முசிறி வட்டத்தில் காவிரி கரையோரங்களில் பேரிடர் மீட்பு குழு முகாம்

  முசிறி, ஜூலை 28: முசிறி தாலுகாவில் பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டு காவிரி கரை ஓரங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கர்நாடகாவில் தற்போது பெருமழை பெய்து வருகிறது அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் உள்ளிட்ட அணைகள் நிரம்பியது. இதன் காரணமாக அங்கு வரும் தண்ணீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணையில்...

திருச்சி மாவட்ட யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி

By Ranjith
27 Jul 2025

  திருச்சி, ஜூலை 28: திருச்சி மாவட்ட யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி திருச்சி, தில்லைநகரில் நேற்று நடந்தது. இந்த போட்டிகளில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டிகள் 3 வயதுக்கு மேல் 45 வயதுக்கு உள்பட்டவர்களுக்கு நடத்தப்பட்டது. போட்டிகளை யோகாசன சங்க தலைவர் டாக்டர் செந்தில்குமார், தேசிய யோகாசன நடுவர்...

மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி எம்பி துரை வைகோ கலெக்டருடன் நேரில் சந்திப்பு

By Suresh
26 Jul 2025

திருச்சி, ஜூலை 26: திருச்சி எம்பி துரை வைகோ, நேற்று காலை திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணனை நேரில் சந்தித்து, தன் தொகுதி மக்களின் முக்கிய நான்கு கோரிக்கைகள் குறித்து விளக்கிக் கூறினார். திருச்சி எம்பி துரை வைகோ நேற்று காலை திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணனை கலெக்டர் அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது தன்...

திருச்சி பகுதியில் 29ம் தேதி மின்நிறுத்தம்

By Suresh
26 Jul 2025

திருச்சி, ஜூலை 26: திருச்சி நீதிமன்ற வளாகம் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் 29ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் புதுரெட்டித்தெரு, பொன்விழா நகர், கிருஷ்ணன் கோவில் தெரு, பக்காளி தெரு, மத்திய பேருந்து நிலையம், கண்டித்தெரு, பாரதிதாசன் சாலை, ராயல் சாலை, அலெக்சாண்டிரியா சாலை, எஸ்பிஐ காலனி,...

வீட்டின் பூட்டை உடைத்து 16.7 பவுன் தங்க நகை கொள்ளை

By Suresh
26 Jul 2025

திருச்சி, ஜூலை 26: திருச்சி புத்துார் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 16.7 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திருச்சி புத்தூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் குழுமாயி (60). இவர் தனது வீட்டை பூட்டி விட்டு கும்பகோணத்திற்கு சென்று உள்ளார். பின்னர் திருச்சிக்கு திரும்பியவர் ஜூலை 29ம் தேதி வீட்டிற்கு...

காரில் ரீல்ஸ் மோகம் காய்த்து தொங்கும் பப்பாளிக்காய் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

By MuthuKumar
24 Jul 2025

திருச்சி, ஜூலை 25: அஞ்சல்துறை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் தபால்காரர் மற்றும் பல்திறன் ஊழியர்கள் சங்கம் சார்பில் திருச்சி கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கங்களுடன் ஆலோசிக்காமல், தொடங்கியுள்ள ஐடிசி மையங்களை உடனடியாக மூட வேண்டும், திருச்சி...

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் யோகா பயிற்சி

By MuthuKumar
24 Jul 2025

திருச்சி, ஜூலை 25: திருச்சி மாவட்ட மைய நூலகத்தில், வாசகர் வட்டம் மற்றும் நூலகம் சார்பில் யோகா பயிற்சி நேற்று அளிக்கப்பட்டது. யோகா ஆசிரியர்கள் தனசேகர், ரேணுகாதேவி ஆகியோர் கலந்துகொண்டு அடிப்படை யோகா பயிற்சி அளித்தனர். பயிற்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். யோகா பயிற்சி வாரம்தோறும் வியாழக்கிழமைகளில் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறும். அபோல் வரும் ஞாயிறு...

கார் மோதி வாலிபர் இறந்த வழக்கு பெரம்பலூர் டிரைவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை

By MuthuKumar
24 Jul 2025

திருச்சி, ஜூலை 25: கார் மோதி வாலிபர் இறந்தது தொடர்பான வழக்கில் பெரம்பலூர் டிரைவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி திருச்சி மாஜிஸ்திரேட் கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. திருச்சி மாவட்டம் இனாம் சமயபுரத்தை சேர்ந்தவர் கார்த்திக் (25). இவர் கடந்த 9.9.18 அன்று தன் தம்பி அஜய் (21) என்பவருடன் டீ குடிப்பதற்காக திருச்சி...

மலைக்கோட்டையில் ஆடிப்பூர விழா; ரிஷப வாகனத்தில் அம்பாள் புறப்பாடு

By MuthuKumar
23 Jul 2025

திருச்சி, ஜூலை 24: திருச்சி மலைக்கோட்டை மட்டுவார் குழலம்மை, தாயுமான சுவாமி கோயில் ஆடி பூரம் திருவிழாவின் 5ம் திருநாளான நேற்று காலை அம்மன் கேடயத்திலும், மாலையில் ரிஷப வாகனத்திலும் எழுந்தருளினார். திருச்சி மலைக்கோட்டை மட்டுவார்குழலம்மை, தாயுமான சுவாமி கோயில் ஆடிபூரம் விழா நடைபெற்று வருகிறது. விழாவின் 5ம் திருநாளான 23ம் தேதி காலை அம்மன்...

மண்ணச்சநல்லூர் அருகே வாணவெடி வெடித்து சிதறி 2 வயது சிறுமி பரிதாப சாவு

By MuthuKumar
23 Jul 2025

சமயபுரம், ஜூலை 24: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே மூவராயன்பாளையம் பகுதியில் உள்ள நல்லாயி அம்மன் கோயில் கும்பாபிஷேம் அண்மையில் நடைபெற்றது. விழாவையொட்டி 48வது நாள் மண்டல பூஜையை முன்னிட்டு கிராம மக்கள் புனிதநீர் எடுப்பதற்காக முக்கொம்பு காவிரி ஆற்றிற்கு மேளதாளத்துடன் சென்றனர். ஆற்றில் இருந்து பக்தர்கள் குடங்களில் புனிதநீர் எடுத்துக்கொண்டு புறப்பட தயாராகினர். அப்போது...