கும்பகோணத்தில் ஓரணியில் தமிழ்நாடு பேரணி எம்எல்ஏ துவக்கி வைத்தார்
கும்பகோணம், ஜூலை 24: கும்பகோணத்தில் நடைபெற்ற ஓரணியில் தமிழ்நாடு பேரணியை எம்எல்ஏ துவக்கி வைத்து பொதுமக்களுக்கு நான்காண்டு சாதனை விளக்க கையேடுகளை வழங்கினார். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகர திமுக சார்பில் பாலக்கரையில் உள்ள குழந்தைகள் நினைவு பூங்கா அருகே ஓரணியில் தமிழ்நாடு பேரணி மாநகர செயலாளரும், துணை மேயருமான சு.ப.தமிழழகன் தலைமையில் நடைபெற்றது. இதனை...
நான் முதல்வன் திட்டத்தில் உயர்கல்வி பயில 4ம் கட்ட வழிகாட்டல் குறைதீர் கூட்டம்
தஞ்சாவூர், ஜூலை 24: தஞ்சாவூர் மாவட்டம் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பள்ளிப் படிப்பினை முடித்த மாணவ-மாணவியர்கள் உயர் கல்வி பயில்வதற்கான நான்காம் கட்ட வழிகாட்டல் சிறப்பு குறைதீர் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் பள்ளி படிப்பினை முடித்த மாணவ-மாணவியர்கள் உயர் கல்வி பயில்வதற்கான சிறப்பு...
தேசிய மாம்பழ தினத்தை தஞ்சையில் அரசு திட்ட பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம்: கலெக்டர் தலைமையில் நடந்தது
தஞ்சாவூர், ஜூலை 23: தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் பாராளுமன்ற மற்றும் சட்டமறை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாலகணேஷ் முன்னிலையில் நேற்று நடைபெற்றது....
கும்பகோணம் அருகே மாம்பழங்களின் ஊட்டச்சத்து குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
கும்பகோணம், ஜூலை 23: கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் தேசிய மாம்பழ தினத்தை முன்னிட்டு மாம்பழங்களின் ஊட்டச்சத்தை உணர்த்தும் விதமாக மாணவ மாணவிகள் மாம்பழம் போல் வேடமடணிந்து அதில் நிறைந்துள்ள சத்துக்கள் குறித்து எடுத்துரைத்தனர். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 22ம் தேதி தேசிய மாம்பழ தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு...
தஞ்சையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்: குருவை தொகுப்பு திட்டத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வேண்டும்
தஞ்சாவூர், ஜூலை 23: தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தஞ்சை கோட்டாட்சியர் இலக்கியா தலைமை தாங்கினார். இதில் தஞ்சை பூதலூர் திருவையாறு திருக்காட்டுப்பள்ளி ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மனு அளித்தனர். ஜீவகுமார்: உய்யக்கொண்டான் கட்டளை வாய்க்காலில் இதுவரை தண்ணீர் வரவில்லை. எனவே தண்ணீர் திறக்கும்...
அன்னப்பன்பேட்டையில் இணைப்பு சாலை அமைக்க கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
தஞ்சாவூர், ஜூலை 22: தஞ்சை மாவட்ட அம்மாபேட்டை வட்டம் அன்னப்பன்பேட்டை விவசாய அணி தலைவர் செல்வராஜ் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜவிடம் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியதாவது: தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம் அன்னப்பன்பேட்டையில் பாசன வாய்க்கால் வழியாக நடவு எந்திரம், அறுவடை இயந்திரம், டிராக்டர் வாகனங்கள் முதலியவை செல் செல்வதற்கு 20...
திருவிடைமருதூர் திருமூலர் கோயிலில் அசுபதி நட்சத்திர வழிபாடு
திருவிடைமருதூர், ஜூலை 22: திருவிடைமருதூர் திருமூலர் கோவிலில் அசுபதி நட்சத்திர வழிபாடு திரளான பக்தர்கள் தரிசனம். திருவிடைமருதூர் அருகே உள்ள 69 சாத்தனூரில் உள்ள பிரசித்தி பெற்ற திருமந்திரம் அருளிய திருமூல நாயனார் அவதாரத் தலமாகிய திருமூலர் கோயில் ஆடி மாத அசுபதி நட்சத்திர சிறப்பு வழிபாடு நடந்தது. இதனை முன்னிட்டு திருமூலருக்கு மஞ்சள்,திரவியம் தேன்,பஞ்சாமிர்தம்,பால்,தயிர்...
தஞ்சை மாவட்டத்தில் மாநில அளவிலான ரோல்பால் போட்டி: சிறப்பாக விளையாடிய 12 பேர் தேசிய போட்டிக்கு தகுதி
தஞ்சாவூர், ஜூலை 22: தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாநில அளவிலான ரோல்பால் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள் வழங்கப்பட்டது. தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் 11 வயதுக்குட்பட்ட பிரிவில் மாநில அளவிலான ரோல்பால் விளையாட்டு போட்டியில் ஆண்கள் பிரிவில் செங்கப்பட்டு அணியும், பெண்கள் பிரிவில் கோவை மாவட்ட அணியும்...
அனைவருக்கும் கல்வி அவசியம் என்பதை வலியுறுத்தி ரோலர் ஸ்கேட்டிங்கில் சாதனை படைத்த 4 வயது சிறுவன்
தஞ்சாவூர், ஜூலை 21: தஞ்சையில் அனைவருக்கும் கல்வி அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில் ஜேடன் மேத்யூ என்ற 4 வயது சிறுவன் ரோலர் ஸ்கேட்டிங்கில் 3 கி.மீ தூரத்தை 10 நிமிடத்திற்குள் கடந்து இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை படைத்து விழிப்புணார்வு ஏற்படுத்தினார். பிற விளையாட்டுகளில் மக்கள் நம்மை...