நாசரேத் பள்ளியில் மரக்கன்று நடும் விழா
நாசரேத், ஜூன் 12: நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் தேசிய மாணவர் படை சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் குணசீலராஜ் தலைமை வகித்தார். என்சிசி அலுவலர் சுஜித் செல்வசுந்தர், கணித ஆசிரியர் ஜெயக்குமார் டேவிட் முன்னிலை வகித்தனர். இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் வரவேற்றார். நாசரேத் எஸ்ஐ சத்யமூர்த்தி, ஏட்டு உமா ஆகியோர்...
கலைஞர் 102வது பிறந்த நாள் நல உதவிகள் வழங்கும் விழா
தூத்துக்குடி, ஜூன் 12: தூத்துக்குடியில் இன்று கலைஞர் பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் கனிமொழி எம்பி பங்கேற்று நல உதவிகளை வழங்குகிறார். தூத்துக்குடி மாநகர திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று(12ம் தேதி) மாலை 6 மணியளவில் சிதம்பரம் நகர் பேருந்து...
லாரி டிரைவரிடம் செல்போன் பறிப்பு
தூத்துக்குடி, ஜூன் 11: தூத்துக்குடியில் லாரி டிரைவரை மிரட்டி செல்போன் பறித்துச் சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். நெல்லையை சேர்ந்தவர் ராஜேஷ். லாரி டிரைவரான இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு 3வது மைல் அருகே உள்ள இந்திய உணவுக்கழக கிடங்கு பகுதியில் உள்ள இணைப்புச் சாலையோரத்தில் லாரியை நிறுத்தியிருந்தார். அப்போது, அங்கு...
உமரிக்காடு கிரிக்கெட் போட்டியில் இடையர்காடு அணி முதலிடம்
ஏரல், ஜூன் 11: உமரிக்காட்டில் நடந்த மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் இடையர்காடு அணி முதலிடம் பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் பரிசு வழங்கினார். ஏரல் அருகேயுள்ள உமரிக்காட்டில் உமரி காமராஜ் இளைஞரணி சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் நடந்தது. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு நடந்த...
சேதமடைந்த கட்டிடத்தை அகற்றக்கோரி ஏஐடியுசி ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி, ஜூன் 11: கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஏஐடியுசி கவுன்சில் மாவட்ட செயலாளர் பாபு தலைமை வகித்தார். தாலுகா குழு உறுப்பினர் ரெங்கநாதன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சேதுராமலிங்கம், நகர துணைச் செயலாளர்கள் அலாவுதீன், விஜயலட்சுமி, தாலுகா உதவிச் செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை...
கோவில்பட்டி அருகே விஷம் குடித்த கல்லூரி மாணவி சாவு
கோவில்பட்டி, ஜூன் 7: வீட்டுவேலை செய்யாததை தந்தை கண்டித்ததால் ஏற்பட்ட விரக்தியில் விஷம் குடித்த கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள சென்னயம்பட்டி தெற்குத் தெருவைச் சேர்த்தவர் முத்துசாமி. விவசாயி. இவரது மகள் கார்த்திபிரியா (20). கோவில்பட்டி அருகேயுள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்துவந்த இம்மாணவி, கல்லூரி...
பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பிய ஏர் ஹாரன் பறிமுதல்
கோவில்பட்டி, ஜூன் 7: கோவில்பட்டியில் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பிய காற்று ஒலிப்பான்களை வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோவில்பட்டியில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டுள்ள பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட்டார போக்குவரத்து துறை அலுவலர் கிரிஜாவிடம் புகார்கள் சென்றன. இதையடுத்து அவரது தலைமையில் மோட்டார்...
உடன்குடி அருகே வாகனம் மோதி முதியவர் பலி
உடன்குடி,ஜூன் 7: உடன்குடி அருகேயுள்ள சொக்கன்விளை சாஸ்தா கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுயம்பு (70). இவரது மனைவி விஜயலட்சுமி. தம்பதியினருக்கு 3 மகன்கள். நேற்று முன்தினம் இரவு சுயம்பு உடன்குடிக்கு சென்று வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார். பிறைகுடியிருப்பு பஸ் நிலையம் அருகே வந்தபோது எதிரே வந்த கார் இவரது...
பூசாரிக்கு கத்திக்குத்து
தூத்துக்குடி, ஜூன் 6: தூத்துக்குடி சிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(42). இவர், கனகசபாபதி தெருவில் சந்தன மாரியம்மன் கோயில் வைத்து பூஜை செய்து வருகிறார். இவரிடம் இனிகோ நகரை சேர்ந்த அந்தோணி(44) என்பவர் வழக்கமாக குறி கேட்டு வந்துள்ளார். இந்நிலையில் அந்தோணிக்கு மீன்பிடி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு மணிகண்டன் தான் காரணம்...