காரில் ரீல்ஸ் மோகம் காய்த்து தொங்கும் பப்பாளிக்காய் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருச்சி, ஜூலை 25: அஞ்சல்துறை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் தபால்காரர் மற்றும் பல்திறன் ஊழியர்கள் சங்கம் சார்பில் திருச்சி கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கங்களுடன் ஆலோசிக்காமல், தொடங்கியுள்ள ஐடிசி மையங்களை உடனடியாக மூட வேண்டும், திருச்சி...
திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் யோகா பயிற்சி
திருச்சி, ஜூலை 25: திருச்சி மாவட்ட மைய நூலகத்தில், வாசகர் வட்டம் மற்றும் நூலகம் சார்பில் யோகா பயிற்சி நேற்று அளிக்கப்பட்டது. யோகா ஆசிரியர்கள் தனசேகர், ரேணுகாதேவி ஆகியோர் கலந்துகொண்டு அடிப்படை யோகா பயிற்சி அளித்தனர். பயிற்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். யோகா பயிற்சி வாரம்தோறும் வியாழக்கிழமைகளில் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறும். அபோல் வரும் ஞாயிறு...
கார் மோதி வாலிபர் இறந்த வழக்கு பெரம்பலூர் டிரைவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை
திருச்சி, ஜூலை 25: கார் மோதி வாலிபர் இறந்தது தொடர்பான வழக்கில் பெரம்பலூர் டிரைவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி திருச்சி மாஜிஸ்திரேட் கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. திருச்சி மாவட்டம் இனாம் சமயபுரத்தை சேர்ந்தவர் கார்த்திக் (25). இவர் கடந்த 9.9.18 அன்று தன் தம்பி அஜய் (21) என்பவருடன் டீ குடிப்பதற்காக திருச்சி...
மலைக்கோட்டையில் ஆடிப்பூர விழா; ரிஷப வாகனத்தில் அம்பாள் புறப்பாடு
திருச்சி, ஜூலை 24: திருச்சி மலைக்கோட்டை மட்டுவார் குழலம்மை, தாயுமான சுவாமி கோயில் ஆடி பூரம் திருவிழாவின் 5ம் திருநாளான நேற்று காலை அம்மன் கேடயத்திலும், மாலையில் ரிஷப வாகனத்திலும் எழுந்தருளினார். திருச்சி மலைக்கோட்டை மட்டுவார்குழலம்மை, தாயுமான சுவாமி கோயில் ஆடிபூரம் விழா நடைபெற்று வருகிறது. விழாவின் 5ம் திருநாளான 23ம் தேதி காலை அம்மன்...
மண்ணச்சநல்லூர் அருகே வாணவெடி வெடித்து சிதறி 2 வயது சிறுமி பரிதாப சாவு
சமயபுரம், ஜூலை 24: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே மூவராயன்பாளையம் பகுதியில் உள்ள நல்லாயி அம்மன் கோயில் கும்பாபிஷேம் அண்மையில் நடைபெற்றது. விழாவையொட்டி 48வது நாள் மண்டல பூஜையை முன்னிட்டு கிராம மக்கள் புனிதநீர் எடுப்பதற்காக முக்கொம்பு காவிரி ஆற்றிற்கு மேளதாளத்துடன் சென்றனர். ஆற்றில் இருந்து பக்தர்கள் குடங்களில் புனிதநீர் எடுத்துக்கொண்டு புறப்பட தயாராகினர். அப்போது...
திருவெறும்பூர் அடுத்த சூரியூரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் நலத்திட்ட உதவி
திருவெறும்பூர், ஜூலை 24: திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூர் ஊராட்சியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தமிழக முழுவதும் பத்தாயிரம் இடங்களில் நடத்துவதற்கு முடிவு செய்து நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக...
ஆகஸ்ட், ெசப்டம்பரில் நடைபெற உள்ளது முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு விண்ணப்பிக்கலாம் பிரதிநிதிகளுடனான விளக்க கூட்டத்தில் கலெக்டர் தகவல்
திருச்சி, ஜூலை 23: முதலமைச்சர் கோப்பை வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் தொடங்க உள்ளது, போட்டியில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2025-26 என்ற பெயாில் மாநிலம் முழுவதும் வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக, பொதுப்பிரிவு, பள்ளி,...
உள்ளாட்சி அமைப்புகளில் நியமன அடிப்படையில் மாற்றுத்திறனாளிகள் உறுப்பினர் ேசர்க்கைக்கு அவகாசம் நீட்டிப்பு
திருச்சி, ஜூலை 23: மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் நியமன அடிப்படையில் உறுப்பினராவதற்கான பிரதிநிதிகளுடனான விளக்க கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. உள்ளாட்சி அமைப்புகளில் நியமன அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன உறுப்பினா்கள் வழங்குவது தொடர்பாக மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பிரநிதிகளுடனான விளக்கக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்...
மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் குருப்-II, IIA தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு வேலை நாடுநர்களுக்கு கலெக்டர் அழைப்பு
திருச்சி, ஜூலை 22: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையம் குருப்-II மற்றும் IIA தேர்வுக்கான இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் துவங்கவுள்ளதால், இத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இப்பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெற மாவ ட்ட கலெக்டர் சரவணன் அழைப்பு விடுத்துள்ளார். திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும்...