கருங்குளம் யூனியனில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம்
செய்துங்கநல்லூர், நவ.26: கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கருங்குளம் வட்டார அளவிலான ஊராட்சிகளில் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் நாளை காலை 10 மணியிலிருந்து கருங்குளம் யூனியனில் வைத்து நடைபெறுகிறது. இந்த முகாமில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான பல்வேறு உபகரணங்கள் வழங்கும் முகாம் நடைபெற இருப்பதால் கருங்குளம் வட்டார அளவிலான...
கயத்தாறு அருகே பைக் திருடிய 3 பேர் கைது
கயத்தாறு, நவ.26:கயத்தாறு அருகே பைக் திருடிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கயத்தாறு காவல் சரகத்திற்கு உட்பட்ட சவலாபேரியைப் சேர்ந்தவர் லட்சுமணன் மகன் வேல்முருகன் (34). இவர் கடந்த 14ம்தேதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சோமு என்பவரின் கிணற்றின் அருகே தனது பைக்கை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பின்பு இரவு 10.30 மணிக்கு வந்து பார்த்தபோது...
மணப்பாடு பாலத்தில் லாரி மோதி விபத்து
உடன்குடி, நவ. 25: மணப்பாடு பாலத்தில் லாரி மோதிய விபத்துக்குள்ளானதில் டிரைவர் படுகாயமடைந்தார். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பெருமங்களூர் பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் சுப்பையா மகன் அடைக்கலராஜ்(29). இதே பகுதியில் உள்ள மீன் கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று அதிகாலை உடன்குடி அருகேயுள்ள மணப்பாடு கிராமத்திற்கு மீன் லோடு ஏற்றுவதற்கு லாரியில் வந்துள்ளார்....
12 ஊராட்சிகள் தூத்துக்குடியுடன் இணைப்பு கோவில்பட்டியில் விவசாயிகள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
கோவில்பட்டி, நவ. 25: தென்காசி மாவட்டம், குருவிகுளம் ஒன்றியத்தில் உள்ள இளையரசனேந்தல் உள்ளிட்ட 12 ஊராட்சிகள், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஒன்றியத்துடன் இணைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை வரவேற்றும், இளையரசனேந்தல் பிர்கா உரிமை மீட்பு போராட்டங்களுக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தும் கோவில்பட்டியில் தேசிய விவசாயிகள் சங்கம் சார்பில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது....
ஏரலில் தவெக சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் அன்னை விஜி சரவணன் வழங்கினார்
ஏரல், நவ. 25: ஏரலில் பொதுமக்களுக்கு தவெக சார்பில் கபசுரக் குடிநீர் வழங்குவதை சமூக ஆர்வலர் அன்னை விஜி சரவணன் தொடங்கி வைத்தார். ஏரல் காந்திசிலை பஸ் ஸ்டாப் அருகில் தவெக சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சமூக ஆர்வலர் அன்னை விஜி சரவணன் தலைமை வகித்து பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர்...
எட்டயபுரம் பேரூராட்சியில் வீடுகள் வழங்கும் திட்டத்தில் 37 பேருக்கு உத்தரவு வழங்கல்
எட்டயபுரம், நவ. 22: எட்டயபுரம் பேரூராட்சி பகுதியில் பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 37 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட அனைவருக்குமான உத்தரவுகளை பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் வழங்கினார். பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் வீடு கட்டுவதற்கு மத்திய, மாநில அரசு மூலம் 2.5 லட்சம் ரூபாய் 5 தவணைகளாக உதவி...
சூரங்குடியில் ரூ.45 லட்சத்தில் சாலை பணிகள்
குளத்தூர், நவ.22: சூரங்குடியில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் கற்சாலை அமைக்கும் பணிகளை மார்க்கண்டேயன் எம்எல்ஏ துவக்கிவைத்தார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் சூரங்குடி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் ஓரடுக்கு கற்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகளை விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் அடிக்கல் நாட்டி...
கோவில்பட்டி அருகே தகுதிச்சான்று புதுப்பிக்காமல் இயக்கிய வாகனங்கள் பறிமுதல்
கோவில்பட்டி, நவ.22 கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் தகுதிச்சான்று புதுப்பிக்காமல் இயக்கிய வாகனங்களை, போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், வாகனங்கள் தகுதிச்சான்று இன்றி இயக்கப்படுவதாக வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனைத்தொடர்ந்து, சாலைகளில் இயக்கப்படும் அனைத்து வாகனங்களும், சட்டத்திற்கு உட்பட்டு...
காதல் திருமணம் செய்த பெண் தூக்கிட்டு சாவு
தூத்துக்குடி, நவ. 21: தூத்துக்குடி சகாயபுரத்தை சேர்ந்தவர் பினோ(29). இவரது மனைவி ஜெமிலா (25). இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லை. இதற்கிடையே கணவன் -மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த...