தஞ்சையில் மூத்த குடிமக்கள் பேரவை கூட்டம்
தஞ்சாவூர், நவ. 12: தஞ்சாவூர் மாவட்ட மூத்த குடிமக்கள் பேரவை கூட்டம் நேற்று தஞ்சை பெசன்ட் அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு செயற்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் வரவேற்புரை ஆற்றினார். தலைவர் பழனிவேல் தலைமை உரையாற்றினார். பொதுச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். பொருளாளர் சுப்பிரமணியன் நிதிநிலை அறிக்கை வாசித்தார். இதில் செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார், பாலகிருஷ்ணன், அமைப்புச்செயலாளர்...
திருவையாறில் குளிக்க சென்ற வாலிபர் மாயம்
திருவையாறு, நவ.12: திருவையாறு மண்டப படித்துறையில் குளிக்க சென்ற வாலிபர் காணவில்லை. திருவையாறு புஷ்ய மண்டப தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் இவரது மகன் சுரேஷ் (30) வாட்ச்மேன் வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை சுமார் 11.30 மணி அளவில் திருவையாறு காவேரி ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்லும் நிலையில் புஷ்ய மண்டப படித்துறையில் குளிக்க...
தஞ்சையில் தொழிலாளர் பங்குத்தொகை நல வாரியத்தில் செலுத்த வேண்டும்
தஞ்சாவூர், நவ.12: இந்த ஆண்டுகான தொழிலாளர் நல நிதி பங்குத் தொகையினை தொழிலாளர் நல வாரியத்திற்கு 31.01.2026-க்குள் செலுத்த வேண்டும். தமிழ்நாடு தொழிலாளா நல நிதிச் சட்டப்பிரிவின் கீழ் வரும் தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், மலைத் தோட்ட நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் என தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும்...
கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு வழங்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும்
தஞ்சாவூர், நவ 11: கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கொடுக்கும் திட்டத்திற்கான பணியை துரிதப்படுத்த வேண்டும் என தஞ்சை மாவட்ட கலெக்டர் இடம் தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி சார்பில் நேற்று மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியதாவது: தஞ்சை மாவட்டத்தின் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் 2022ம் ஆண்டு முதல் வீடு கட்டும் திட்டம் வீடு...
பட்டுக்கோட்டை அருகே மருதங்காவயல் பகுதியில் மணல் எடுக்கும் அனுமதியை ரத்து செய்யவேண்டும்
தஞ்சாவூர், நவ 11: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ராசாமடம் கிராமத்தில் மகாராஜா சமுத்திரம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் மிக அருகிலேயே உள்ள மருதங்காவயல் பகுதியில் மணல் எடுத்துக்கொள்ள அரசு அனுமதி வழங்கியதை தடுக்க கோரி தஞ்சை மாவட்ட கலெக்டரிடம் நேற்று அண்ணியாறு மகாராஜா சமுத்திரம் ஆறு தடுப்பணை பயனாளிகள் சார்பில் மனு வழங்கப்பட்டது....
தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி நூதன போராட்டம்: மழைக்கால நிவாரணம் கூடுதலாக வழங்க வலியுறுத்தல்
தஞ்சாவூர், நவ. 11: மண்பாண்ட தொழில் செய்யும் தொழிலாளர்கள் பல்லாண்டு காலமாக வசித்து வருகின்ற வீட்டிற்கும் மற்றும் தொழில் செய்யும் இடத்தில் இருக்கும் அடிமனை பட்டா வழங்க கோரி தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கைகளில் மண்பாண்ட பொருட்களை வைத்து நூதன முறையில் மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியதாவது: பொங்கல் திருநாளில் அரசு சார்பாக...
கல்லணை காவிரியில் குதித்து தொழிலாளி தற்கொலை
திருக்காட்டுப்பள்ளி, நவ.7: தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை காவிரியில் குதித்து திருச்சியை சேர்ந்த தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.திருச்சி பாலக்கரை துரைசாமிபுரத்தைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி மகன் பழனிசாமி (45). இவர் சொந்தமாக ஸ்விட்ச் போர்டு தயாரிக்கும் கடை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. கருத்து வேறுபாடு காரணமாக தன் மனைவியை விட்டு 4 வருடங்களாக பிரிந்து இருந்ததாக தெரிகிறது....
அரசின் சலுகைகளை பெற விவசாயிகளுக்கு அழைப்பு
தஞ்சாவூர், நவ.7: தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வித்யா கூறியதாவது; தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் தங்கள் நில உடமை பதிவுகளை சரிபார்க்கும் முகாம் வேளாண்மைத்துறை, மற்றும் இ-சேவை மையங்கள் மூலம் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் அனைவரும் தங்கள் பெயரில் உள்ள நில ஆவணங்கள், ஆதார் அட்டை மற்றும் தொலைபேசி எண்...
தஞ்சை உழவர் சந்தையை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சுற்றிப்பார்த்து மகிழ்ச்சி
தஞ்சாவூர், நவ.7: இத்தாலி, இங்கிலாந்து ஜெர்மன் நாடுகளைச் சேர்ந்த 12-க்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் நேற்று தஞ்சையை சுற்றி பார்த்தனர். அப்போது, விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகளை தாங்களே மார்க்கெட் மூலம் விற்பனை செய்யும் உழவர் சந்தை செயல்பாடுகளை பார்வையிட்டனர். இதையடுத்து நேற்று காலை காரைக்குடி செல்லும் வழியில் தஞ்சை உழவர் சந்தைக்கு சுற்றுலா பயணிகள்...