வீடு புகுந்து திருடிய வாலிபருக்கு 3 மாதம் சிறை
திருச்சி, நவ.26: திருச்சியில் வீடு புகுந்து திருடிய வாலிபருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதித்து ரங்கம் மாஜிஸ்திரேட் நேற்று தீர்ப்பளித்தார். திருச்சி ரங்கம் பி-கிளாஸ், வடக்கு தெருவை சேர்ந்தவர் நீலாவதி. இவர் கடந்த 25.8.23 அன்று அதிகாலை தன் குடும்பத்தாருடன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவரது கணவர் வீட்டின் பின்பக்க கதவை சாதாரணமாக மூடிவைத்துவிட்டு...
புதிய அனுபவ நிகழ்ச்சிக்காக விமானத்தில் சென்னை சென்ற 36 மாற்றுத்திறன் மாணவர்கள்
திருச்சி, நவ.26: புதிய அனுபவ நிகழ்ச்சிக்காக தஞ்சையை சேர்ந்த 36 மாற்றுத்திறன் மாணவர்களை திருச்சி கலெக்டர் சரவணன் வரவேற்று சென்னைக்கு விமானம் மூலம் அனுப்பி வைத்தார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் வரும் டிச.3ம்தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு புதிய அனுபவம் அளிக்க சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும். இந்த ஆண்டு...
இன்று மின்நிறுத்தம்
துறையூர், நவ.25: துறையூர் மின் கோட்டத்துக்கு உட்பட்ட துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் இன்று (நவ.25) காலை 9.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை மேலகொத்தம்பட்டி துணைமின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான கண்ணனூர், கண்ணனூர்பாளையம், சின்னசேலம்பட்டி, வடக்குவெளி, பொன்னுசங்கம்பட்டி, உள்ளூர், வேலாயுதம்பாளையம், ஆகிய...
மனைவி பிரிந்து சென்ற வேதனை: கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை
சமயபுரம், நவ.25: திருப்பைஞ்ஞீலி அருகே மனைவியை பிரிந்து ெசன்ற வேதனையில் கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருப்பைஞ்ஞீலி அடுத்த வாழ்மால்பாளையம் மேலுரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(44). கொத்தனார். இவருக்கு துறையூர் தாலுகா எரகுடி கிராமத்தை சேர்ந்த சம்பூரணம் (40) என்ற பெண்ணுடன் திருமணமாகி சரவணன், சசிகுமார் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த...
மாநில ஜூனியர் பெண்கள் கபடி போட்டி: திருநெல்வேலியை வீழ்த்தியது ஈரோடு அணி
திருச்சி, நவ.25: திருச்சியில் நடந்த தமிழ்நாடு மாநில ஜூனியர் பெண்கள் சாம்பியன்ஸ் கபடி போட்டியில் ஈரோடு அணி முதல் பரிசை வென்றது. தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் திருச்சி மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் இணைந்து நடத்தும் தமிழ்நாடு மாநில ஜூனியர் பெண்கள் 51வது சாம்பியன்ஸ் கபடி போட்டி, திருச்சி இந்திரா கணேசன்...
புத்தாநத்தம் அருகே சூதாடிய 4 பேர் கைது
மணப்பாறை, நவ.22:மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் காவல் சரகத்தில் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் நேற்று போலீசார் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, கண்ணூத்து கிராமம் கருப்பகோயில் மலைப்பகுதியில் லங்கர் கட்டை வைத்து சூதாட்டம் நடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள், கண்ணூத்து கிராமத்தை சேர்ந்த புரவி மகன் சேகர்(32), தாதகவுண்டம்பட்டியை...
தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 50 பேருக்கு பணி
திருச்சி, நவ. 22: திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக நேற்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் 32 நிறுவனங்கள் பங்கேற்றது. இதில் 150ம் மேற்பட்ட வேலை நாடுனர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு நிறுவனங்களில் நேர்காணல் நடைபெற்றதில் 50ம் மேற்பட்ட வேலை நாடுனர்கள் பணி...
மத்திய, மாவட்ட வங்கிகள் கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர் பணி
திருச்சி, நவ.22: திருச்சி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அறிவிப்பு கடிதத்தில் திருச்சி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் காலியாகவுள்ள உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் எழுத்து தேர்வுக்கான கட்டணமில்லா சிறப்பு பயிற்சி வகுப்புகள், திருச்சி மாவட்ட...
அரசு ஓய்வு ஊழியர்களின் மாநாடு
திருச்சி, நவ. 20: தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் போராட்ட ஆயத்த மாநாடு திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. மாநாட்டுக்கு மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகுத்தார். மாநில துணைத்தலைவர்கள் நடராஜன், எட்டியப்பன், வேலாயுதம், மற்றும் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட...