புளியங்குளத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
குளத்தூர், ஆக.2: விளாத்திகுளம் ஒன்றியம் குளத்தூர் அருகே புளியங்குளம் ஊராட்சியில் பூசனூர், மார்த்தாண்டம்பட்டி, வீரபாண்டியபுரம், த.சுப்பையாபுரம், வீரபாண்டியபுரம், அயன்செங்கல்படை, ஜமீன்செங்கல்படை ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் விதமாக புளியங்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடந்தது. முகாமை விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் துவக்கிவைத்து முகாமில் வழங்கப்படும் சேவைகளை பார்வையிட்டு ஆய்வு...
எப்போதும்வென்றான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர் கல்வி திட்டம்
தூத்துக்குடி, ஜூலை 31: எப்போதும் வென்றான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர் கல்வி திட்டம் சங்க செயலாட்சியர் லட்சுமிதேவி முன்னிலையில் ந.டந்தது. கூட்டுறவு ஒன்றிய உதவியாளர் சொர்ண செல்வம் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் சாம்டேனியல் ராஜ், உறுப்பினர்களுக்கு சங்கத்தால் வழங்கப்படும் கடன் மற்றும் உறுப்பினர்...
சாத்தான்குளம் அருகே ஏசி மெக்கானிக்கின் வீட்டை சூறையாடிய டிரைவர் கைது
சாத்தான்குளம், ஜூலை 31: சாத்தான்குளம் அருகே ஏசி மெக்கானிக்கின் கார் மற்றும் வீட்டை அடித்து நொறுக்கி சேதப்படுத்திய டிரைவரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள சங்கரன்குடியிருப்பு மேலத்தெருவை சேர்ந்த செல்வராஜின் மகன் ஜெகநாதன் (35). பெங்களூரில் கார் டிரைவர் ஆக பணியாற்றி வருகிறார். இவரது சகோதரர் ராஜா எலக்ட்ரீசியனாக வேலைபார்த்து வந்தார்....
சிலம்ப போட்டியில் வென்றோருக்கு பரிசு
கோவில்பட்டி, ஜூலை 31: கோவில்பட்டியில் மாவட்ட அளவில் நடந்த சிலம்ப போட்டியில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ எம்எல்ஏ பரிசுகள் வழங்கினார். கோவில்பட்டியில் தூத்துக்குடி மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி தனியார் கல்லூரியில் நடந்தது. இதில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்ற கோவில்பட்டி டிசிஎஸ்ஜி...
நகர ெஜபக்குழுவினருக்கான திருப்பலி
தூத்துக்குடி, ஜூலை 30: தூத்துக்குடி பனி மயமாதா பேராலயத்திருவிழாவில் 4வது நாளான நேற்று நகர ெஜபக்குழுவினருக்கான சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர். தூத்துக்குடியில் உலகளவில் பிரசித்திபெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 443 ஆவது ஆண்டுத் திருவிழா கடந்த 26ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் ஆக.5ம் தேதி வரை 11 நாள்கள் விமரிசையாக...
பொறியியல் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை
தூத்துக்குடி, ஜூலை 30: தூத்துக்குடி, தெர்மல் நகரை சேர்ந்த அபிச்சந்திரனின் மகள் தர்ஷினி (18). இவரது பெற்றோர் இறந்தபிறகு பாட்டி பராமரிப்பில் இருந்துவந்த இவர் வாகைக்குளம் அருகேயுள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கும், திருச்செந்தூர் ரோட்டில் உள்ள கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வரும் மாணவர் மாரிசெல்வத்திற்கும் ஏற்பட்ட பழக்கம்...
சுடலைமாட சுவாமி கோயிலில் ஆடி கொடை விழா கோலாகலம்
திருச்செந்தூர், ஜூலை 30: திருச்செந்தூரில் மேலத்தெரு யாதவர் சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட சுடலைமாட சுவாமி கோயில் கொடை விழா வெகு விமரிசையாக நடந்தது. இதில் திரளானோர் கலந்துகொண்டு வழிபட்டனர். கொடை விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை சுப்பிரமணிய சுவாமி கோயில் சண்முக விலாசத்தில் இருந்து ரத வீதி வழியாக ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட தீர்த்தம் கோயிலுக்கு வந்தடைந்ததும்...
மீன்பிடி, உப்பு, பனை தொழிலாளர்கள் கல்வி நிறுவனங்களுக்கு சிறப்பு திருப்பலி
தூத்துக்குடி, ஜூலை 29: தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத் திருவிழாவில் 3வது நாளான நேற்று மீன்பிடி, உப்பு, பனை தொழிலாளர்களுக்கான சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் இறைமக்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். உலகளவில் பிரசித்திபெற்ற தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத் திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி வரும் ஆக.5ம் தேதி வரை 11 நாட்கள் கோலாகலமாக...
மின் கசிவால் தீ விபத்து முருங்கை மரங்கள் எரிந்து நாசம்
சாத்தான்குளம், ஜூலை 29: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள தச்சன்விளையைச் சேர்ந்தவர் ஆல்வின். இவர் அதே பகுதியில் உள்ள அவரது தோட்டத்தில் முருங்கை விவசாயம் செய்து வருகிறார். இதனிடையே ஆடி மாதத்தை முன்னிட்டு காற்று பலமாக வீசி வருகிறது. இதேபோல் நேற்று மதியம் பலத்த காற்று வீசியபோது எதிர்பாராதவிதமாக மின் வயரில் இருந்து மின்சாரம் கசிந்ததில்...