கொங்கராயகுறிச்சி கேம்பிரிட்ஜ் பள்ளி மாணவர் மாநில போட்டிக்கு தகுதி
நெல்லை, அக். 26: மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற கொங்கராயக்குறிச்சி கேம்பிரிட்ஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் மாநில போட்டிக்கு தகுதிபெற்றார். தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் 2025- 26ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி கடந்த வாரம் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில்...
உடன்குடி அருகே சாலையோரம் திடீரென இறந்த பசு
உடன்குடி,அக்.26: உடன்குடி அருகே சாலையோரம் இறந்துகிடந்த பசுவை பார்த்து வாயில்லா ஜீவன்கள் கண்ணீர் விட்டு தவித்த காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது. உடன்குடி பகுதியில் வீடுகளில் மாடு வளர்க்கும் பலர், மேய்ச்சலுக்காக காலையில் மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பிவைப்பதும் மாலையில் அம்மாடுகள் வீடுகள் திரும்புவதும் வழக்கம். இந்நிலையில் உடன்குடி- கொட்டங்காடு பிரிவு ரோட்டிலிருந்து குலசேகரன்பட்டினம் செல்லும் பிரிவு...
கோவில்பட்டியில் நெல்லை டிஐஜி ஆய்வு
கோவில்பட்டி, அக்.26: கோவில்பட்டியில் முதல்வர் வருகை பாதுகாப்பு ஏற்பாடுகளை நெல்லை சரக டிஐஜி சந்தோஷ் ஹாதிமணி ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டிக்கு இம்மாதம் அக்.28ம் தேதி வருகைதரும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இங்கு புதிதாகக் கட்டப்பட்டுள்ள நகரதிமுக அலுவலகம் மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞர் உருவச்சிலையை திறந்துவைக்கிறார். இதைத்தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை பகுதியில்...
நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத வாலிபர் கைது
சாத்தான்குளம், அக்.25: மெஞ்ஞானபுரம் அருகே உள்ள மாநாடு கிராமத்தை சேர்ந்தவர் அழகேசன் மகன் ரஞ்சித்(23). இவர், கடந்த 2020ம் ஆண்டு சாத்தான்குளம் பகுதியில் மணல் கடத்தியதாக போலீசார் கைது செய்து சாத்தான்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு விசாரணைக்கு ரஞ்சித் ஆஜராகாமல் இருந்ததால் நீதிமன்றம் அவருக்கு பிடிவாரன்டு பிறப்பித்து உத்தரவிட்டிருந்தது. அதன் பேரில் சாத்தான்குளம் உதவி...
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி,அக்.25: தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 70 வயது ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத உயர்வு வழங்க வேண்டும். அங்கன்வாடி பணியாளர், சத்துணவுப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும். மருத்துவப்படி ரூ.1000 வழங்க வேண்டும். ஓய்வூதியர்களை பாதிக்கும்...
சிவ பூஜை செய்து வழிபாடு
திருச்செந்தூர், அக். 25: திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் பசுமை சித்தர் சிவ பூஜை செய்து வழிபட்டார். தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்தவர் பசுமை சித்தர். ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழாவிற்கு திருச்செந்தூர் வந்து 6 நாட்களும் விரதம் மேற்கொண்டு உலக மக்கள் அனைவரும் சுபிட்சமாக வாழ வேண்டியும், உலக மக்களின் நன்மைக்காக கடற்கரையில் மணலால்...
தூத்துக்குடி சிலுவைபட்டி விநாயகர் கோயிலில் பூட்டை உடைத்து பொருட்கள் திருடிய வாலிபர்கள் மூவர் கைது
தூத்துக்குடி, அக். 24: தூத்துக்குடி தாளமுத்துநகர் சிலுவைப்பட்டி பகுதியில் உள்ள ஒரு விநாயகர் கோயிலில் உள்ள பூட்டை கடந்த அக்.18ம் தேதி மர்மநபர்கள் உடைத்தனர். மேலும் அக்கோயிலில் உள்ள வெண்கல மணி, கோயில் குத்துவிளக்கு, வெண்கல தட்டு உள்ளிட்ட ரூ.20 ஆயிரம் மதிப்பிலான பூஜை பொருட்களை திருடிச்சென்றனர். பின்னர் இதுகுறித்து கோயில் தர்மகர்த்தா அளித்த புகாரின்...
பஸ்கள் நின்றுசெல்ல வலியுறுத்தி பொட்டலூரணியில் சாலை மறியலில் ஈடுபட்ட 12 பேர் சிறையில் அடைப்பு
தூத்துக்குடி, அக். 24: தூத்துக்குடி- நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பொட்டலூரணி கிராமத்தில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும். பொட்டலூரணி அருகே செயல்படும் மீன் கழிவு ஆலையை மூட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் நேற்று முன்தினம் சாலையில் திரண்டதோடு திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது....
ஆத்தூர் பள்ளியில் இருபெரும் விழா
ஆறுமுகநேரி, அக். 24: ஆத்தூர் சண்முகசுந்தர நாடார் பள்ளியில் நடந்த இருபெரும் விழாவில் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. ஆத்தூர் சி.சண்முகசுந்தர நாடார் பள்ளியில் தீபாவளி பண்டிகை மற்றும் கலை திருவிழா என இருபெரும் விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகள் வண்ண வண்ண கலை நிகழ்ச்சிகள் நடத்தி...