தஞ்சையில் சர்வதேச சதுரங்க போட்டி
தஞ்சாவூர், ஜூலை 30: தஞ்சையில் உள்ள கமலா - சுப்பிரமணியம் மேல்நிலைப் பள்ளியில் விமான சிட்டி மற்றும் கோல்டன் - ஸ்கொயர் சதுரங்க அகாடமி சர்பில் உலக அளவிலான செஸ் போட்டி 4 நாட்கள் நடைபெற்றது. போட்டியை தமிழ்நாடு சதுரங்க கழகத்தின் இணை செயலாளர் ரமேஷ், தெற்கு ரெயில்வே சர்வதேச மாஸ்டர் நித்தின் ஆகியோர்...
மாவட்டம் முழுவதும் 6 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
தஞ்சாவூர், ஜூலை 29: தஞ்சாவூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் 6 இடங்களில் இன்று நடைபெற உள்ளது என கலெக்டர் என பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கலெக்டர் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஜீலை 15 முதல் நவம்பர் 15 வரை 4 கட்டங்களாக 353 முகாம்கள்...
தஞ்சாவூரில் மக்கள் அதிகாரம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர், ஜூலை 29: உயர் நீதிமன்ற நீதிபதி சாமிநாதனால் அறிவிக்கப்பட்ட வழக்குரைஞர் வாஞ்சிநாதன் மீதான அவதூறு வழக்கு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி மக்கள் அதிகாரம் சார்பில் தஞ்சாவூரில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மனித உரிமை போராளியும், மதுரை உயர்நீதிமன்ற கிளை வழக்குரைஞருமான வாஞ்சிநாதன் மீது உயர்நீதிமன்ற நீதிபதி சாமிநாதன் அவமதிப்பு வழக்கு...
நடைபயிலும் வண்ணமயில்...விரிவாக்கம் செய்யப்பட்ட சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மரக்கன்றுகள்
தஞ்சாவூர், ஜூலை 29: தஞ்சாவூர் பட்டுக்கோட்டை பைபாஸ் சாலையில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சாலை விரிவாக்க பணிக்காக அந்த பகுதியில் இருந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. இந்த நிலையில் வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக நெடுஞ்சாலைத்துறை சார்பாக மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டது. எனவே தஞ்சாவூர் கோட்ட பொறியாளர் செந்தில்குமார் அறிவுறுத்தலின் பேரில்...
விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டத்தால் களைகட்டிய தஞ்சை பெரிய கோவில்
தஞ்சாவூர், ஜூலை 28: மாமன்னன் ராஜராஜசோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். தமிழர்களின் கட்டிட கலைக்கும், சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் பெரியகோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், முருகன் என பல்வேறு சன்னதிகள் உள்ளன. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின்...
கும்பகோணம் அருகே மாநில அளவிலான வில்வித்தை போட்டி
கும்பகோணம், ஜூலை 28: கும்பகோணம் அருகே கொரநாட்டுகருப்பூரில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் மாநில அளவிலான வில்வித்தை போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் வயதின் அடிப்படையில் மாணவ, மாணவியர்களுக்கு 5 பிரிவுகளாக பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இப்போட்டியில் சிறப்பாக...
காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய்களில் வெள்ள அபாய எச்சரிக்கை
தஞ்சாவூர், ஜூலை 28: மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ள நிலையில், உபரி நீர் காவிரி ஆற்றில் 50,000 கன அடி முதல் 75,000 கன அடி வரை எந்தநேரத்திலும் திறந்து விடப்படலாம். திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் எனவும், வெள்ள அபாய எச்சரிக்கையும் காவிரி, வெண்ணாறு,...
கும்பகோணம் மாநகர திமுக சார்பில் நான்காண்டு சாதனை விளக்க கலைநிகழ்ச்சி
கும்பகோணம், ஜூலை 26: கும்பகோணம் மாநகர திமுக சார்பில் திராவிட மாடல் முதல்வரின் நாடு போற்றும் நான்காண்டு சாதனை விளக்க புதுகை பூபாளம் கலைக்குழு பிரச்சார கலை நிகழ்ச்சியை உயர்கல்வித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் அருகே மாநகர திமுக சார்பில் திராவிட மாடல் முதல்வரின் நாடு போற்றும் நான்காண்டு சாதனை...
தஞ்சை மாவட்டத்தில் தமிழ்ச்செம்மல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
தஞ்சாவூர், ஜூலை 26: தமிழ்ச்செம்மல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல். தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு வரும் ஆர்வலர்களைக் கண்டறிந்து அவர்தம் தமிழ்த்தொண்டினைப் பெருமைப்படுத்துமுகமாக தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை ஆண்டுதோறும் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒரு தமிழ் ஆர்வலரைத் தெரிவு செய்து அவர்களுக்கு ”தமிழ்ச்செம்மல்” விருது வழங்கி சிறப்பித்து...