அரசு போக்குவரத்து பணியாளர் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கல்
திருச்சி, ஜூலை 6: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் தலைமையகத்தில் பணியின் போது இறந்த பணியாளர் குடும்பம் மற்றும் 43 ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ரூ.26 லட்சத்து ஐம்பதாயிரம் மதிப்பில் நிதி உதவி நிர்வாக இயக்குர் தசரதன் வழங்கினார்.தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் தலைமையகத்தில் பணியின்போது இறந்த பணியாளர் குடும்பம் மற்றும் 43...
முசிறி சார்பு நீதிமன்ற நீதிபதிக்கு பிரிவுபசார விழா
முசிறி, ஜூலை 6: முசிறி சார்பு நீதிமன்ற நீதிபதியாக இரண்டு வருடத்திற்கு மேல் பணிபுரிந்து வந்த நீதிபதி ஜெயக்குமார் தற்போது சேலம் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவராக பணி மாறுதல் ஆனார். இவருக்கு முசிறி வழக்கறிஞர் சங்கம் சார்பில் பிரிவுபசார விழா சார்பு நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வழக்கறிஞர் சங்க தலைவர் மருதையா...
ரயில்வே ஊழியர் தற்கொலை
திருவெறும்பூர், ஜூலை 6: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி அண்ணா வளைவு பகுதியை சேர்ந்தவர் மாயவன். இவரது மகன் அழகேசன் (30). திருமணம் ஆகாத இவர் திருச்சி பொன்மலை ரயில்வே குட்ஷெட் யார்டு பிரிவில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்த அழகேசன்...
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை சார்பில் தொழில்நெறி விழிப்புணர்வு வார கொண்டாட்டம்
திருச்சி, ஜூலை 5: திருச்சி மாவட்ட வேலைவாய்ப்புதுறை வாயிலாக திருச்சி, புத்தூர் பார்வையற்றோருக்கான சிறப்பு பள்ளியில் வரும் 9ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில்நெறி வழிகாட்டும் மற்றும் திறன் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, திருச்சி இந்திரா காந்தி கல்லூரியில் வரும் 10ம் தேதி மகளிருக்கான தொழில்நெறி வழிகாட்டும் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி, வரும் 11ம்...
முசிறி ஜெசிஐ சார்பில் துப்புரவு பணியாளர்களுக்கு ஒலிபெருக்கி வழங்கல் பங்கேற்றவர்களுக்கு தலைவர் நன்றி தெரிவிப்பு
முசிறி, ஜூலை 5: முசிறி ஜெசிஐ தலைவர் வினோத்குமார் கூறியிருப்பதாவது, முசிறி கைகாட்டியில் துப்புரவு பணியாளர்கள் பயன்படுத்தும் கழிவுகளை அகற்றும் வாகனங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒலிபெருக்கிகளை JCI முசிறி சார்பில் வழங்கப்பட்டது.சிறப்பு அழைப்பாளர்களாக முசிறி நகர் மன்ற தலைவர் கலைச்செல்வி சிவகுமார், முசிறி காவல்துறை துணை ஆய்வாளர் கலைச்செல்வன், சுஜாதா, பாலன், சுகாதார...
முசிறியில் ஓரணியில் தமிழ்நாடு மக்களுடன் ஸ்டாலின் செயலி மூலம் புதிய உறுப்பினர் சேர்க்கை
முசிறி, ஜூலை 5: திருச்சி மாவட்டம், முசிறியில் வீடு , வீடாக சென்று அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ ஆகியோர் ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தின் கீழ் மக்களுடன் ஸ்டாலின் செயலி மூலம் வீட்டில் அமர்ந்து உறுப்பினர்களை சேர்த்தனர். அப்போது உறுப்பினர்கள் சேர்க்கைக்கான அடையாளத்தை வீட்டின் முகப்பில் ஓரணியில்...
ரங்கம் அரசு கல்லூரி முதல்வருக்கு பணி நிறைவு பாராட்டு விழா
திருச்சி: ரங்கம் அரசுக் கல்லூரி முதல்வருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது. திருச்சி ரங்கம் அரசினர் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் இரா.மலையாளமூர்த்தி பணி நிறைவு பாராட்டு விழா கல்லூரி வளாக கூட்டரங்கில் ஜூன் 30ம்தேதி (திங்கட்கிழமை) நடைபெற்றது. விழாவில் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் என...
துறையூர் தொகுதியில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை
துறையூர்: திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதியில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை துறையூர் நகராட்சி 16 வார்டில் உள்ள புதுத்தெருவில் வீடு வீடாக சென்று இணையதளம் வழியாக செல்போன் மூலம் உறுப்பினர் சேர்க்கையை எம்எல்ஏ ஸ்டாலின் குமார் தொடங்கி வைத்தார். பின்னர் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்ற வீடுகளில் ஓரணியில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது....
கஞ்சா விற்ற வாலிபர் கைது
திருச்சி: திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருச்சி பாலக்கரை போலீசார் முதலியார் சத்திரம் பகுதியில் கடந்த 1ம் தேதி வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் கஞ்சா விற்ற முதலியார் சத்திரம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த மணிகண்டன்(26) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து, 1.250 கிலோ கஞ்சாவை...