திருக்காட்டுப்பள்ளியில் வாகன தணிக்கையில் மதுபாட்டில் கடத்திவந்த 3 பேர் கைது
திருக்காட்டுப்பள்ளி, ஜூலை 1: திருக்காட்டுப்பள்ளியில் வாகன தணிக்கையில் மதுபாட்டில் கடத்திவந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது இருசக்கர வாகனங்களில் அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள் கடத்தி வந்த 4 பேரில் 3 பேரை கைது செய்து, 320 மது பாட்டில்களை போலீஸார் பறிமுதல்...
தஞ்சை பல்கலைக்கழக முதல் துணைவேந்தர் நினைவுநாள்
தஞ்சாவூர் ஜூலை 1: தமிழ் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியன் 16வது நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. துணைவேந்தர் குழு உறுப்பினர்கள் முனைவர் அமுதா, மரு. முனைவர் பாரதஜோதி தலைமை வகித்தார். பதிவாளர் (பொ) பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் மொழி பெயர்ப்புத்துறைத் தலைவர் மற்றும் மக்கள்...
புதுப்பட்டினம், மைக்கேல்பட்டியில் உழவரை தேடி வேளாண்மை முகாம்
தஞ்சாவூர், ஜூலை 1: : தஞ்சாவூர் வட்டாரத்தில் உள்ள புதுப்பட்டினம் கிராமம் மற்றும் பூதலூர் வட்டாரத்தில் உள்ள மைக்கேல்பட்டி கிராமத்தில் தோட்டக்கலைத்துறையின் முன்னிலையில் உழவரை தேடி வேளாண்மை முகாம் நடைபெற்றது. இதில் புதுப்பட்டினம் கிராமத்தில் தஞ்சாவூர் தோட்டக்கலை உதவி இயக்குநர் முத்தமிழ்ச்செல்வி மற்றும் மைக்கேல்பட்டி கிராமத்தில் பூதலூர் தோட்டக்கலை அலுவலர் நித்திஸ் ஆகியோர் தோட்டக்கலைத்துறை...
திரளான பக்தர்கள் பங்கேற்பு நிலத்தடி நீருக்கு வரி விதிப்பு தமிழ் தேசிய பேரியக்கம் எதிர்ப்பு
தஞ்சாவூர், ஜூன் 30: நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்தக் கூடாது எனறு தமிழ்த் தேசியப் பேரியக்கம் வலியுறுத்தியுள்ளது இது குறித்து தமிழ்த் தேசியப் பேரியக்கம் மாநில பொதுச் செயலாளர் வெங்கட்ராமன் கூறியிருப்பதாவது :- மத்திய அரசின் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் எச்.எம். பாட்டீல், நிலத்தடி நீர் பயன்படுத்தும் உழவர்கள் மீது...
தஞ்சாவூரில் பழுதானவுடன் மின்மாற்றி சீரமைப்பட்டு சீரான மின் விநியோகம்
தஞ்சாவர், ஜூன் 30: பழுதான மின்மாற்றிகள் உடனுக்குடன் பழுது நீக்கம் செய்து சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது என மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் விமலா தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: ஜூன் மாதம் 2025ல் 41 எண்ணிக்கை புதிய மின்மாற்றிகள் ரூ.1 கோடியே 43.5 லட்சம் செலவில் மேம்பாட்டு திட்டத்தின்...
திருவையாறு அருகே திருமணமாகாதவர் தூக்கிட்டு தற்கொலை
திருவையாறு, ஜூன் 30: திருவையாறு அருகே அந்தணர்குறிச்சி வடக்கு தெருவை சேர்ந்தவர் பழனியாண்டி. இவரது மகன் நடேசன் (44 ) தந்தை இறந்துவிட்டார். தாய் மற்றும் அத்தையுடன் மாடி வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை அடிக்கடி குடித்து விட்டு வீட்டுக்கு வருவாராம். இந்நிலையில் நேற்று காலை வீட்டில் குடும்ப பிரச்சினை...
குடந்தையில் ஜூலை 4ல் அதிமுக ஆர்ப்பாட்டம்
கும்பகோணம், ஜூன் 28: அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கும்பகோணம் மாநகரில் குடிநீரில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும், மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூலை 4ம் தேதி (வெள்ளி) காலை 9.30 மணியளவில் குடந்தை காந்தி பார்க் அருகில்...
விளையாட்டு துறையில் சாதனை படைத்தவர்களுக்கு பத்ம விருதுகள்
தஞ்சாவூர், ஜூன் 28: விளையாட்டு துறையில் சாதனை படைத்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து கலெக்டர் பிரியங்கா பங்கஜம்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்குபவர்களுக்கும், சாதனை புரிந்தவர்களுக்கும் பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது. இவ்விருதுக்கு கலை, சமூகப்பணி, பொது சேவை, அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம்...
கும்பகோணம் அருகே திருநங்கைகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா
கும்பகோணம், ஜூன் 28: கும்பகோணம் அருகே பாபநாசத்தில் 5 வருட போராட்டங்களுக்கு பிறகு இலவச வீட்டுமனை பட்டா வாங்கியதற்கு திருநங்கைகள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே மணலூர் கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர். மேலும் இவர்கள் வாடகை அல்லது போக்கியத்திற்கு வீடு எடுத்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்த...