வடபத்திரகாளியம்மன் கோயிலில் வாகனம் நிறுத்துமிடம் அமைக்க மேயர் நேரில் ஆய்வு
தஞ்சாவூர், ஜூலை 11: தஞ்சை கீழவாசலில் உள்ள வடபத்ரகாளியம்மன் கோயில் அரண்மனை தேவஸ்தானத்தின் கீழ் உள்ள 88 கோயில்களுள் ஒன்றாகும். பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இருந்தாலும் வாகனம் நிறுத்துமிடம் இல்லாததால் பக்தர்களின் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது....
குரு பூர்ணிமாவை முன்னிட்டு ராகவேந்திர சுவாமி பிருந்தாவனத்தில் வழிபாடு
தஞ்சாவூர், ஜூலை 11: தஞ்சாவூர் வடவாற்றங்கரை ராகவேந்திர சுவாமிகளின் பிருந்தாவனத்தில் ஆண்டுதோறும் குரு பூர்ணிமா அன்று குருவை தரிசனம் செய்தால் நினைத்த காரியங்கள் யாவும் கைகூடும் என்பது ஐதீகம். நேற்று குரு பூர்ணிமாவை முன்னிட்டு ராகவேந்திர சுவாமிகளின் பிருந்தாவனத்திற்கு சிறப்பு அபிஷேகமும் சிறப்பு மலர் அலங்காரமும் சகஸ்ரநாம அர்ச்சனையும், தீபாராதனையும் நடைபெற்றது. இத்தலத்தில் தரிசனத்தில்...
ஒரத்தநாடு அருகே விவசாயி மர்மசாவு
ஒரத்தநாடு, ஜூலை 10: ஒரத்தநாடு அருகே தென்னந்தோப்பில் விவசயி மர்மமாக இறந்துகிடந்தார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வடசேரி கிராமத்தில் வசிப்பவர் சிவக்குமார் (58). விவசாயி. இவர் தனக்கு சொந்தமாக தென்னந்தோப்பில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அவரது குடும்பத்தார் வெளியூர் சென்றுள்ளனர். இரண்டு நாட்களாக சிவகுமாரின்...
கோரிக்கையை வலியுறுத்தி காப்பீடு சங்க ஊழியர்கள் போராட்டம்
தஞ்சாவூர், ஜூலை 10: தஞ்சை கோட்ட பொது செயலாளர் சேதுராமன் தலைமை தாங்கினார். ஓய்வு ஊதிய சங்க கோட்ட தலைவர் புண்ணியமூர்த்தி முன்னிலை வகித்தார். பொது காப்பீடு ஊழியர்கள் சங்க மண்டல பொது செயலாளர் பிரபு வாழ்த்துரை வழங்கினார். கோட்ட தலைவர் செல்வராஜ் சிறப்புரை ஆற்றினார். இறுதியில் இணை செயலாளர் சரவணா பாஸ்கர் நன்றி...
உலக வெண்புள்ளி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்பு
தஞ்சாவூர், ஜூலை 10: உலக தோல் நல தினம் மற்றும், உலக வெண்புள்ளி தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. உலக தோல் நல தினம் மற்றும், உலக வெண்புள்ளி தினத்தை முன்னிட்டு நேற்று நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் முதல்வர் மரு. பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். மருத்துவக கண்காணிப்பாளர்...
கும்பகோணம் அருகே சுவாமிநாத கோயில் சன்னதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கும்பகோணம், ஜூலை 9: கும்பகோணம் அருகே சுவாமிமலை பேரூராட்சிக்குட்பட்ட சுவாமிநாத சுவாமி திருக்கோயில் சன்னதி மற்றும் திருமஞ்சன வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோயில் துணை ஆணையரும், செயல் அலுவலருமான உமாதேவி உத்தரவிட்டார். இதன்பேரில் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையுடன் இணைந்து விரைவில் ஆக்கிரமிப்புகள் அகற்ற முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், சன்னதி தெருவில் சாலையை ஆக்கிரமித்து வல்லப...
தஞ்சையில் இருந்து தேனிக்கு 1,250 டன் அரிசி மூட்டைகள் அனுப்பிவைப்பு
தஞ்சாவூர், ஜூலை 9: தஞ்சையில் இருந்து தேனிக்கு 1,250 டன் அரிசி மூட்டைகள் பொது விநியோகத் திட்டத்திற்காக சரக்கு ரயிலில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரெயில்கள் மூலம் அனுப்பப்பட்டு...
வேலைநிறுத்த விளக்க பிரச்சார கூட்டம்
தஞ்சாவூர், ஜூலை 9: நாடு தழுவிய வேலைநிறுத்த விளக்க பிரச்சார கூட்டம் நேற்று தஞ்சையில் அனைத்து சங்கங்கள் சார்பில் நடைபெற்றது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய ஒன்றிய மோடி அரசை கண்டித்து இன்று நடைபெறும் வேலை நிறுத்தத்தை விளக்கி தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் பிரச்சார கூட்டம் நேற்று தஞ்சையில் நடைபெற்றது....
பேராசியர் அன்பழகன் விருது பெற்ற அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு பாராட்டு
பேராவூரணி, ஜூலை 8: பேராசிரியர் அன்பழகன் விருது பெற்ற பேராவூரணி அரசு பெண்கள் பள்ளிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு, 2024-25 ஆம் ஆண்டுக்கான பேராசிரியர் அன்பழகன் விருது வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் திருச்சியில் நடைபெற்ற விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்...