தஞ்சை அருகே 300 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி
தஞ்சாவூர், ஜூலை 16: தஞ்சை அருகே 300 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது. தமிழகத்தில் கால்நடைகளுக்கு 7-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.அதன்படி தஞ்சை மாவட்டத்தில் 2.77 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்படுகிறது. கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் பாஸ்கரன்...
வீட்டுமனை பட்டா வழங்க கோரி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
தஞ்சாவூர், ஜூலை 16: தஞ்சையில் வீட்டுமனை பட்டா வழங்க கோரி சதுர்காடு வீரக்குறிச்சி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்திற்கு கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள், தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்....
4 கட்டங்களாக 353 முகாம்கள் தஞ்சையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடங்்கியது
தஞ்சாவூர், ஜூலை 16: தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழ்நாட்டிலுள்ள கடைகோடி மக்கள், அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்களை, அவர்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும், ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மானம்பாடி ஊராட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன்...
மதுக்கூர் ஒன்றிய பகுதிகளில் வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளில் முறைகேடு: நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் மனு
தஞ்சாவூர்: வாய்க்கால்களை தூர்வாரி பணிகளில் முறைகேடு நடந்திருப்பாதாகவும் கலெக்டர் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டுமென கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் மதுக்கூர் ஒன்றிய பகுதிகளில் நீர்வளத் துறையில் தூர்வாரும் பணிகளில் முறைகேடு கையாடல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜமிடம் கல்யாண ஓடை பகுதியை சேர்ந்த முன்னாள்...
கேரளாவில் நடைபெற்ற கை மல்யுத்த போட்டியில் தங்கம் வென்ற மாற்றுத்திறனாளி
தஞ்சாவூர்: கேரளாவில் நடைபெற்ற தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகள் கை மல்யுத்த போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் என்ற மாற்றுத்திறனாளி வீரர் வீராங்கனையை தஞ்சை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா நெய்வேலி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் வயது 15. இவர் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அதேபோல்...
தஞ்சையில் இருந்து குமரிக்கு 1250 டன் அரிசி மூட்டைகள் சரக்கு ரயிலில் அனுப்பிவைப்பு
தஞ்சாவூர்: தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரெயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நெல் அரவை செய்யப்பட்டு, பொது வினியோகத்திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று தஞ்சை...
தஞ்சை அருகே பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பு உணவக கொட்டகை இடித்து அகற்றம்
தஞ்சாவூர், ஜூலை 13: தஞ்சை அருகே பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட உணவக கொட்டகையை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இடித்து அகற்றினர். தஞ்சை- பட்டுக்கோட்டை சாலையில் மன்னார்குடி பிரிவு சாலையில் பாசன வாய்க்கால் உள்ளது. கல்லணைக்கால்வாயில் இருந்து இந்த வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படும். இதன் மூலம் பட்டுக்கோட்டை மற்றும் மன்னார்குடி பிரிவு சாலையில் ஏராளமான...
சாலையோரம் நிறுத்திய பைக்கிற்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
பேராவூரணி , ஜூலை 13: பேராவூரணியில் சாலை எல்லை கோட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்ட பைக்கிற்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அம்மையாண்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். பள்ளிவாசல் அருகில் உள்ள டீக்கடை முன்பாக மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். மோட்டார் சைக்கிளின் பின்பகுதியில் நெடுஞ்சாலை கோட்டுக்கு வெளியே சிறிது இருந்தது. அங்கு வந்த...
தஞ்சை மருத்துவமனைக்கு பஸ் இயக்க கோரிக்கை
தஞ்சாவூர், ஜூலை 14: நாஞ்சிக்கோட்டை பகுதிக்கு செல்லும் சாலையில் மருங்குளம் கிராமம் உள்ளது. மருங்குளத்தை சுற்றி புதுநகர், மின்னாத்தூர், வடக்குபட்டு, நடுவூர், வல்லுண்டான்பட்டு, வேங்கராயன்குடிகாடு, ஈச்சங்கோட்டை, சூரியம்பட்டி, கொல்லங்கரை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மருங்குளத்தில் இருந்து அதன் சுற்றுவட்டார கிராமங்களுக்கும் மற்றும் கரம்பக்குடி, அறந்தாங்கி, புதுக்கோட்டை, செல்லம்பட்டி, குருங்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு...