ஜிஹெச்சில் காலிப்பணியிடம் நிரப்பக்கோரி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் பெருந்திறல் முறையீடு
திருச்சி, ஜூலை 11: மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்களை 11 மாதம் தற்காலிக அடிப்படையில் பணியமர்த்துவதை அரசு கைவிட விலயுறுத்தி பெருந்திறல் முறையீடு நடந்தது. திருச்சி மாவட்ட தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று பெருந்திறல் முறையீடு நடந்தது. இதில் அரசு மருத்துவமனைகள்...
பூட்டிக்கிடந்த வீட்டில் நகை, பணம் திருட்டு
திருச்சி, ஜூலை 11:திருச்சி, எ.புதூர் அப்துல்கலாம் நகரை சேர்ந்தவர் கவுரி(29). இவர் கடந்த 3 ஆண்டுகளாக கணவனை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 9ம் தேதி இவர் வேலைக்கு சென்றார். வீட்டிலிருந்த அவரது தாய் வீட்டை பூட்டி சாவியை மிதியடியின் கீழே வைத்துவிட்டு ஊருக்கு சென்றதாக தெரிகிறது. அன்று மாலை கவுரி வீடு...
ஆர்எம் அலுவலகம் அருகே பழைய பென்ஷன் திட்டம் கோரி எஸ்ஆர்எம்யூ ஆர்ப்பாட்டம்
திருச்சி, ஜூலை 10: எஸ்ஆர்எம்யூ அமைப்பு சார்பில் திருச்சி ரெயில்வே கோட்டம் மற்றும் பொன்மலை பணிமனை கோட்டம் சார்பில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. எஸஆர்எம்யூ துணை பொது செயலாளர் வீரசேகரன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக தொழிற்சங்கங்களுக்கு சாதகமான சட்டங்களை மாற்றி...
ரயில்வே தண்டவாளத்தில் பணம், ஆவணங்களுடன் வாலிபர் சடலம் மீட்பு
சமயபுரம், ஜூலை 10: நம்பர் 1 டோல்கேட் அருகே பிச்சாண்டர்கோவில் ரயில் நிலையம் அருகே கீரமங்கலம் பகுதியில் தண்டவாளத்தின் அருகே 45 வயது மிக்க ஆண் சடலமாக கிடந்துள்ளது. தகவல் அறிந்த விருத்தாச்சலம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் விருதுநகர் மாவட்டம் ராயல் ரைஸ் மில் தெருவை...
மாவட்ட மைய நூலகத்தில் இன்று யோகா பயிற்சி
திருச்சி, ஜூலை 10: திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் இணைந்து சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்குமான யோகா பயிற்சி மாவட்ட மைய நூலகத்தில் இன்று நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து ஜூலை 13ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 முதல் 11.30 மணி வரை குழந்தைகளுக்கான சதுரங்கப் பயிற்சி...
திருவானைக்கோயிலில் ஆனி பிரதோசம் சுவாமி, நந்திபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்
திருச்சி, ஜூலை 9: திருவானைக்கோயில் அகிலாண்டேஷ்வரி, ஜம்புகேஸ்வரர் கோயிலில் நேற்று ஆனி பிரதோசத்தையொட்டி சுவாமி மற்றும் நந்திபெருமானுக்கு சிறப்பு அபிஷே ஆராதனைகள் நடந்தது. திருச்சி, திருவானைக்கோயில் அகிலாண்டேஷ்வரி, ஜம்புகேஷ்வரர் கோயில் பஞ்சபூத தலங்களில் நீர்த்தலமாக திகழ்க்கிறது. பொதுவாக பிரதோஷ நாட்களில் சிவதலங்களில் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திருவானைக்கோயில்...
மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் பிரதோஷ வழிபாடு
திருச்சி, ஜூலை 9: திருச்சி, மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு உச்சிகால பூஜையில் முக்கனிகளை கொண்டு அபிஷேகம் நடந்தது. திருச்சி மாவட்டத்தின் அடையாளமாக திகழ்கிறது, மலைக்கோட்ைட மட்டுவார் குழலம்மை தாயுமான சுவாமி கோயில். இங்கு தாயுமான சுவாமியை தரிசித்தால் கர்ப்பிணிகளுக்கு சுக பிரசவம் நடக்கும் என்பது ஐதீகம். இதானால் இங்கு திருச்சி...
சமயபுரத்தில் மின்நிறுத்த அறிவிப்பு ரத்து
திருச்சி, ஜூலை 9: சமயபுரத்தில் இன்று அறிவிக்கப்பட்டிருந்த மின்நிறுத்தம் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுகிறது. திருச்சி ரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட சமயபுரம் துணை மின் நிலையம் சார்பில் இன்று(ஜூலை 9) அறிவிக்கப்பட்டிருந்த மின்நிறுத்தம் செய்யப்படுவது, மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்நிறுத்தம் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுகிறது. மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும். சமயபுரம் துணை...
ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் காத்திருப்பு போராட்டம்
திருச்சி, ஜூலை 8: தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்கத்தினர் நேற்று மாநிலம் தழுவிய ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து கலெக்டர் அலுவலகம் அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் பிச்சைபிள்ளை தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பொன்னர் முன்னிலை...