பல்லடத்தில் கறிக்கோழி விற்பனை குறைவால் பண்ணையாளர்கள் பாதிப்பு

பல்லடம், டிச.1: கோழி இறைச்சி நுகர்வு குறைந்ததை தொடர்ந்து பல்லடம் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு (பிசிசி) விலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் 7 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட கறிக்கோழிப் பண்ணைகள் மூலமாக வாரம் ஒரு கோடி கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு கேரளா, கர்நாடகா, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன....

லாரி மோதியதில் காவலாளி பலி

By Ranjith
29 Nov 2025

பாலக்காடு, நவ.29: கேரள மாநிலம் எர்ணாகுளம் அரசு பேருந்து நிலையம் பகுதியைச் சேர்ந்தவர் சுனில் (56). இவர் மணப்புரம் பகுதியிலுள்ள தனியார் குடியிருப்பு வீடுகளில் காவலராகப் பணியாற்றி வந்தார். அவர் நேற்று மாலை டூவீலரில் பணிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது பரவூர் சிக்னல் சந்திப்பில் சாலையின் குறுக்கே கடந்தபோது லாரி ஒன்று அவர் மீது மோதியது....

பைக் பார்க்கிங் இடமாக மாறும் காங்கயம் அரசு மருத்துவமனை வளாகம்

By Ranjith
29 Nov 2025

காங்கயம், நவ.29: காங்கயம் பஸ்நிலையம் அருகே காங்கயம் அரசு தலைமை மருத்துவமனை அமைந்துள்ளது. தினமும் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து மருத்துவ வசதி பெற்று செல்கின்றனர். இந்த காங்கயம் அரசு மருத்துவமனையில் காலை முதல் மாலை வரை வேலைக்கு செல்வோர், கடைவீதிகளுக்கு வருபவர்கள் தங்களின் வாகனங்களை இருசக்கர வாகன பார்க்கிங்கில் நிறுத்துவதற்கு பதிலாக மருத்துவமனை வளாகத்திலேயே...

எஸ்.பி. அலுவலகத்தில் குற்ற வழக்குகளை கையாள்வது குறித்த கூட்டம்

By Ranjith
29 Nov 2025

திருப்பூர், நவ. 29: திருப்பூர் மாவட்ட எஸ்.பி. அசோக் கிரிஸ் யாதவ் தலைமையில், குற்ற வழக்குகளை எப்படி கையாள்வது என்பது சம்பந்தமாக திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் நடந்தது. அதில் அரசு வக்கீல் கனகசாபாபதி மற்றும் மாவட்ட குற்றத்துறை உதவி இயக்குநர் ரமேஷ், கூடுதல் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர்கள்,...

குடும்பநல அறுவை சிகிச்சை விழிப்புணர்வு ரதம்

By MuthuKumar
27 Nov 2025

திருப்பூர், நவ. 28: திருப்பூர் மாவட்ட குடும்பநல செயலகம் சார்பாக ஆண்களுக்கான குடும்பநல அறுவை சிகிச்சை வார விழாவினை முன்னிட்டு விழிப்புணர்வு ரதத்தினை, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மனிஷ் கொடியசைத்து தொடங்கி வைத்து பேசியதாவது: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மாவட்ட குடும்பநலச் செயலகம் சார்பாக ஆண்களுக்கான குடும்பநல அறுவை சிகிச்சை நவீன...

வாக்காளர் கணக்கீட்டு படிவங்களை விரைவாக வழங்க வேண்டும்

By MuthuKumar
27 Nov 2025

திருப்பூர், நவ. 28: திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி சிறப்புத் தீவிர திருத்தம் 2026 திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 4ம் தேதி தொடங்கி அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் கணக்கீட்டு படிவம் வழங்கப்பட்டு வாக்காளர்களிடமிருந்து இந்த கணக்கீட்டு படிவத்தை திரும்பப்பெறும் பணிகள் நடைபெற்று வருகிறது.வாக்காளர்களுக்கு எந்த...

கோயில் கும்பாபிஷேகம் தேர்தல்களில் ஊழல் நடந்தால் ஜனநாயகத்துக்கு பெரும் ஆபத்து

By MuthuKumar
27 Nov 2025

உடுமலை, நவ. 28: லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா குறித்த கருத்தரங்கு உடுமலையில் நேற்று நடைபெற்றது. வழக்கறிஞர்கள் சங்க தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். கருத்தரங்கில் தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் ராமராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது: வாக்காளர்கள் மற்றும் தேர்தல்கள் ஜனநாயகத்தின் அடித்தளங்கள் ஆகும். வாக்காளர் மற்றும் தேர்தல்கள் ஆகியவற்றை குறித்த...

இஎஸ்ஐ சார்பில் பயனாளிக்கு ஓய்வூதிய ஆணை

By MuthuKumar
26 Nov 2025

திருப்பூர், நவ. 27: கோவை அன்னூர் தனியார் நிறுவனத்தில் ராமசுந்தரம் என்பவர் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 02.02.2025 அன்று இயந்திரத்தை இயக்கும்போது விபத்துக்குள்ளாளார். இதனால் அவரது வலது ஆள்காட்டி விரவில் காயம் ஏற்பட்டது. இந்த விபத்து வேலை காரணமாக ஏற்பட்ட விபத்தாக கருதப்பட்டு இஎஸ்ஐ திட்டத்தின் கீழ் மாத ஓய்வூதியம் ரூ.1,758 என...

கணபதிபாளையத்தில் அன்னதானம் வழங்கல் ஜாதி ஒழிப்பு போராளிகளுக்கு வீரவணக்கம் நிகழ்ச்சி

By MuthuKumar
26 Nov 2025

திருப்பூர், நவ.27: 1957-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி ஜாதியை பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்டப்பிரிவுகளைக் கொளுத்தி வீரமரணம் அடைந்த ஜாதி ஒழிப்பு போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி திராவிடர் விடுதலை கழகம் சார்பில் நேற்று திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திராவிடர் விடுதலை கழக மாவட்ட தலைவர் முகில்ராசு...

22வது திருப்பூர் புத்தக திருவிழா-ஆலோசனை

By MuthuKumar
26 Nov 2025

திருப்பூர், நவ.27: திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட், தமிழ்நாடு அரசு மற்றும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் திருப்பூரில் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வருகின்ற 2026 ஆம் ஆண்டு திருப்பூரில் புத்தகத்திருவிழா நடத்துவது தொடர்பாக பின்னல் புக் ட்ரஸ்ட் சார்பில் ஆலோசனை கூட்டம்...