர் மாவட்டத்தில் புதுமைப்பெண் மற்றும் தமிழ்புதல்வன் திட்டத்தின் கீழ் 54 ஆயிரத்து 622 மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனா். திருப்பூர் மாவட்டத்தில் நிறைந்தது மனம் நிகழ்ச்சி குறித்து சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் கல்லூரியில் பயிலும் 38,652 மாணவிகள் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் 15,970...
சிறுமியை கர்ப்பமாக்கிய வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
திருப்பூர், அக்.25: திருப்பூர் மாவட்டம் கொடுவாய் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கூலி வேலைக்கு சென்று வந்தார். இவர் கடந்த 2019ம் ஆண்டு கோவை மாவட்டம் செலக்கரிச்சல் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன் (29), என்பவருடன் சிறுமிக்கு பழக்கம்...
சூதாட்டம்: 9 பேர் கைது
திருப்பூர், அக்.25: திருப்பூர், வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில்போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, கொங்கு மெயின் ரோடு ஜவகர் நகர் 5வது வீதியில் சிலர் கும்பலாக அமர்ந்திருந்தனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். போலீசார் விசாரனையில் கொங்கு மெயின் ரோட்டை சேர்ந்த...
திருப்பூர் மாநகராட்சியில் மழைக்கால மீட்பு உபகரணங்கள் வழங்கல்
திருப்பூர், அக். 24: வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் திருப்பூர் மாநகராட்சி சார்பில் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மழைக்காலங்களில் மீட்பு பணிகளுக்கு பயன்படுத்தும் நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் 4 மண்டலங்களுக்கு மாநகராட்சி அலுவலகத்தில் வழங்கப்பட்டது. இதனை மேயர் தினேஷ்குமார், கமிஷனர் அமித் ஆகியோர் வழங்கினர். இதில் துணை...
அரசு பள்ளி மைதானத்தில் குளம் போல தேங்கிய மழை நீர்
திருப்பூர், அக்.24:வடகிழக்கு பருவமழை கடந்த 16ம் தேதி தொடங்கியது முதல் திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை முதல் அதிகன மழை வரை பெய்தது. நேற்று முன் தினம் அதிகாலை முதல் மழை பெய்ததால் பள்ளிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட நொய்யல் வீதி தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி வளாக...