தென்னை ஊட்டச்சத்து டானிக் மானியத்தில் வழங்க கோரிக்கை
பல்லடம், ஜூலை 24: தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்குதல் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த தென்னை ஊட்டச்சத்து டானிக் மானியத்தில் அரசு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பல்லடம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில், ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு நிலவும் விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறையால்,...
அணைப்பாளையம் தரை பாலத்தில் தடுப்புச்சுவர் இல்லாததால் விபத்து அபாயம்
திருப்பூர், ஜூலை 24: திருப்பூர் அணைப்பாளையம் பகுதியில் மங்களம் சாலை மற்றும் கல்லூரி சாலையை இணைக்கக்கூடிய வகையிலான தரைப்பாலம் உள்ளது. நொய்யல் ஆற்றின் மேல் அமைந்துள்ள இந்த தரைப்பாலத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் வரை செல்கின்றன. தரை பாலத்தின் 2 பக்கங்களிலும் தடுப்பு கற்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் அவை...
பீகாரில் இருந்து திருப்பூருக்கு ரயிலில் 2,560 டன் மக்காச்சோளம் வந்தது
திருப்பூர், ஜூலை 24: திருப்பூர் மாவட்டம் பல்லடம், கேத்தனூர், உடுமலை, மடத்துக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோழிப்பண்ணைகள் அதிகளவில் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள கோழிப்பண்ணைகளுக்கு கோழி தீவனங்கள் மக்காச்சோளம், ஆந்திரா, கர்நாடகா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்துகொண்டு வரப்படுவது வழக்கம். இந்நிலையில் பீகார் மாநிலத்தில் தற்போது மக்காச்சோள விளைச்சல் அதிகளவு இருந்ததன் காரணமாக பீகாரில்...
கொல்லிமலை அன்னாசி பழத்திற்கு தனி மவுசு
திருப்பூர், ஜூலை 23: திருப்பூர், கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு கேரளாவில் இருந்து கொண்டுவரப்படும் அன்னாசி பழங்களே அதிகளவு விற்பனை செய்யப்படுகிறது. இவை ஆண்டு முழுவதும் கிடைப்பதால் 80 முதல் 100 ரூபாய் வரையிலும், சீசன் சமயங்களில் 50 முதல் 70 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது திருப்பூருக்கு, நாமக்கல்...
திருமுருகன்பூண்டி பகுதிகளில் வீடுகளில் விநியோகிக்கும் குடிநீரின் தரம் ஆய்வு
திருப்பூர், ஜூலை 23: திருப்பூர், திருமுருகன்பூண்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடுகளில் குடிநீர் விநியோகம் குறித்து நகராட்சி பொறியாளர் ராமசாமி தலைமையிலான அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை இயக்குனர் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் வீடுகளில் விநியோகம் செய்யப்படும் குடிநீரின் தரம் மற்றும் அளவு,...
கொரோனா தடுப்பு பணி அரசு அறிவித்த ஊதியம் வழங்க வலியுறுத்தி நூதன போராட்டம்
திருப்பூர், ஜூலை 23: கொரோனா கால தடுப்பு பணியில் ஈடுபட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் அரசு உத்திரவாதம் அளித்தபடி ஊதிய உயர்வு வழங்கக்கோரி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்கத்தினர் நேற்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். ஏஐடியுசி மாநில செயலாளர்...
வடமாநில தொழிலாளி தற்கொலை
திருப்பூர், ஜூலை 22: பீகாரை சேர்ந்தவர் பிஜய்குமார் யாதவ் (40). இவருக்கு, திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இவர் திருப்பூர், கனியாம்பூண்டி பகுதியில் உள்ள பனியன் நிறுவன விடுதியில் தங்கி அங்குள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், பிஜய்குமார் யாதவ் நேற்று முன்தினம் வேலைக்கு செல்லவில்லை. மாலையில் நண்பர்கள் வந்து பார்த்தபோது, அவர் தூக்கில்...
கட்டுரை, பேச்சுப் போட்டி மாணவர்களுக்கு கலெக்டர் பரிசு
திருப்பூர், ஜூலை 22: திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மனிஷ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 469 கோரிக்கை மனுக்களை வழங்கியிருந்தனர். நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் இயற்கை...
நகராட்சி தார்சாலை ஆக்கிரமித்து கழிவுநீர் தொட்டி; அகற்ற மக்கள் கோரிக்கை
காங்கயம், ஜூலை 22: காங்கயம் நகராட்சிக்கு உட்பட்ட 15வது வார்டு, சக்திநகர் 4வது வீதியில் தனியார் ஒருவர் மூன்று அடுக்கு கட்டிடத்தை கட்டியுள்ளார். இதற்கான கழிவுநீர் தொட்டியை நகராட்சி தார்சாலை மற்றும் பொதுஇடத்தை ஆக்கிரமிப்பு செய்து 5 அடி அகலமும், 15 அடி நீளமும், 10அடி ஆழமும் உள்ள கழிவுநீர் தொட்டியை கட்டி உள்ளார்....