ஜனநாயக மாதர் சங்க மாவட்ட மாநாட்டு பேரணி

  திருப்பூர், ஜூலை 21: அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட 17-வது மாநாடு அனுப்பர்பாளையம் புதூரில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை முன்னிட்டு மாதர் விழிப்புணர்வு பேரணி நேற்று மாலை திலகர் நகர் பேருந்து நிறுத்தம் அருகில் இருந்து தொடங்கியது. மாநாட்டு வரவேற்பு குழு தலைவர் மருத்துவர் மரகதம் சாமிநாதன் கொடியசைத்து பேரணியை தொடக்கி...

மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

By Ranjith
20 Jul 2025

  உடுமலை, ஜூலை 21: மின் துறையை பொதுத்துறையாக பாதுகாத்திட வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் அமைப்பு, மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பு, மின்துறை பொறியாளர் அமைப்பு சார்பில் உடுமலையில் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஜெகானந்தா, கிளை தலைவர், தமிழ்நாடு மின் ஊழியர் மத்தியமைப்பு தலைமை வகித்தார். ஆர்ப்பட்டத்தை விளக்கி...

திருப்பூர் சத்யா நகர் ஓடை தூர் வாரப்பட்டது

By Ranjith
20 Jul 2025

  திருப்பூர், ஜூலை 21: திருப்பூர் மாநகரில் நொய்யல் ஆற்றின் கிளை ஆறுகள் பல்வேறு பகுதிகளில் செல்கிறது. இவற்றில் சத்யா நகர் பகுதியில் செல்லுகின்ற ஓடையில் செடி கொடிகள் அதிகளவு முளைத்து காணப்பட்டது. இதனால் தண்ணீர் செல்லும் பாதை குறுகலாக்கப்பட்டது. நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது தண்ணீர் செல்வதற்கு போதிய இடம் இல்லாததால் அவை பெருக்கெடுத்து...

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்

By MuthuKumar
19 Jul 2025

திருப்பூர், ஜூலை 20: தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கைகள் அடங்கிய கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. திருப்பூர் தலைமை தபால் அலுவலகத்தில் இருந்து திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தில் பணிபுரிந்து...

ஊத்துக்குளி-சென்னிமலை ரயில்வே நுழைவு பாலத்தில் போக்குவரத்து தடை

By MuthuKumar
19 Jul 2025

திருப்பூர், ஜூலை 20: ஊத்துக்குளி சென்னிமலை சாலையை இணைக்கக்கூடிய ரயில்வே நுழைவுப் பாலம் பழுது காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டு மாற்று பாலம் அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாற்று பாலம் அமைக்கும் பட்சத்தில் கனரக வாகனங்களும் செல்லும் வகையில் உயரமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊத்துக்குளி வட்ட...

திருப்பூரில் போக்குவரத்து பிரச்னைக்கு விரைவில் தீர்வு; வேகம் எடுக்கும் அணைப்பாளையம் ரயில்வே மேம்பாலப் பணிகள்

By MuthuKumar
19 Jul 2025

திருப்பூர், ஜூலை 20: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அணைப்பாளையம் பகுதியில் கல்லூரி சாலை மற்றும் மங்கலம் சாலையை இணைக்க கூடிய வகையிலான ரயில்வே மேம்பால கட்டுமான பணிகள் 19 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் துவங்கப்பட்டுள்ளது பொது மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. பனியன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழில் சார்ந்த நகரமான திருப்பூரில் தமிழ் மாநில தொழிலாளர்கள்...

பனியன் தொழிலாளி தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய கோரி சாலை மறியல்

By Ranjith
18 Jul 2025

  திருப்பூர், ஜூலை 19: திருப்பூர் வலையங்காடு வ.உ.சி. வீதியை சேர்ந்த தயாளன் (40), குமார் நகரில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். அங்கு பனியன் ரோல் திருடியதாக அவரை தாக்கி அவரது சொத்தை சிலர் எழுதிவாங்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், மனஉளைச்சல் அடைந்த அவர் கடந்த 16ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்....

சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

By Ranjith
18 Jul 2025

  திருப்பூர், ஜூலை 19: சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாதர் சம்மேளனத்தினர் எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தனர். வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யா பற்றி குறிப்பிட்டு பேசும்போது பெண்கள், முற்போக்கு அமைப்புகள், மாதர் சங்கங்கள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்து பேசினார். அவரது கருத்துகளுக்கு...

ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

By Ranjith
18 Jul 2025

  திருப்பூர், ஜூலை. 19: ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம். இந்த மாதத்தில் உள்ள வெள்ளிக்கிழமைகளில் அம்மன்கோவில்களுக்கு சென்று விளக்கேற்றி வழிபாடு நடத்துவார்கள். ஆடி மாதத்தில் உள்ள அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் பக்தர்களால் விசேசமாக கொண்டாடப்பட்டு...

கலெக்டர் அலுவலகத்தில் குரூப் 2, 2ஏ தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

By Ranjith
17 Jul 2025

  திருப்பூர், ஜூலை 18: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அறிக்கையின்படி, தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார்பதிவாளர் நிலை 2, போன்ற தொகுதி 2 பணிகளுக்கும் மொத்தம் 645 காலி பணியிடங்களுக்கு வருகிற செப்டம்பர் 28-ம் தேதி முதல் நிலை தேர்வுகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி திருப்பூர் மாவட்ட...