கொள்ளிடம் பகுதியில் 75 கிலோ குட்கா கடத்தல்
திருச்சி, நவ. 6: திருச்சியில் 75 கிலோ குட்கா கடந்திய நபரை கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்துள்ளனர். திருச்சி மாவட்டம் கொள்ளிடம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தாளக்குடி பகுதியில் குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் வீரபாண்டியன் மற்றும் போலீசார், கொள்ளிடம்-லால்குடி சாலையில்...
காந்தி மார்க்கெட் அருகே டூவீலர் ஓட்டி வந்த சிறுவன்: தந்தை கைது
திருச்சி, நவ. 5: திருச்சி காந்தி மார்க்கெட் வளைவு அருகே போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தனரத்தினம் நகர் 5வது தெருவை சேர்ந்த முகமது நிஜாமுதீன்(45) என்பவரன் 17 வயது மகன் டூவிலர் ஓட்டி வந்தார். இதனை கண்ட போலீசார் சிறுவன் ஓட்டி வந்த வாகனத்தை நிறுத்தி...
மண்ணச்சநல்லூர் காவல் நிலையம் முன்பு புதிய மின்கம்பங்கள் அமைத்து டிரான்ஸ்பார்மர் சீரமைப்பு
சமயபுரம், நவ.5: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் காவல்நிலையம் நுழைவு வாயில் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் உயர் மின் உற்ப த்தி டிரான்ஸ்பர்மர் உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து அப்பகுதியில் உள்ள ரைஸ்மில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் விநியோகம் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த டிரான்ஸ்பார்மரின் கம்பங்களில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து, கம்பிகள் வெளியே...
துறையூர் சட்டமன்ற தொகுதிக்கான திமுக பூத் ஏஜெண்ட் பயிற்சி கூட்டம்
துறையூர், நவ. 5: துறையூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக வாக்குச்சாவடி நிலை முகவர்கள், டிஜிட்டல் பூத் ஏஜெண்டுகளுக்கான பயிற்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்கள், டிஜிட்டல் பூத் ஏஜெண்ட் பயிற்சி விளக்கம் கூட்டம் துறையூர் சிவாலயா திருமண மண்டபத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் எம்எல்ஏ...
திருவெறும்பூர் அருகே லாரி மீது அரசு பேருந்து மோதி டிரைவர் படுகாயம்
திருவெறும்பூர், நவ.5: திருவெறும்பூர் கணேசா மேம்பாலத்தில் செங்கல் லாரி மீது அரசு டவுன் பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் டிரைவர் படுகாயம் அடைந்தார். திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து துவாக்குடிக்கு, அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது. அரசு பஸ்சை நம்பர் ஒன் டோல்கேட் மாருதி நகர் பகுதியை சேர்ந்த மதுரை வீரன் என்பவரின்...
விபத்து மண்டல பகுதியில் பேரிகார்டு
திருச்சி, நவ.1:திருச்சி மாநகர பகுதியில் விபத்து நட க்கும் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள பேரிகார்டுகளை ஆய்வு செய்த மாநகர கமிஷனர் காமினி, போ க்குவரத்து காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் திருச்சி மாநகரப் பகுதியில் அமைந்துள்ள பால்பண்ணை முதல் காட்டூர் பாப்பாக்குறிச்சி வரை அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் இப்பகுதியில் ஏற்படும்...
திருச்சி எ.புதூரில் ஆடு திருட முயன்ற 2 வாலிபர் கைது
திருச்சி, நவ.1: திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் ஆடுகளை திருட முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி எடமலைப்பட்டி புதூர் மேலவடக்கு தெருவை சேர்ந்தவர் தருண்குமார்(22). இவர் ஆடு, மாடுகளை வளர்த்து வந்தார். அக்.30ம் தேதி மதியம் எடமலைப்பட்டி புதூர் கீழ வடக்கு வீதி அருகே உள்ள காலியான இடத்தில் இவரது ஆடு,...
லால்குடி அருகே மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு
லால்குடி, நவ.1: திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நடராஜபுரம் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் மணி, ஜோசியர். இவரது மனைவி லட்சுமி (53). இவர்களுக்கு இரண்டு மகள்கள். இந்நிலையில் கடந்த 29ம் தேதி மணி தனது வீட்டின் முன்பு இருந்த வேப்ப மரத்தை வெட்டியுள்ளார். அப்போது, மரத்தின் அருகே மின்கம்பத்தில் இருந்த ஸ்டே கம்பி அருந்து விழுந்தது....
தொட்டியம் பாசன வாய்க்காலில் ஆகாயத்தாமரை செடிகள் அகற்றம்
தொட்டியம், அக். 31: தொட்டியத்தில் பாசன வாய்க்காலில் மண்டி இருந்த ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என விவசாயிகளின் கோரிக்கை தினகரன் நாளிதழில் வெளியான நிலையில் அதனை சுத்தம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தொட்டியம் பண்ணை விடு அருகே பாசன வாய்க்கால் செல்கிறது. தற்போது சாகுபடி நடைபெற்று வரும் நிலையில் வாய்க்காலில் செல்லும் தண்ணீர் கடைமடை...