திருச்செந்தூரில் பாஜ சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை
திருச்செந்தூர், நவ. 21: திருச்செந்தூரில் பாஜ சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமை வகித்து நிர்வாகிகளுக்கு சட்டமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனைகளை வழங்கினார். தொகுதி அமைப்பாளர் ராஜகண்ணன், இணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தொகுதி பொறுப்பாளர் சண்முகசுந்தரம், மாவட்ட பொதுச்செயலாளர் கனல் ஆறுமுகம், மாவட்ட...
பகுதிநேர நாட்டுப்புற கலைப்பயிற்சியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மேயர் ஜெகன்பெரியசாமி பாராட்டு
தூத்துக்குடி, நவ. 19: மாவட்ட அரசு இசைப்பள்ளியில் பகுதிநேர நாட்டுப்புற கலைப்பயிற்சியில் பங்கேற்று தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவியரை மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி பாராட்டினார். கலை பண்பாட்டுத் துறை சார்பாக தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 2024-25ம் ஆண்டின் பகுதிநேர நாட்டுப்புற கலைப் பயிற்சி மையத்தில் கிராமியப்பாடல், வில்லுப்பாட்டு, புலியாட்டம், ஒயிலாட்டம் ஆகிய பயிற்சிகளில் பயிற்சி...
பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு கோவில்பட்டியில் சாலைமறியல்
கோவில்பட்டி, நவ. 19: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த மழையில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.56 கோடி நிவாரண தொகையை வழங்க வேண்டும். பயிர் காப்பீட்டு தொகையை முழுமையாக விடுவிக்க வேண்டும். காட்டுப்பன்றிகள் தொல்லைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். அவற்றை விரட்ட முயற்சி எடுக்காத வனத்துறையை கண்டித்தும், இந்தாண்டு மழை இல்லாததால் 3...
தூத்துக்குடி நூலகத்தில் தேசிய நூலக வார விழா
தூத்துக்குடி, நவ. 19: தூத்துக்குடியில் மாவட்ட மைய நூலகத்தில் தேசிய நூலக வாரவிழா மற்றும் இலக்கிய விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட மைய நூலகமும், தொடுவானம் கலைஇலக்கிய பேரவையும் இணைந்து 58வது தேசிய நூலக வாரவிழா மற்றும் இலக்கிய விழாவை மாவட்ட மைய நூலகத்தில் கொண்டாடியது. நிகழ்ச்சியில் மாவட்ட மைய நூலக முதல்நிலை நூலகர் ராம்சங்கர்...
கடையத்தில் குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு
கடையம்,நவ.18: கடையத்திலிருந்து ரவணசமுத்திரம் செல்லும் வழியில் இரண்டாற்று முக்கு பகுதியில் உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கடையம் யூனியனுக்குட்பட் பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் குறுந்தட்டி மாடன் கோவில் அருகே குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனருகே ரேஷன் கடை மற்றும் அங்கன்வாடி...
விகேபுரத்தில் அதிமுக சார்பில் தேர்தல் ஆலோசனை கூட்டம்
விகேபுரம்,நவ.18: விகேபுரத்தில் அதிமுக சார்பில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் இசக்கி சுப்பையா எம்எல்ஏ தலைமை வகித்து பேசுகையில், ‘எஸ்ஐஆர் படிவங்களை சரியாக நிரப்புவதற்கு பொதுமக்களுக்கு உதவ வேண்டும். பாக முகவர்கள் வீடு, வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணியினை சிறப்பாக செய்ய வேண்டும். தேர்தலில் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக செயல்பட்டு வெற்றிக்கு பாடுபட வேண்டும்’...
ஏர்வாடி அரசு பெண்கள் பள்ளியில் ரூ.5 லட்சத்தில் நீர்த்தேக்க தொட்டி திறப்பு
ஏர்வாடி,நவ.18: ஏர்வாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிவறைக்கு போதிய தண்ணீர் வசதி இல்லாததால் மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதைதொடர்ந்து முன்னாள் மாணவிகள் வாட்ஸ்-ஆப் குரூப்பின் மூலம் ஒன்றிணைந்து ரூ.5 லட்சம் நிதி திரட்டி மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்தனர். நேற்று மாணவிகளின் பயன்பாட்டிற்கு முன்னாள் மாணவிகள் திறந்து வைத்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர்...
நெல்லையில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி
நெல்லை, நவ. 13: நெல்லையில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி 4 நாட்கள் நடக்கிறது. தேசிய மேம்பாட்டு நிறுவனம் மூலம் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி, நவ.20ம் தேதி துவங்கி 23ம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் தினமும் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நெல்லை ஸ்ரீபுரம் பீமா...
புதூர் யூனியனில் 5 கிராமங்களில் பேவர் பிளாக் சாலைப்பணிகள்
விளாத்திகுளம், நவ. 13: புதூர் யூனியனில் 5 கிராமங்களில் பேவர் பிளாக் சாலை பணியை மார்க்கண்டேயன் எம்எல்ஏ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினரும், விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மார்க்கண்டேயன், தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு நேரடியாக சென்று பொதுமக்களின் தேவைகளை கேட்டறிந்து மக்களின் அடிப்படை தேவைகளான சாலை அமைத்தல், குடிநீர்,...