பருவமழை, விவசாயம் செழிக்க சிறப்பு வழிபாடு
தூத்துக்குடி, நவ. 6: கோரம்பள்ளம் சித்தர் பீடத்தில் பருவமழை, விவசாயம் செழிக்க சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு பிரத்யங்கிராதேவி- காலபைரவர் சித்தர் பீடத்தில் ஜப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு குருமகாலிங்கேஸ்வரருக்கும், நந்திக்கும் பால், தயிர், பன்னீர், புஷ்பம், இளநீர் மற்றும் அன்னத்தால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து குருமகாலிங்கேஸ்வரர், அன்னத்திலான சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு...
தூத்துக்குடியில் 15, 16ம் தேதிகளில் வாலிபால் பிரிமியர் லீக் போட்டிகள்
தூத்துக்குடி, நவ. 6: தூத்துக்குடியில் வரும் 15, 16ம் தேதிகளில் வாலிபால் பிரிமியர் லீக் போட்டி நடைபெற உள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தூத்துக்குடி ரஜினி கிளப் ஆகியவற்றின் சார்பில் தூத்துக்குடி விளையாட்டு மைதானத்தில் வரும் 15, 16 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி வாலிபால் பிரிமியர் லீக் போட்டி நடத்தப்படுகிறது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு...
நாகம்பட்டி, கே.துரைச்சாமிபுரத்தில் மார்க்கண்டேயன் எம்எல்ஏ ஆய்வு
ஓட்டப்பிடாரம், நவ. 5: நாகம்பட்டி, கே.துரைச்சாமிபுரம் ஆகிய கிராமங்களில் மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகள் குறித்து மார்க்கண்டேயன் எம்எல்ஏ அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார். விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், மீனாட்சிபுரம் ஊராட்சி, கே.துரைச்சாமிபுரம் கிராமத்தில் பொதுமக்களின் கோரிக்கைகளின் பேரில் பழுதடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சீரமைக்கவும், பேவர்பிளாக் சாலை மற்றும் சிமெண்ட்...
கோவில்பட்டியில் மத்திய ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம்
கோவில்பட்டி, நவ.5: கோவில்பட்டியில் மத்திய ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம் நடந்தது. கோவில்பட்டி காமராஜர் அரங்கத்தில் நடந்த இக்கூட்டத்திற்குத் தலைமை வகித்த ஒன்றியச் செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன் பேசுகையில் ‘‘சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் நாம் அனைவரும் கருத்து வேறுபாடு இன்றி ஒற்றுமையாக இருந்து திமுக கூட்டணி வெற்றிக்காகப் பாடுபட வேண்டும். கோவில்பட்டி தொகுதிக்கு...
சுற்றுப்புறத்திற்கு மாசு ஏற்படுத்தும் கிரஷர் ஆலை மீது நடவடிக்கை
தூத்துக்குடி, நவ.5: கோவில்பட்டி, கருப்பூர் வெங்கடாசலபுரம் கிராம மக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், கருப்பூர் கிராமத்தில் குண்டுக்கல்லை உடைத்து ஜல்லி மற்றும் எம்.சாண்ட் தயாரிக்கும் தனியார் கிரஷர் தொழிற்சாலை உள்ளது. இந்த கிரஷர் தொழிற்சாலையில் இருந்து வெளியாகும் தூசு காரணமாக விவசாய நிலங்களுக்கும், கால்நடைகளுக்கும் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. இதனால் கிராம மக்களின் வாழ்வாதாரம் பெரிதும்...
திருச்செந்தூர் நகராட்சி 1வது வார்டு சிறப்பு கூட்டம்
திருச்செந்தூர், நவ. 1: திருச்செந்தூர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் பொதுமக்களுக்கு அடிப்படை சேவைகளை மேம்படுத்துவது தொடர்பான வார்டு அளவிலான சிறப்பு கூட்டம் குமாரபுரம் 1வது வார்டு குமாரபுரத்தில் நடந்தது. அங்குள்ள பூங்காவில் நடந்த கூட்டத்துக்கு நகராட்சி துணை தலைவர் செங்குழி ரமேஷ் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் ஈழவேந்தன் முன்னிலை...
அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அமைச்சர் கீதாஜீவனிடம் வாழ்த்து
தூத்துக்குடி, நவ.1: தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்கள், அமைச்சர் கீதாஜீவனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக தூத்துக்குடி வளையானந்த சுவாமி கோயில் தெரு செல்வசித்ரா, சிவன் கோயில் தெரு மகாராஜன், அண்ணாநகர் பாலகுருசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளதாக இந்துசமய அறநிலைய துறை...
முடுக்கலான்குளம் மக்கள் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி, நவ. 1: கோவில்பட்டி அருகே நீர்நிலைகள் மற்றும் பொதுப்பாதையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவில்பட்டி அருகே உள்ள முடுக்கலான்குளம் கிராமத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் அருகே குருமலை உள்ளது. இந்த மலைப்பகுதியில் ஊரணிகள், நீரோடைகள் உள்ளது மட்டுமின்றி புள்ளி...
வாலிபர் தற்கொலை
ஸ்பிக்நகர், அக். 31: தூத்துக்குடி அடுத்த முத்தையாபுரம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பாலகிருஷ்ணனின் மகன் மாரிமுத்து (24). சப்கோல்டிங் வேலை பார்த்து வந்த இவர் கடந்த ஒரு மாதமாக உறவுக்கார பெண்ணை காதலித்து வந்தபோதும் அதற்கு பெண் வீட்டார் மறுப்பு தெரிவித்தனராம். இதனால் விரக்திக்கு ஆளான மாரிமுத்து நேற்று முன்தினம் இரவு மது குடித்துவிட்டு...