தஞ்சையில் அவரைக்காய் விலை உயர்வு
தஞ்சாவூர், டிச.5: தொடர்மழை காரணமாக தஞ்சைக்கு காய்கறி வரத்து குறைந்ததால் தொடர்ந்து விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. இதனால் அவரைக்காய் விலை மீண்டும் சதமடித்துள்ளது. கிலோ ரூ.110-க்கு விற்றதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சை அரண்மனை வளாகத்தில் காமராஜர் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மகாராஷ்டிரா,...
கார்த்திகை தீபத் திருநாள் தஞ்சையில் பொரி விற்பனை படுஜோர்
தஞ்சாவூர், டிச.3: கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு தஞ்சையில் பொறி விற்பனை அமோகம். ஒரு கிலோ பொரி ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்டது. கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு தஞ்சையில் பொறி விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. அதேபோல் கீழவாசல், மருத்துவக் கல்லூரி சாலையில் பல கடைகளில் அகல் விளக்குகள், மண் விளக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன....
ஆசிரியர்களுக்கு எம்எல்ஏ வேண்டுகோள்
அரசு கல்வி வளர்ச்சிக்கு பல கோடி ரூபாயை செலவு செய்கிறது. மாணவர்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் பள்ளிக் கல்வித்துறை செயல்படுத்தி வருகிறது. இந்தப் பள்ளியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சம், தமிழ்நாடு அரசு நிதி ரூ.2.50 கோடி என ரூ.3 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதான வளாகத்தில் மினி ஸ்டேடியம் அமைக்கப்பட...
தஞ்சை ரயில் நிலையத்தின் 165ம் ஆண்டு தொடக்க விழா பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
தஞ்சாவூர், டிச.3: தஞ்சாவூர் ரயில் நிலையத்தின் 165ம் ஆண்டு தொடக்க விழாவை பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கத்தினர் கொண்டாடினர். தமிழகத்தின் மிகப்பழமையான ரயில் நிலையங்களில் தஞ்சாவூர் ரெயில் நிலையமும் ஒன்று. தஞ்சாவூரில் இருந்து நாள்தோறும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகிறது. இது அதிக வருவாய் கொடுக்கக்கூடிய ரயில் நிலையமாகும். தஞ்சாவூர்...
ஒரத்தநாடு அருகே புதிதாக போடப்பட்ட சாலைகளின் தரம் குறித்து நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு
ஒரத்தநாடு, டிச. 2: ஒரத்தநாடு அருகே உள்ள வடக்கு நத்தம் பருத்திக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக போடப்பட்ட சாலைகளின் தரம் குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு நெடுஞ்சாலைத்துறை கட்டுமான மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்திற்கு உட்பட்ட வடக்கு நத்தம் , பருத்திக்கோட்டை வாண்டையார் இருப்பு, சிவ விடுதி குலந்திரான்பட்டு ஆகிய...
புதிய தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கம் பெயர் பதிவு செய்ய அழைப்பு
தஞ்சாவூர். டிச. 2: தஞ்சை மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்து திட்ட விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளது. மேலும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், கூட்டுறவு, நீர்ப்பாசனம்,...
உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி: எச்ஐவி பாதித்த 2110 பேருக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை
தஞ்சாவூர், டிச. 2: தஞ்சை மாவட்டத்தில் எச்ஐவியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் 2110 பேருக்கு தமிழக அரசின் சார்பில் மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.1000 வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு...
திருவையாறு வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு இ-பைலிங் முறையை கைவிட வலியுறுத்தல்
திருவையாறு, நவ.29: திருவையாறு ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் சார்பில் நீதிமன்றங்களில் இஃபைலிங் முறையை கைவிட வலியுறுத்தி ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு (ஜெஏஏசி) அறிவுறுத்தலின்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் இ-பைலிங் செய்வதற்கான அடிப்படை கட்டமைப்புகளை 1.12.2025 தேதி முதல் கட்டாயமாக்குவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினை...
தஞ்சையில் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர், நவ.29: தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை சார்பில் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கவுன்சில் செயலாளர் சேவியர் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் முத்தையன், துணை செயலாளர் சேகர், அஇதொமுச பேரவை வள்ளுவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட...