வெற்று அறிவிப்போடு நிற்கும் இருவழி ரயில் பாதை திட்டம்

தர்மபுரி, ஜூலை 17: ஓமலூரில் இருந்து தர்மபுரி வழியாக ஓசூர் வரை இருவழி ரயில் பாதை திட்டம், அறிவிப்போடு நிற்கும் நிலையில், திட்டப்பணிகளை நிறைவேற்ற வேண்டும் என ரயில்வே பயணிகள் வலியுறுத்தியுள்ளனர். தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் பின்புறம் தர்மபுரி ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில்நிலையம் வழியாக சேலம் - பெங்களூர், பெங்களூர் -...

மூதாட்டியிடம் 2 பவுன் நகை திருடிச் சென்ற பெண்

By MuthuKumar
15 Jul 2025

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பூகாநல்லி கிராமத்தை சேர்ந்தவர் வேட்ராயன். இவரது மனைவி தங்கம்மாள்(61). நேற்று முன்தினம், தங்கம்மாள் கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள, கட்டுமான தொழிலாளர் நல வாரியத்துக்கு விண்ணப்பிக்க வந்தார். மெயின்ரோட்டில் இருந்து அலுவலகத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு பெண், தங்கம்மாளிடம், ‘தோடு, நகைகளை அணிந்து...

பஸ் படிக்கட்டில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்

By MuthuKumar
15 Jul 2025

பாலக்கோடு: பாலக்கோடு நகர பஸ்களில், மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி, ஆபத்தான முறையில் பயணம் செய்து வருவதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். பாலக்கோடு போக்குவரத்து பணிமனையில் இருந்து, தினதோறும் நூற்றுக்கும் மேற்பட்ட நகர மற்றும் புறநகர் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. கிராம பகுதிகளுக்கு செல்லும் நகர...

மாவட்டத்தில் அக்.3 வரை 176 முகாம்கள் நடத்தப்படும்

By MuthuKumar
15 Jul 2025

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், அக்டோபர் 3ம் தேதி வரை உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் 176 முகாம்கள் நடத்தப்படும் என கலெக்டர் தெரிவித்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை, சிதம்பரத்தில் நேற்று தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, தர்மபுரி நகராட்சி மதிகோண்பாளையம் டிஎன்ஜி மகாலில் நடந்த திட்ட முகாமை, கலெக்டர் சதீஷ் தொடங்கி வைத்து,...

மது போதையில் தகராறு செய்பவர் மீது நடவடிக்கை

By MuthuKumar
14 Jul 2025

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே முள்ளிக்காடு கிராமத்தை சேர்ந்த மாதவன் மனைவி சுதா (39). மகளிர் சங்க தலைவியாக உள்ள இவர், நேற்று தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பாப்பிரெட்டிப்பட்டி அருகே, முள்ளிக்காடு கிராமத்தில், எனது கணவர் மாதப்பன் மற்றும் 2 மகன்கள், ஒரு மகளுடன் வசித்து வருகிறேன். நான்...

பட்டதாரி ஆசிரியர்கள் 47 பேருக்கு பணிமாறுதல்

By MuthuKumar
14 Jul 2025

தர்மபுரி: தர்மபுரி முதன்மை கல்வி அலுவலகத்தில், கடந்த 1ம்தேதி முதல் ஆசிரியர் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு ஆன்லைன் கலந்தாய்வு நடந்து வருகிறது. தர்மபுரி முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா முன்னிலையில், ஆன்லைன் மூலம் கடந்த 1ம் தேதி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் பணி மாறுதல் கலந்தாய்வு...

மாவட்டத்தில் 15 தாசில்தார்கள் அதிரடி இடமாற்றம்

By MuthuKumar
14 Jul 2025

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் நிர்வாக நலன் கருதி, 15 தாசில்தார்களை அதிரடியாக இடமாற்றம் செய்து கலெக்டர் சதீஸ் உத்தரவிட்டுள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய 7 தாலுகா அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. கலெக்டர் அறிவுறுத்தும் அனைத்து வருவாய்த்துறை சார்பான அரசு பணிகளும், தாலுகா அலுவலகத்தின் வழியாக வருவாய்...

தொடக்கக்கல்வி அலுவலர் இடமாற்றம்

By Arun Kumar
13 Jul 2025

  தர்மபுரி, ஜூலை 14: அரூரில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலராக பணிபுரிந்து வந்தவர் சின்னமாது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு, அரூர் பகுதியில் உள்ள மலை கிராமங்களில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக கலந்தாய்வு நடந்தது. அப்போது, சின்னமாதுவிடம் காலி பணியிடங்களை முறையாக நிரப்ப வேண்டும் என்று கலந்தாய்வில் பங்கேற்றவர்கள் கோரிக்கை...

டிரான்ஸ்பார்மர் பழுதால் இருளில் மூழ்கிய கிராமம்

By Arun Kumar
13 Jul 2025

  அரூர், ஜூலை 14: டிரான்ஸ்பார்மர் பழுதால் அரூரை அடுத்த எல்லப்புடையாம்பட்டி கிராமம் கடந்த இரண்டு நாளாக இருளில் மூழ்கியுள்ளது. அரூர் தாலுகா, எல்லப்புடையாம்பட்டி கிராமத்தில், சுமார் 6 மாதங்களுக்கு முன்பு சித்தேரி மின்பாதையில் இருந்து 25 கிலோவாட் திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. இந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து எல்லப்புடையாம்பட்டி கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு மின்...

பருவமழையை எதிர்பார்த்து உழவு பணிகள் தொடக்கம்

By Arun Kumar
13 Jul 2025

  தர்மபுரி, ஜூலை 14: வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து பழைய தர்மபுரியில், நெல் நாற்று நடவு பணிகள் தொடங்கியது. தர்மபுரி மாவட்டத்தில் நெல், கரும்பு, மஞ்சள் ஆகியவை முக்கிய சாகுபடி பயிர்களாகும். மாவட்டத்தில் தர்மபுரி, அரூர், பாப்பிரெட்டிபட்டி ஒன்றியங்களில் 24 ஆயிரம் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. நடப்பாண்டில் தென்மேற்கு பருவ மழை பரவலாக பெய்துள்ள...