தூத்துக்குடியில் குறைதீர் கூட்டத்தில் 545 மனுக்கள் குவிந்தது
தூத்துக்குடி, ஜூன் 24: தூத்துக்குடியில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 545 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித் தொகை,...
பெரியதாழையில் ரூ.62 லட்சத்தில் குடிநீர் விரிவாக்கப் பணி, நீர்தேக்கதொட்டிக்கு அடிக்கல்
சாத்தான்குளம், ஜூன் 23: பெரியதாழையில் ரூ.62 லட்சத்தில் குடிநீர் விரிவாக்கப்பணி மற்றும் தரைநிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். சாத்தான்குளம் ஒன்றியம் பெரியதாழையில் மாவட்ட ஊராட்சி நிதி ரூ.50.60 லட்சத்தில் குடிநீர் வசதிக்காக வைரவன்தருவைகுளத்தில் புதிய ஆழ்துளை கிணறு அமைத்து பைப் லைன் விரிவாக்கம் செய்யும் பணி தொடக்க...
செட்டியாபத்து கோயில் முன் ஆபத்தான மின்கம்பம்
உடன்குடி, ஜூன் 23: செட்டியாபத்து கோயில் முன்பு ஆபத்தான மின்கம்பத்தை உடனே அப்புறபடுத்த வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உடன்குடி அருகேயுள்ள செட்டியாபத்து கிராமத்தில் உள்ள ஐந்து வீட்டு சுவாமி கோயில் மிகவும் புகழ் பெற்றதாகும். கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் பல்லாயிரகணக்கான மக்கள் குடும்பத்துடன் வந்து...
ஆறுமுகநேரி சிவன் கோவிலில் ஆனி உத்திர பெருந்திருவிழா கொடியேற்றம்
ஆறுமுகநேரி, ஜூன் 23: ஆறுமுகநேரி சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாதசுவாமி கோயிலில் ஆனி உத்திரப் பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைமுன்னிட்டு நேற்று முன்தினம் கணபதி ஹோமம், மூஷிக வாகனத்தில் விநாயகர் எழுந்தருளல், மாலையில் நால்வர் சுவாமிகளின் புறப்பாடு, தேவார திருமுறை பாராயணனம், காப்பு கட்டுதல் நடந்தது. நேற்று கொடியேற்றத்தை தொடர்ந்து அதிகாலை கும்ப பூஜை...
கலைஞர் பிறந்த நாளையொட்டி தூத்துக்குடியில் ரத்த தான முகாம் அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்
தூத்துக்குடி, ஜூன் 20: முன்னாள் முதல்வர் கலைஞரின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர திமுக சார்பில் காமராஜர் சாலையில் உள்ள மண்டபத்தில் ரத்த தான முகாம் நடைபெற்றது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன், ரத்த தான முகாமை தொடங்கி வைத்தார். திமுக...
டாஸ்மாக்கில் தகராறு: இருவர் மீது தாக்குதல்
சாத்தான்குளம், ஜூன் 20: சாத்தான்குளம் அருகே உள்ள செங்குளம் அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மணி (32). இவரும், இவரது நண்பர் மாமுனியும் கடந்த 17ம் தேதி இரவு 9 மணிக்கு பேய்க்குளம் கலைஞர் நகரில் உள்ள மதுக்கடைக்கு சென்றார். அங்கு மதுபான விலையில் வித்தியாசம் இருந்ததால் மாமுனி, அதுகுறித்து கடை விற்பனையாளரிடம் கேட்டுள்ளார். அப்போது...
வாலிபரை வாளால் தாக்கி கொல்ல முயற்சி 4 பேர் கைது
சாத்தான்குளம், ஜூன் 20: சாத்தான்குளம் அடுத்த பெரியதாழை முத்தம்மாள்புரத்தை சேர்ந்த குமார் மகன் செல்வசூர்யா (23). திசையன்விளையில் உள்ள கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடித்து வீட்டிற்கு அரசூர் பனைவிளை வழியாக பைக்கில் சென்றார். அப்போது பின்னால் ஒரே பைக்கில் வந்த மூவர், அதிசயபுரத்தில் அவரை வழிமறித்து பைக் சாவியை...
முதலாம் ஆண்டு மாணவர்கள், பெற்றோர் கலந்தாய்வு கூடுகை
நாசரேத், ஜூன் 19: நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்தாய்வு கூடுகை நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் ஜீவி எஸ்தர் ரத்தினகுமாரி தலைமை வகித்து மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். தமிழ்த்துறை தலைவர் பெரியநாயகம் ஜெயராஜ் அறிமுக உரையாற்றினார். கல்லூரி பாடகர் குழுவினர் இறைவணக்க பாடல் பாடினர். ஆங்கிலத் துறை தலைவர்...
காயல்பட்டினத்தில் நண்பரை தாக்கிய 4 பேர் கைது
ஆறுமுகநேரி, ஜூன் 19: காயல்பட்டினம் காட்டு தைக்கா தெருவை சேர்ந்த போண்டா சதாம் என்ற சதாம் உசேன்(27). இவர், நண்பர்கள் காயல்பட்டினம் மங்கள விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த அபுபக்கர் சித்திக்(20), எல்.ஆர் நகர் செல்வகுமார் என்ற காக்கா செல்வம்(21), தனராஜ்(21), மேல நெசவு தெரு மன்சூர்(34) ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு காயல்பட்டினம் அருகே...