கல்லக்குடி பேரூராட்சியில் ரூ.41.50 லட்சத்தில் வடிகால்,சாலை,குடிநீர் வசதி
லால்குடி, ஜூலை 2: திருச்சி மாவட்டம் கல்லக்குடி பேரூராட்சியின் சாதாரண கூட்டம், கூட்டமன்ற வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு செயல் அலுவலர் அசோகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் பால்துரை கலந்து கொண்டு தலைமை தாங்கி பேசினார். தொடர்ந்து கல்லக்குடி பேரூராட்சியில் தூய்மை இந்தியா இயக்கத்திற்காக மீண்டும் மஞ்சப்பை தயாரிக்கும் இயந்திரம் வாங்குவதற்கும்,ரூ 5...
திருச்சி அருகே இரு தரப்பினர் மோதல்
திருச்சி,ஜூலை 2: திருச்சி அருகே இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் காயம் அடைந்தனர். திருச்சி வரகனேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சில வாலிபர்களுக்கும், பெரியார் நகரை சேர்ந்தவர்களுக்கும் ஏற்கனவே நடந்து முடிந்த கோவில் திருவிழா தொடர்பாக நேற்று இரவு திடீர் என பிரச்னை ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும்...
7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருச்சி, ஜூலை 1: அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு சார்பில் திருச்சி டிஎன்எஸ்டிசி மண்டல அலுவலகம் முன் நேற்று 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. திருச்சி, மண்டல தலைவர் சேகர் தலைமை வகித்தார், மாவட்ட தலைவர் சிராஜூதீன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். இதில் பணி ஓய்வு பெறுபவர்களை வெறும்...
கடன் பிரச்னையால் கார் டிரைவர் தற்கொலை
திருவெறும்பூர், ஜூலை 1: திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் மருதமலை மகன் ஐயப்பன் (23). கார் டிரைவர். திருமணமாகாத இவர், சொந்தமாக கார் வாங்கி வாடகைக்கு சவாரி ஓட்டி வந்தார். கடந்த சில மாதங்களாக அதிக நபர்களிடம் ரூ.10 லட்சம் அளவுக்கு கடன் வாங்கியிருந்தாராம். தொழில் சரியாக இல்லாத நிலையில், வாங்கிய...
திருவெறும்பூரில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பயிற்சி முகாம்
திருச்சி, ஜூலை 1: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட திருவெறும்பூர் தொகுதியில் காட்டூர் பெரியார் சிலை அருகில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையின் பயிற்சி முகாமினை தெற்கு மாவட்ட கழக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார். முகாமில் கலந்து கொண்ட BLA2 மற்றும் BDA உறுப்பினர்கள் திமுக...
மணப்பாறையில் மதுபாட்டில் பதுக்கி விற்ற இருவர் கைது
மணப்பாறை, ஜூன் 30: திருச்சி மாவட்டம் மணப்பாறையில், அரசு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். மணப்பாறை காவல் சரகத்தில் அரசு மதுபாட்டில்களை அனுமதியின்றி கள்ள சந்தையில் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலையடுத்து இன்ஸ்பெக்டர் சீனிபாபு தலைமையிலான போலீசார் நேற்று தணிக்கையில் ஈடுபாட்டிருந்தனர். அப்போது,...
புள்ளம்பாடி அடுத்த ஆலம்பாக்கம் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
லால்குடி, ஜூன் 30: திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியை அடுத்த ஆலம்பாக்கம் கிராமத்தில் மெஞ்ஞானவிநாயகர், நாகநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் கொள்ளிடம் ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து தொடர்ந்து மங்கள இசை, விக்னேஸ்வரபூஜை, முதல் காலை இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை கடம் புறப்பாடு செய்து...
உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோயிலில் உதங்க மகரிஷி உற்சவ விழா
திருச்சி, ஜூன் 30: திருச்சி, உறையூர் பகுதியில் உள்ள காந்திமதி, பஞ்சவர்ண சுவாமி கோயிலில் எழுந்தருளி உள்ள உதங்க மகரிஷியின் 19வது உற்சவ விழா நேற்று நடந்தது. உறையூர், காந்திமதி, பஞ்சவர்ண சுவாமி கோயிலில் எழுந்தருளியுள்ள உதங்க மகரிஷி 19ம் ஆண்டு உற்சவ விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு சுவாமி மற்றும்...
திருச்சி மாநகராட்சி புதிய ஆணையர் பொறுப்பேற்பு
திருச்சி, ஜூன் 28: திருச்சி மாநகராட்சியின் ஆணையராக மதுபாலன் நேற்று பொறுப்பேற்றார். தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய மதுபாலன், திருச்சி மாநகராட்சி ஆணையராக பணி மாறுதல் செய்து அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து அரசு உத்தரவின்படி திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று மதுபாலன் ஆணையராக பொறுப்பேற்றார். மேலும் புதியதாக பொறுப்பேற்ற ஆணையர் திருச்சி மாநகர மக்களுக்கான...