வங்கிகளில் உரிமை கோரப்படாத வைப்புத்தொகை ரூ.67 லட்சம் உரியவர்களிடம் ஒப்படைப்பு
தஞ்சாவூர், அக்.26: தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வங்கிகளில் பத்து வருடங்களுக்கு மேலாக உரிமை கோரப்படாத வாடிக்கையாளர்களின் வைப்புத் தொகைகள், காப்பீட்டு தொகைகள், மீட்சுவல் பண்டு தொகைகள் உள்ளிட்டவைகள் ‘உங்கள் பணம் உங்கள் உரிமை’ முகாம் மூலம் 56 வாடிக்கையாளர்களுக்கு ரூ.67 லட்சம் மதிப்பிலான தொகையை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்....
மருதுபாண்டியர்களின் 224வது குருபூஜை
தஞ்சாவூர், அக்.26: மருதுபாண்டியர்களின் 224வது குருபூஜையை முன்னிட்டு தஞ்சாவூர் எம்எல்ஏ அலுவலகத்தில் எம்எல்ஏ டிகேஜி நீலமேகம் தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.மருதுபாண்டியர்களின் 224வது குருபூஜை விழா நேற்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் எம்எல்ஏ டி.கே.ஜி நீலமேகம் தலைமையில் மருது சகோதரர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில்...
திருவையாறு அருகே தாளடி நடவு பணிகளில் விவசாயிகள் மும்முரம்
திருவையாறு, அக்.26: திருவையாறு அருகே திருவேதிக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 500 ஏக்கரில் விவசாயிகள் தாளடி நடவு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திருவையாறு அருகே திருவேதிக்குடி, ராமாபுரம், தோட்டக்காடு, ஆலங்குடி, மானாங்கோரை உள்ளிட்ட பகுதிகளில் போர்வெல் மூலம் சுமார் 500 ஏக்கரில் முன் பட்ட குறுவை சாகுபடி பணிகள் நடந்து அறுவடை பணிகள் முடிந்தது....
விவசாயிகள் வேதனை பேராவூரணி அருகே குளமே இல்லாத கிராமத்தில் புதிதாக குளம் அமைப்பு
பேராவூரணி, அக்.25: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியம் பழையநகரம் ஊராட்சிக்குட்பட்ட சீவங்குறிச்சி கிராமத்தில் புதிதாக குளம் அமைக்கப்பட்டுள்ளதால் கிராம மக்களை மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சீவங்குறிச்சி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாய பகுதியான இக்கிராமத்தில் மக்களின் பொது பயன்பாட்டிற்கு குளம் இல்லாத காரணத்தால் புதிதாக குளம் உருவாக்க வேண்டும் என கிராம மக்கள் நீன்ட...
விளைநிலங்களில் நெற்பயிர்கள் அழுகும் அபாயம்
தஞ்சாவூர், அக்.25: நல்லிச்சேரி பெரிய வாய்க்கால் தூர்வாரப்படாததால் பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்படைந்து நெற்பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே நல்லிச்சேரி மற்றும் பசுபதிகோவில் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக இப்பகுதியில்...
தஞ்சை உழவர் சந்தையில் காய்கறி விலை கடும் உயர்வு
தஞ்சாவூர், அக்.25: தொடர்மழை எதிரொலியாக தஞ்சை உழவர் சந்தையில் காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளது தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை மையப்பகுதியில் அரசுக்கு சொந்தமான உழவர் சந்தை அமைந்துள்ளது. இந்த சந்தைக்கு திருவையாறு, கண்டியூர், நடுக்காவேரி, பொன்னாவரை, அம்மன்பேட்டை, பள்ளி அக்ரஹாரம், மருங்குளம், குருங்குளம், கண்டிதம்பட்டு, கொல்லங்கரை வேங்கராயன் குடிகாடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள்...
அதிராம்பட்டினம் பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீர் முழுவதுமாக அகற்றம்
பட்டுக்கோட்டை, அக்.24: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த அதிராம்பட்டினம் பகுதியில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அதிராம்பட்டினம் தைக்கால் தெருவில் மழைநீர் தேங்கியிருந்தது. இதனையடுத்து மழைநீர் தேங்கியிருந்த பகுதிகளை பட்டுக்கோட்டை தாசில்தார் தர்மேந்திரா, அதிராம்பட்டினம் நகராட்சி ஆணையர் சுகேந்திரன் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து ஜேசிபி...
திருவிடைமருதூர் அருகே 30க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த மழைநீர்: நோய்த்தொற்று அபாயத்தால் மக்கள் அச்சம்
தஞ்சாவூர், அக்.24: தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா பந்தநல்லூர் அருகே கருப்பூர் அய்யனார் கோயில் தெருவில் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் 300க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சாலை வசதி மேம்படுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அந்த பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மேலும் மழைக்காலங்களில் தண்ணீர் வடிய ஏதுவாக எந்த அடிப்படை வசதிகளும் மேம்படுத்தி...
பட்டுக்கோட்டை அருகே மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் தாசில்தார் ஆய்வு
பட்டுக்கோட்டை, அக்.24: பட்டுக்கோட்டை அருகே காடுவெட்டிவிடுதி, வெட்டிக்காடு பகுதிகளில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை தாசில்தார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த திருவோணம் பகுதியில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் திருவோணம் தாலுக்கா, காடுவெட்டிவிடுதி பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட மேரி கோல்டு (செண்டிப்பூ) மற்றும்...