பல்லடம் அருகே கோடங்கிபாளையம் அரசு பள்ளி வகுப்பறைக்குள் மது அருந்திய மர்ம நபர்கள்
பல்லடம், ஜூலை 29: பல்லடம் அருகே கோடங்கிபாளையம் அரசு தொடக்கப்பள்ளி வகுப்பறைக்குள் மது அருந்திவிட்டு, வெளியே மலம் கழித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து பல்லடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். பல்லடம் அருகேயுள்ள கோடங்கிபாளையம் கிராமத்தில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை, பள்ளி...
காங்கயம் பஸ் நிலையத்திற்குள் கனரக வாகனங்கள் வருவதால் விபத்து அபாயம்
காங்கயம், ஜூலை 28: காங்கயம் பஸ் நிலையத்திற்குள் கனரக வாகனங்கள் வருவதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், பயணிகள் அச்சத்தில் உள்ளனர். காங்கயம் பஸ் நிலையம் காங்கேயம் நகர் பகுதியில் மிகமுக்கியமான இடமாக திகழ்கிறது. தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் தாராபுரம், கோவை, கரூர், திருச்சி, திருப்பூர், ஈரோடு, பழனி, சென்னிமலை போன்ற முக்கிய நகரங்களுக்கு செல்ல...
திருப்பூர் நொய்யல் ஆற்றில் மீன் பிடிக்க ஆர்வம் காட்டும் வாலிபர்கள்
திருப்பூர், ஜூலை 28: திருப்பூர் நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் அப்பகுதி மக்கள் ஆற்றில் ஆர்வமுடன் மீன் பிடித்து வருகின்றனர். தென்மேற்கு பருவமழை கோவை, நீலகிரி மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக...
பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை நீடிப்பு
உடுமலை, ஜூலை 28: மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையின் காரணமாக உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. நேற்று முன்தினம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோயில் வளாகத்தை சூழ்ந்தபடி தண்ணீர் சென்றது. இதனால், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், நீர்வரத்து...
வாக்குச்சாவடி மறுசீரமைப்பு கூட்டம்
திருப்பூர், ஜூலை26: திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் வாக்குச்சாவடிகளை மறுசீரமைப்பது தொடர்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம் நேற்று மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு மாநகராட்சி ஆணையாளர் அமித் தலைமை வகித்தார். இதில், ‘மாநகராட்சி பகுதிகளில் 1200 வாக்காளர்களை கொண்ட வாக்குச்சாவடிகளை மறுசீரமைக்கும் போது பிரிக்கப்படும் வாக்காளர்கள் அந்த வார்டுக்கு...
மாநகராட்சி மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு காலாவதியான குளுக்கோஸ்
திருப்பூர், ஜூலை 26: திருப்பூரில் மகப்பேறு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு காலாவதியான குளுக்கோஸ் விநியோகிக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. திருப்பூர் அவிநாசி சாலை பங்களா ஸ்டாப் பகுதியில் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் டிஎஸ்கே மகப்பேறு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு திருப்பூர் வடக்கு பகுதியைச் சேர்ந்த ஏராளமான கர்ப்பிணி பெண்கள் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை...
நடப்பாண்டில் அமராவதி அணையில் இருந்து 2வது முறையாக உபரிநீர் திறப்பு
உடுமலை, ஜூலை 26: அமராவதி அணையில் இருந்து நடப்பாண்டில் 2வது முறையாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணை 90 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணை மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு...
காங்கயம், வெள்ளகோவில் கோயில்களில் அலைமோதிய பக்தர்கள்
காங்கயம், ஜூலை 25: ஆடி அமாவாசையை முன்னிட்டு காங்கயம், வெள்ளகோவில் பகுதி கோயில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காங்கயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோயிலில் நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சிறப்பு பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று சாமி...
ஆடி அமாவாசையை முன்னிட்டு அமராவதி ஆற்றில் பக்தர்கள் குவிந்தனர்
தாராபுரம், ஜூலை 25: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான மூலனூர், குண்டடம் உள்ளிட்ட பகுதிகளை சார்ந்தவர்கள் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு முன்னோர்களுக்கு பொதுமக்கள் தாராபுரம் அமராவதி ஆற்றில் இன்று தர்ப்பணம் கொடுத்தனர். இதற்கான பூஜைகளை நடத்திய சிவாச்சாரியார் பாலசுப்பிரமணியம் கூறுகையில், ‘ஆடி அமாவாசையை முன்னிட்டு தாராபுரம் அமராவதி ஆற்றில் நேற்று...