வேளாண் கருவிகள் பராமரிப்பு முகாம்: இன்று நடக்கிறது
திருப்பூர், ஆக. 2: திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:திருப்பூர் மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான முகாம் இன்று (சனி) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை காங்கயம் ஊதியூரில் உள்ள பழனி தண்டாயுதபாணி...
உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை, தேங்காய், மக்காச்சோளம் ஏலம்
உடுமலை, ஆக. 2: உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மின்னணு ஏலம் (இ-நாம்) நேற்று முன்தினம் நடைபெற்றது. இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் கூறியதாவது:தேங்காய் பருப்பு (கொப்பரை) 131 மூட்டைகளை 19 விவசாயிகள் கொண்டு வந்தனர். இதன் எடை 5098.5 கிலோ. இவற்றின் மதிப்பு ரூ.10 லட்சத்து 84 ஆயிரம் 636. 8 வியாபாரிகள்...
நல்லகாளிபாளையம் பிஏபி வாய்க்காலில் அவசரகால தடுப்பு கதவை நிறுவ வேண்டும்
பல்லடம், ஆக. 2: பல்லடம் அருகேயுள்ள பொங்கலூர் ஒன்றியம் நல்லகாளிபாளையத்தில் பி.ஏ.பி. வாய்க்காலில் அவசரகால தடுப்பு கதவை மீண்டும் நிறுவ விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பல்லடம் அருகேயுள்ள பொங்கலூரில் இருந்து நல்லகாளிபாளையம் வழியாக ஆண்டிபாளையம் செல்லும் பி.ஏ.பி. பிரதான வாய்க்காலில் நல்லகாளிபாளையம் கிராமத்தில் ஓடை குளக்கரை பகுதியில் ஏற்கனவே ஒரு அவசர கால தடுப்பு...
மின்வயரில் திடீர் தீ விவசாயி படுகாயம்
தாராபுரம், ஆக. 1: குண்டடம் அருகே உள்ள குப்பநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பண்ணன் (65), விவசாயி. நேற்று பிற்பகல் இவர், தனது வீடு அருகே உள்ள தோட்டத்து கிணற்றின் மின்மோட்டாரை இயக்கியபோது எதிர்பாராத விதமாக மோட்டாருக்கு செல்லும் வயர்கள் தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ, கருப்பண்ணன் மீதும் பற்றியது. இதில், உடல்கருகிய அவரை அக்கம்...
பெற்றோர் பங்களிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இருக்கைகள்
திருப்பூர், ஆக. 1: திருப்பூர் வடக்கு பாண்டியன் நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் இருக்கைகள் பற்றாக்குறை இருப்பதை தொடர்ந்து அப்பள்ளியின் மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுடைய பெற்றோர்களின் பங்களிப்பாக 45 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் வகுப்பு வகுப்பாசிரியர் சந்தோஷ்குமார் மற்றும் நண்பர்களின்...
வாழையை மாடு மேய்ந்ததாக கூறிய பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு
திருப்பூர், ஆக. 1: திருப்பூர், அறிவொளி நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகமணி (37). இவருக்கு, திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் நாகமணி தன் வீட்டிற்கு முன்பு வாழைமரம் வைத்துள்ளார். அந்த வாழை மரத்தை பாலசுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமான மாடு மேய்ந்து விட்டது. இதுகுறித்து நாகமணி பாலசுப்பிரமணியத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு சம்பவத்தை கூறியுள்ளார்....
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பயனாளிகளுக்கு அரசு சான்றிதழ்கள்
தாராபுரம், ஜூலை 31: தாராபுரத்தில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பங்கேற்ற பயனாளிகளுக்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ், அரசு சான்றிதழ்களை வழங்கினார். தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 8, 9, 10, ஆகிய மூன்று வார்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில், வருவாய் கோட்டாட்சியர் பெலிக்ஸ் ராஜா தலைமையில்,...
அவிநாசி தாலுகா அலுவலகம் முன் மரக்கிளை, முட்புதர், வேலி அகற்றம்
அவிநாசி, ஜூலை 31: அவிநாசி தாலுகா அலுவலகம் முன் சாலையோரம் இருந்த மரக்கிளை, முட்புதர், சுற்றுச்சுவர் அருகில் இருந்த இரும்பு கம்பிவேலி துப்புரவு பணியாளர்கள் மூலமாக அகற்றப்பட்டது. நகராட்சி ஆணையாளர் வெங்கடேசுவரன் உத்தரவின்பேரில், சேவூர் ரோட்டில் அரசு அலுவலகங்களின் சுற்றுச்சுவரில் ஒட்டப்பட்டிருந்த விளம்பர போஸ்டர்களை நகராட்சி தூய்மை பணியாளர்கள் அகற்றினர். அவிநாசி நகராட்சி அலுவலகம்...
வீடியோ கால் பேசிய மனைவிக்கு அடிஉதை
திருப்பூர், ஜூலை 31: தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (32). சரக்கு வாகனம் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். இவரது மனைவி மணிமரியாள் (33). இவர்கள், திருப்பூர்- ராயபுரம் பகுதியில் வசித்து வருகின்றனர். சில மாதங்களாக கணவன்- மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம்...