ரூ.75 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை
காரிமங்கலம், ஜூலை 9: காரிமங்கலம் சந்தை செவ்வாய்க்கிழமை தோறும் நடந்து வருகிறது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில் சுமார் 500 ஆடுகள் மற்றும் 350 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், ரூ.40 லட்சத்திற்கு ஆடுகளும், ரூ.32 லட்சத்திற்கு மாடுகளும்...
ரேஷன் கடை திறப்பு
அரூர், ஜூலை 9: அரூர் அருகே உள்ள மத்தியம்பட்டி ஊராட்சி சட்டையம்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, ரூ.13.25 லட்சம் மதிப்பில் ரேஷன் கடை கட்டிடம் கட்டப்பட்டது. இதனை நேற்று அதிமுக எம்எல்ஏ சம்பத்குமார் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், ஒன்றிய பொருளாளர் சாமிக்கண்ணு, அன்பழகன், பாஷா, ஏகநாதன், செந்தில்குமார், சிவாஜி, விஜயன், சிவமணி...
பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு; வாலிபர்களுக்கு வலை
தர்மபுரி, ஜூலை 8: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஏ.பள்ளிப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேசமணி. இவரது மனைவி முனியம்மாள் (36). இவர் மருந்து கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, முனியம்மா டூவீலரில் பாப்பாரப்பட்டி அருகே ஏஜிஅள்ளியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து, மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். கடத்தூர்...
ஏரியிலிருந்து கல் வெட்டி கடத்தியவர் தப்பியோட்டம்
பாப்பிரெட்டிப்பட்டி, ஜூலை 8: பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பட்டவர்த்தி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ், அரசு அனுமதியின்றி, அங்குள்ள ஏரியில் சக்கை கல், வெட்டி எடுப்பதாக, வந்த புகாரின்பேரில் விஏஓ தீபா சம்பவ இடத்துக்கு சென்றார். அவரை பார்த்ததும் டிராக்டரை அங்கேயே விட்டுவிட்டு சுரேஷ் தப்பியோடினார். இதையடுத்து, ஏ.பள்ளிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் டிராக்டரை ஒப்படைத்து விஏஓ தீபா...
மொரப்பூர் பகுதியில் வெண்டைக்காய் விலை உயர்வு
அரூர், ஜூலை 8: மொரப்பூர், கம்பைநல்லூர், நல்லம்பட்டி பகுதிகளில் வெண்டைக்காய் விளைச்சல் குறைந்துள்ளது. 2 மாத பயிரான வெண்டை, பாசன வசதி இருந்தால், 45 நாட்களில் விளைச்சல் தர துவங்கும். தொடர்ந்து இரண்டு மாதம் வரை, ஒரு நாள்விட்டு ஒருநாள் அறுவடை செய்தால், 1 ஏக்கரில் நாளொன்றுக்கு 100 முதல் 120 கிலோ வரை விளைச்சல்...
தர்மபுரியில் போக்குவரத்து மாற்றம்
தர்மபுரி, ஜூலை 7: ஓசூரில் பாலம் விரிசல் காரணமாக, சர்வீஸ் சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, தர்மபுரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் மாற்றம் செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பஸ் ஸ்டாண்ட் முன்புள்ள தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் மையப் பகுதியில் உள்ள இணைப்பில் கடந்த மாதம் 21ம்தேதி திடீரென விரிசல் ஏற்பட்டது. இணைப்பு பகுதியில்...
சமூக நல்லிணக்க ஊராட்சி விருது
தர்மபுரி: ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருது வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சதீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும், சமூக ஒற்றுமையினையும் கடைபிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கவுரவிக்கும் வகையில், தகுதி படைத்த 10 ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுடன் தலா ரூ.1 கோடி வழங்கப்படும்...
ரூ.36 கோடியில் 6 மாடியுடன் கலெக்டர் அலுவலக கட்டிடம்
தர்மபுரி: தர்மபுரியில், ரூ.36.62 கோடியில், 6 மாடி கொண்ட புதிய கலெக்டர் அலுவலக கட்டிடத்தை காணொளி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (7ம்தேதி) திறந்து வைக்கிறார். இதில் 2 அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். தர்மபுரி கலெக்டர் அலுவலகம் 1967ம் ஆண்டு கட்டப்பட்டது. இதில், கலெக்டர் உள்ளிட்ட முக்கிய அலுவலகம் இயங்கி வருகிறது. தற்போதைய கலெக்டர் அலுவலகம்...
கார் மீது மோதி கவிழ்ந்த லாரி
நல்லம்பள்ளி, ஜூலை 6: நல்லம்பள்ளி அருகே, கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதால், ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இருந்து பிளாஸ்டிக் பைப் ஏற்றிய லாரி ஒன்று, கும்பகோணத்தை நோக்கி, நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. லாரியை திருச்சி மாவட்டம், விராலிமலையை சேர்ந்த பரமசிவம் (28) என்பவர் ஓட்டி வந்தார்....