சிபில் அடிப்படையில் பயிர்கடன் வழங்கும் நிபந்தனையை ரத்து செய்ய வேண்டும்
திருப்பூர், ஜூலை 17: தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பயிர் கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் அடிப்படை என்ற நிபந்தனையை ரத்து செய்யக் கோரி கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞர் அணி சார்பில் நேற்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஈஸ்வரன்...
ஓய்வு பெற்ற அலுவலர் சங்க செயற்குழு கூட்டம்
உடுமலை, ஜூலை 16: தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற அலுவலர் சங்க செயற்குழு கூட்டம் உடுமலையில் நடந்தது. செயற்குழு உறுப்பினர் பொன்ராஜ் வரவேற்றார். கௌரவத் தலைவர் நடராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமதாஸ், துணைச் செயலாளர் சிவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் ஞானபண்டிதன் வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்தார். தலைவர் கு.சி.மணி தலைமை...
சேதமடைந்த தளி சாலை சீரமைப்பு
உடுமலை, ஜூலை 16: உடுமலையில் இருந்து தளி சாலை வழியாக திருமூர்த்திமலை, அமராவதி அணை, கேரளா உள்ளிட்ட இடங்களுக்கு வாகனங்கள் செல்கின்றன. அதேபோல், பழனியில் இருந்து ஆனைமலை செல்லும் சாலை வழியாக பொள்ளாச்சி, வால்பாறை, டாப்சிலிப் ஆகிய இடங்களுக்கு அதிகளவில் சுற்றுலா வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில், தளி முதல் எரிசினம்பட்டி வரை சாலை...
பாறைக்குழியில் குப்பை கொட்டும் விவகாரம் மாநகராட்சிக்கு பூச்செடிகள் வழங்கி நூதன ஆர்ப்பாட்டம்
திருப்பூர், ஜூலை 16: திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட, நெருப்பெரிச்சல், ஜி.என். கார்டன் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. அதுமட்டுமல்லாமல் வழிபாட்டு தலங்கள், பதிவுத்துறை அலுவலகம், வணிக வளாகங்கள் ஆகியவை உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பாறைக்குழியில் குப்பை கொட்டுவதை கண்டித்து அனைத்து கட்சினர் மற்றும் பொதுமக்கள் கடந்த சில நாட்களாக கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்,...
குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும்
அவிநாசி, ஜூலை 15: அவிநாசி ஒன்றியம் நடுவச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட முதலாவது வார்டு பகுதியில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு உப்பு தண்ணீர் ஆழ்துளை கிணறு மூலமும் நல்ல தண்ணீர் (ஆற்றுக்குடிநீர்) குழாய் மூலமுமாகவும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக நல்ல தண்ணீர் (ஆற்றுக்குடிநீர்) குறித்த...
சூதாடிய 6 பேர் கைது
திருப்பூர், ஜூலை 15: திருப்பூர், வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவல் அடிப்படையில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது ராம் நகரில் சிலர் கூட்டமாக அமர்ந்திருந்தனர். போலீசார் அவர்களை சுற்றிவளைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அங்கேரிபாளையத்தை சேர்ந்த கார்த்திக்...
திருப்பூரில் அரசு தொழில்நுட்பக் கல்லூரி
திருப்பூர், ஜூலை 15: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாநகர மாவட்ட 2வது மாநாடு திருப்பூர் ஆலங்காடு பகுதியில் நேற்று நடைபெற்றது. பி ஆர் நடராஜன், ராஜேந்திரன், சசிகலா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் துணை மேயர் எம்கேஎம் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு கட்சிக்கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற மாநாட்டில் திருப்பூர்...
ஆடுகள் பலியாவதை தடுக்க தெரு நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு முகாம் நடத்த வலியுறுத்தல்
அவிநாசி, ஜூலை 14: தெரு நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு முகாம்கள் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை முகாம் அவிநாசி அருகே நடுவச்சேரியில் நேற்று நடைபெற்றது. இதில் விவசாயிகள் சார்பில் விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:முறைகேடு ஏற்படுவதைத் தடுக்க சொட்டுநீர் மானியத்தை விவசாயிகளின்...
தொழில் போட்டி திருப்பூரில் வடமாநில வாலிபரை கடத்த முயற்சி
திருப்பூர், ஜூலை 14: பீகாரை சேர்ந்தவர் சதன்குமார் யாதவ் (18). இவர் அக்ரஹாரபுத்தூரில் உள்ள மில்லில் தங்கி வடமாநில தொழிலாளர்களுக்கு பொறுப்பாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் ரஞ்சித் பிஸ்வால் என்பவர் சதன்குமார் யாதவிற்கு முன்பு பொறுப்பாளராக இருந்த போது தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரை மாற்றம் செய்தனர். இதனால் சதன்குமார்...