பீக்கிலிபட்டியில் ரூ.25 லட்சம் செலவில் உணவு அருந்தும் கூடம்
எட்டயபுரம் ஜூலை 28: கோவில்பட்டி யூனியன், உருளைகுடி ஊராட்சிக்கு உட்பட்ட பீக்கிலிபட்டியில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் உணவு அருந்தும் கூடத்திற்கான புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல்நாட்டு விழா நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற தமிழ்நாடு சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவரும், திமுக...
புதிய பைப் லைனில் குடிநீர் விநியோகம்
தூத்துக்குடி, ஜூலை 28: தூத்துக்குடி சண்முகபுரத்தில் புதிய பைப் லைனில் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை மேயர் ஜெகன்பெரியசாமி ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தினமும் சீராக குடிநீர் வழங்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒரு சில இடங்களில் புதிய குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக சண்முகபுரம்...
குலசேகரன்பட்டினத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்
உடன்குடி, ஜூலை 28: குலசேகரன்பட்டினத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடந்தது. குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் கலையரங்கில் நடந்த இம்முகாமிற்கு திருச்செந்தூர் ஆர்டிஓ சுகுமாறன் தலைமை வகித்தார். தாசில்தார் பாலசுந்தரம், உடன்குடி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுல்தான், அரவிந்தன் மேலாளர் சண்முகவிஜயன் முன்னிலை வைத்தனர். இதில் அரசுத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து...
ஆறுமுகநேரி பெர்ல்ஸ் அகாடமி மாணவர் மாவட்ட அளவில் முதலிடம்
ஆறுமுகநேரி, ஜூலை 26: ஆறுமுகநேரி பெர்ல்ஸ் அகாடமி மாணவர் நீட் தேர்வில் தமிழக அரசு 7.5% இடஒதுக்கீட்டில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தும், மாநில அளவில் 60வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். 2025 நீட் தேர்வில் தமிழகத்தில் சுமார் 1,58,429 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் அரசு பள்ளி மாணவ மாணவிகள்...
சித்தர் பீடத்தில் சிறப்பு யாகம்
தூத்துக்குடி, ஜூலை 26:தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி, காலபைரவர் ஸ்ரீசித்தர் பீடத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு உலக மக்கள் நலமாக வாழவேண்டியும், அனைவர் வாழ்விலும் செல்வவளம் பெருக வேண்டியும் சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் 2025 கிலோ மிளகாய் வற்றல் மஹா யாக வழிபாடு நடந்தது. பின்னர் மதியம் 12 மணிக்கு ஸ்ரீமஹா...
தூத்துக்குடி மாவட்டத்தில் 5 பேர் குண்டாசில் கைது
தூத்துக்குடி, ஜூலை 26: தூத்துக்குடியில் கடந்த 21.06.2025 அன்று தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட சிலுவைப்பட்டி பகுதியைச் சேர்ந்த காளிராஜன் மகன் கார்த்திக்ராஜா (24), நெல்லை அடுத்த தாழையூத்து ராஜவல்லிபுரம் பகுதியை சேர்ந்த மந்திரமூர்த்தி மகன் ஜெபராஜ் (28), தூத்துக்குடி டிஎம்பி காலனி பகுதியைச் சேர்ந்த...
தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் ேமாதி ஒருவர் பலி
கயத்தாறு, ஜூலை 25: கயத்தாறு அருகேயுள்ள மதுரை - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அரசன்குளம் விலக்கு அருகே நேற்று காலை வாகனம் மோதிய விபத்தில் ஆண் ஒருவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்த கயத்தாறு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு உடல் முழுவதும் நசுங்கிய நிலையில் சாலை ஆங்காங்கே...
தூத்துக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்: அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
தூத்துக்குடி, ஜூலை 25: தூத்துக்குடியில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் முகாமை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, அரசுத்துறைகளின் சேவைகளை ஒரே இடத்தில் பொதுமக்கள் பெரும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி 15,16,17வது வார்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தபால்தந்தி...
ஆடி அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்
திருச்செந்தூர், ஜூலை 25: தமிழ் மாதங்களில் ஆடி மற்றும் தை மாதம் வரும் அமாவாசையானது முக்கிய விரத நாட்களாகும். இந்நாட்களில் இந்துக்கள் நதிக்கரை மற்றும் கடற்கரையில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கமாகும். இந்த ஆண்டு ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 5.30...