காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய்களில் வெள்ள அபாய எச்சரிக்கை

  தஞ்சாவூர், ஜூலை 28: மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ள நிலையில், உபரி நீர் காவிரி ஆற்றில் 50,000 கன அடி முதல் 75,000 கன அடி வரை எந்தநேரத்திலும் திறந்து விடப்படலாம். திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் எனவும், வெள்ள அபாய எச்சரிக்கையும் காவிரி, வெண்ணாறு,...

கும்பகோணம் மாநகர திமுக சார்பில் நான்காண்டு சாதனை விளக்க கலைநிகழ்ச்சி

By Suresh
26 Jul 2025

கும்பகோணம், ஜூலை 26: கும்பகோணம் மாநகர திமுக சார்பில் திராவிட மாடல் முதல்வரின் நாடு போற்றும் நான்காண்டு சாதனை விளக்க புதுகை பூபாளம் கலைக்குழு பிரச்சார கலை நிகழ்ச்சியை உயர்கல்வித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் அருகே மாநகர திமுக சார்பில் திராவிட மாடல் முதல்வரின் நாடு போற்றும் நான்காண்டு சாதனை...

தஞ்சை மாவட்டத்தில் தமிழ்ச்செம்மல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

By Suresh
26 Jul 2025

தஞ்சாவூர், ஜூலை 26: தமிழ்ச்செம்மல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல். தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு வரும் ஆர்வலர்களைக் கண்டறிந்து அவர்தம் தமிழ்த்தொண்டினைப் பெருமைப்படுத்துமுகமாக தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை ஆண்டுதோறும் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒரு தமிழ் ஆர்வலரைத் தெரிவு செய்து அவர்களுக்கு ”தமிழ்ச்செம்மல்” விருது வழங்கி சிறப்பித்து...

கும்பகோணம் மாநகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 700 மனுக்கள்: 15 மனுக்களுக்கு உடனடி தீர்வு

By Suresh
26 Jul 2025

கும்பகோணம், ஜூலை 26: கும்பகோணம் மாநகராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பல்வேறு துறைகளில் விண்ணப்பிக்கப்பட்ட 15 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. அரசுத்துறையில் சேவைகள் திட்டங்களை அவர்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் உங்களுடன் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தை சிதம்பரத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்ததையடுத்து பொதுமக்களின் பேராதரவோடு சிறப்பாக நடைபெற்று...

திருவிடைமருதூர் அருகே பேருந்து சேவை நீட்டிப்பு

By MuthuKumar
24 Jul 2025

திருவிடைமருதூர், ஜூலை 25: திருவிடைமருதூர் அருகே சேங்கனூரில் பேருந்து சேவையை உயர்கல்வித்துறை அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி திருப்பனந்தாள் ஒன்றியம், சேங்கனூரில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, போக்குவரத்துத்துறை அமைச்சர் வழிக்காட்டுதலின்படியும், உயர்கல்விதுறை அமைச்சர் கோவி.செழியன் தலைமையில் பேருந்து நீட்டிப்பு சேவை துவக்க விழா நடைபெற்றது. இப்பகுதி பள்ளி, மாணவ,...

தஞ்சை மாவட்டத்தில் 31ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் தகவல்

By MuthuKumar
24 Jul 2025

தஞ்சாவூர், ஜூலை 25: இது குறித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடத்திட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், நிர்வாக காரணங்களை முன்னிட்டு 31.07.2025 வியாழக்கிழமை காலை 10 மணியளவில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாக கீழ்தளத்தில் உள்ள, பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள்...

தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி இறுதி கட்ட பணிகள் தீவிரம்

By MuthuKumar
24 Jul 2025

தஞ்சாவூர், ஜூலை 25: தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 1.38 லட்சம் ஏக்கரை தாண்டி நடவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் (தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை) விளங்குகிறது. இந்த மாவட்டங்கள் காவிரி டெல்டா பகுதி என அழைக்கப்படுகிறது. இங்கு குறுவை, சம்பா,...

பூதலூர் அருகே புதுஆற்றில் முதியவர் சடலம் மீட்பு

By MuthuKumar
23 Jul 2025

திருக்காட்டுப்பள்ளி, ஜூலை 24: வைரப்பெருமாள்பட்டி புதுஆற்றுப்பாலம் அருகில் ஆற்றில் ஒரு சடலம் மிதந்து செல்வதாக பூதலூர் போலீசாருக்கு தகவல் வந்தது.இதையடுத்து திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தினர் நிகழ்விடம் வந்து சடலத்தை மீட்டனர். போலீசார் விசாரணையில் இறந்தவர் கிளியூர் கள்ளர் தெருவை சேர்ந்த தங்கராஜ் மகன் செல்லத்துரை (65) என்பது தெரியவந்தது. பூதலூர் காவல் ஆய்வாளர்...

கும்பகோணத்தில் ஓரணியில் தமிழ்நாடு பேரணி எம்எல்ஏ துவக்கி வைத்தார்

By MuthuKumar
23 Jul 2025

கும்பகோணம், ஜூலை 24: கும்பகோணத்தில் நடைபெற்ற ஓரணியில் தமிழ்நாடு பேரணியை எம்எல்ஏ துவக்கி வைத்து பொதுமக்களுக்கு நான்காண்டு சாதனை விளக்க கையேடுகளை வழங்கினார். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகர திமுக சார்பில் பாலக்கரையில் உள்ள குழந்தைகள் நினைவு பூங்கா அருகே ஓரணியில் தமிழ்நாடு பேரணி மாநகர செயலாளரும், துணை மேயருமான சு.ப.தமிழழகன் தலைமையில் நடைபெற்றது. இதனை...

நான் முதல்வன் திட்டத்தில் உயர்கல்வி பயில 4ம் கட்ட வழிகாட்டல் குறைதீர் கூட்டம்

By MuthuKumar
23 Jul 2025

தஞ்சாவூர், ஜூலை 24: தஞ்சாவூர் மாவட்டம் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பள்ளிப் படிப்பினை முடித்த மாணவ-மாணவியர்கள் உயர் கல்வி பயில்வதற்கான நான்காம் கட்ட வழிகாட்டல் சிறப்பு குறைதீர் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் பள்ளி படிப்பினை முடித்த மாணவ-மாணவியர்கள் உயர் கல்வி பயில்வதற்கான சிறப்பு...