திருவெறும்பூரில் மதுபாட்டில் பதுக்கி விற்ற முதியவர் கைது
திருவெறும்பூர், ஆக.3: திருவெறும்பூரில் சட்டவிரோதமாக கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு அரசு மதுபானங்களை விற்றவரை எஸ்பி தனிப்படை போலீசார் கைது செய்ததோடு, அவரிடமிருந்து 171 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். திருச்சி எஸ் பி செல்வநாகரத்தினம் தனிப்படை எஸ்ஐ வரதராஜன் பெருமாளுக்கு திருவெறும்பூரில் சட்டவிரோதமாக அரசு மதுபானம் கள்ள சந்தையில் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக...
பேக்கரி இயந்திரம் வாங்கி தருவதாக ரூ.70 ஆயிரம் மோசடியில் ஈடுபட்ட வாலிபர் கைது
திருச்சி, ஆக.2: பேக்கரி இயந்திரம் வாங்கி தருவதாக கூறி ரூ.70 ஆயிரம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை கண்ணுடையான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிக்கந்தர் பாஷா (39). இவர் சென்னையிலுள்ள பேக்கரி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருச்சி கம்பரசம்பேட்டை சேர்ந்த ஒரு நபர் வாட்ஸ்அப் குழு...
இ.வெள்ளனூர் - புஞ்சை சங்கேந்தி தார்ச்சாலை தடுப்பு சுவர் பணி மும்முரம்
லால்குடி, ஆக். 2: லால்குடி அருகே இவெள்ளனூர் - புஞ்சை சங்கேந்தி தார் சாலை மற்றும் தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகளை நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் இளம்வழுதி ஆய்வு மேற்கொண்டார். திருச்சி மாவட்டம் திருச்சி - அரியலூர் சாலை இ.வெள்ளனூர் ஊராட்சியிலிருந்து புஞ்சைசங்கேந்தி செல்லும் சாலை யில் தார்ச்சாலையை அகலப்படுத்தி விரிவாக்கம் செய்தும்...
போக்சோ வழக்கில் கைதான முதியவர் மீது குண்டாஸ் பாய்ந்தது
திருச்சி, ஆக. 2: சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக மண்ணச்சநல்லூர் நொச்சியம் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் (60) என்பவர் மீது ஜூலை.10ம் தேதி திருச்சி ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்து வரும் ராமலிங்கம் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க திருச்சி...
மண்ணச்சநல்லூர் புதிய தாசில்தார் பொறுப்பேற்பு
சமயபுரம், ஆக.1: மண்ணச்சநல்லூர் புதிய தாசில்தாராக ராஜேஸ்கண்ணன் பொறுப்பேற்றுக் கொண்டார். மண்ணச்சநல்லூர் தாசில்தாராக பணியாற்றி வந்த பழனிவேல் துறையூர் பகுதிக்கு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து திருச்சி மேற்கு பகுதியில் வட்ட வழங்கல் அதிகாரியாக பணியாற்றி வந்த ராஜேஷ்கண்ணன் மண்ணச்சநல்லூர் தாசில்தாராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து நேற்று அவர் பொறுப்பேற்றுக்...
திருச்சியில் கஞ்சா விற்ற மூவர் கைது
திருச்சி, ஆக.1: திருச்சியில் கஞ்சா விற்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். திருச்சி, அரியமங்கலம், எஸ்ஐடி மயானம் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக அரியமங்கலம் போலீசாருக்கு கடந்த 30ம் தேதி தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை நடத்தினர். அப்போது அங்கு சந்தேகிக்கும் வகையில் நின்ற வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்....
ஆணவ படுகொலை கண்டித்து சட்ட கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
திருச்சி, ஆக.1: நெல்லை மாவட்ட ஆணவ படுகொலையை கண்டித்து சட்ட கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நெல்லை மாவட்டம் கவின் என்ற இன்ஜினியர் காதல் விவகாரம் தொடர்பாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த ஆணவ படுகொலை தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வளைகளை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவத்தை கண்டித்தும், இதில் ஈடுபட்டவர்கள் மீது உரிய...
உப்பிலியபுரத்தில் பணம் மோசடி: வாலிபர் கைது
திருச்சி, ஜூலை 31: துறையூர் அருகே உப்பிலியபுரத்தை சேர்ந்த ராமசாமி மகன் ஜெய்சரண்(25). இவர் ரஷ்ய நாட்டில் உள்ள யுனிவர்சிட்டியில் படித்து கொண்டு பகுதி நேர வேலையாக ஆன்லைன் மூலம் பணம் பரிவர்த்தனையும் செய்து வந்தாராம்.ஆந்திர மாநிலம் கிருஷ்ய்யா மாவட்டம், கங்காவரம் பகுதியை சேர்ந்த பேரய்யா மகன் ரவிகுமாரின் மகள் ரஷ்யா நாட்டில் எம்பிபிஎஸ்...
திருச்சி அரசு பஸ் மோதி மூதாட்டி பலி
திருச்சி, ஜூலை 31: திருச்சி தென்னூர் அருகே அரசு பேருந்து மோதி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். திருச்சி தென்னூர் பாரதி நகரை சேர்ந்தவர் பழனியம்மாள் (65) இவர் ஜூலை 29ம் தேதி மேலப்புலிவார் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று சாலையை கடக்க முயன்ற போது ஸ்ரீரங்கத்தில் இருந்து மத்திய பேருந்து நிலையத்திற்கு...