தூத்துக்குடியில் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை
தூத்துக்குடி, நவ.12: தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து விசைப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அந்தோணி என்பவருக்கு சொந்தமான பதிவு செய்யப்படாத விசைப்படகில் மீனவர்கள் நேற்று முன்தினம் மீன்பிடி தொழிலுக்கு சென்று திரும்பி வந்துள்ளனர். அப்போது அவர்கள் இனிகோ நகர் பகுதியைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்களின் வலையை...
நாரைக்கிணறு அருகே கீழகோட்டை ரயில்வே கேட் இன்று மூடல்
நெல்லை, நவ.12: பராமரிப்பு பணிகள் காரணமாக நாரைக்கிணறு அருகே கீழக்கோட்டை ரயில்வே கேட் இன்று மூடப்பட உள்ளது. நெல்லை - வாஞ்சிமணியாச்சி வழித்தடத்தில் நாரைக்கிணறு அருகே கைலாசபுரம் - கீழக்கோட்டை பகுதியில் உள்ள 6 வது எண் ரயில்வே கேட் இன்று பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட உள்ளது. அந்த ரயில்வே கேட் இன்று காலை 9...
புதூர் அருகே பி.ஜெகவீரபுரத்தில் பயணிகள் நிழற்குடை கட்டும் பணி
விளாத்திகுளம், நவ.12: புதூர் அருகே பி.ஜெகவீரபுரத்தில் பயணிகள் நிழற்குடை கட்டும் பணியை மார்க்கண்டேயன் எம்எல்ஏ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.புதூர் ஒன்றியம் கந்தசாமிபுரம் ஊராட்சி பி.ஜெகவீரபுரபுரம் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிய பயணிகள் நிழற்குடை கட்டி தர வேண்டும் என்றும் அப்பகுதியினர் மார்க்கண்டேயன் எம்எல்ஏவிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ்...
நாசரேத் நூலகத்தில் இலக்கிய மன்ற கூட்டம்
நாசரேத், நவ.11: நாசரேத் நூலகத்தில் நூலக வார விழாவை முன்னிட்டு இலக்கிய மன்ற கூட்டம் நடந்தது. வள்ளுவர் வாசகர் வட்டத்தின் சார்பில் நடந்த இக்கூட்டத்திற்கு வாசகர் வட்டத்தின் தலைவர் அய்யாக்குட்டி தலைமை வகித்தார். நூலகர் பொன் ராதா முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் கொம்பையா வரவேற்றார். இதையொட்டி ‘கவிமணியின் கவிதைகளில் சமூகப் பார்வையும், தமிழ்ப்பணியும்’ என்ற தலைப்பில்...
உலக திருக்குறள் கூட்டமைப்பின் ஆட்சிமன்ற ஆலோசனை கூட்டம்
நெல்லை, நவ. 11: உலக திருக்குறள் கூட்டமைப்பின் ஆட்சிமன்ற கூட்டம் கரூரில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் ஞானமூர்த்தி தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ஆதிலிங்கம் முன்னிலை வகித்தார். இதில் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய அளவில் நிர்வாகிகள் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. நிகழ்வில் உலக திருக்குறள் கூட்டமைப்பின் மாநில துணைத்தலைவரும், திருவள்ளுவர் மன்ற தலைவருமான...
கோவில்பட்டி அருகே தொழிலாளியை தாக்கி பைக், பணம் பறிப்பு
கோவில்பட்டி, நவ. 11: கோவில்பட்டி அருகே பைக்கில் சென்ற தொழிலாளியை மறித்து பணம், பைக் பறித்த வழக்கில் சிறுவன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர் கோவில்பட்டி அருகேயுள்ள சிதம்பராபுரம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த பாலமுருகன் மகன் கணேஷ்குமார் (35). கூலித் தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து பைக்கில் ஊருக்கு...
கூட்டுறவு ஆராய்ச்சி வளர்ச்சி நிதி வழங்கல்
தூத்துக்குடி, நவ. 6: திருச்செந்தூர் கூட்டுறவு நகர வங்கியின் 2023-24ம் ஆண்டுக்கான லாபத்தொகையில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்திற்கு செலுத்த வேண்டிய கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி மற்றும் கல்வி நிதிக்கான தொகை ரூ.1,71,440க்கான காசோலையை மண்டல இணை பதிவாளர் ராஜேசிடம் வங்கியின் துணை பதிவாளர்- செயலாட்சியர் சீனிவாசன் வழங்கினார். அப்போது மாவட்ட மத்திய கூட்டுறவு...
பருவமழை, விவசாயம் செழிக்க சிறப்பு வழிபாடு
தூத்துக்குடி, நவ. 6: கோரம்பள்ளம் சித்தர் பீடத்தில் பருவமழை, விவசாயம் செழிக்க சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு பிரத்யங்கிராதேவி- காலபைரவர் சித்தர் பீடத்தில் ஜப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு குருமகாலிங்கேஸ்வரருக்கும், நந்திக்கும் பால், தயிர், பன்னீர், புஷ்பம், இளநீர் மற்றும் அன்னத்தால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து குருமகாலிங்கேஸ்வரர், அன்னத்திலான சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு...
தூத்துக்குடியில் 15, 16ம் தேதிகளில் வாலிபால் பிரிமியர் லீக் போட்டிகள்
தூத்துக்குடி, நவ. 6: தூத்துக்குடியில் வரும் 15, 16ம் தேதிகளில் வாலிபால் பிரிமியர் லீக் போட்டி நடைபெற உள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தூத்துக்குடி ரஜினி கிளப் ஆகியவற்றின் சார்பில் தூத்துக்குடி விளையாட்டு மைதானத்தில் வரும் 15, 16 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி வாலிபால் பிரிமியர் லீக் போட்டி நடத்தப்படுகிறது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு...