தர்மபுரியில் பரவலாக மழை
தர்மபுரி, ஜூலை 20: தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் அனல்காற்று வீசி வருகிறது. மாலை மற்றும் இரவு நேரங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை 4.30 மணிக்கு கருமேகம் திரண்டு, திடீரென மழை பெய்தது. இந்த மழை 6.30 மணிவரை நீடித்தது. தொடர்ந்து 2 மணி நேரம் மழை...
உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு
தர்மபுரி, ஜூலை 19: படித்த வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசின் சார்பில் படித்த வேலைவாய்ப்பற்றோர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி மாதம் ஒன்றுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200ம், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300ம்,...
ஆசிரியை, மாணவி உள்பட 3 பேர் மாயம்
தர்மபுரி, ஜூலை 19: தர்மபுரி வி.செட்டிஅள்ளியை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி ஹாப்பி பியூவ்லா (36). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற பியூவ்லா, மாலையில் வீடு திரும்பவில்லை. கணவர் செல்வகுமார், உறவினர்கள் மற்றும் தோழிகளின் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி...
ராஜாபேட்டை-குரும்பட்டி இடையே ரூ.9 கோடியில் நான்கு வழிச்சாலை
தர்மபுரி, ஜூலை 19: தர்மபுரி அருகே ராஜாபேட்டை -குரும்பட்டி வரை ரூ.9 கோடி மதிப்பீட்டில் 4 வழிச்சாலை அமைக்க விரைவில் டெண்டர் விடப்படுகிறது. தர்மபுரியில் இருந்து அரூர் வழியாக திருவண்ணாமலைக்கு தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. அணிவகுக்கும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, பொதுமக்களின் கோரிக்கையின்பேரில் தற்போது நான்கு வழி...
அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
தர்மபுரி, ஜூலை 18: ஆடி மாதம் துவங்கியதைடுத்து, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. அம்மனுக்கு உகந்த ஆடி மாதம் நேற்று தொடங்கியது. ஆடி 1ம் தேதியையொட்டி, இலக்கியம்பட்டி சாலை மாரியம்மன் கோயிலில் அதிகாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை 9 மணியளவில் சிறப்பு அலங்காரமும், தொடர்ந்து விசேஷ...
வெறிநாய் கடித்து 9 ஆடுகள் பலி
நல்லம்பள்ளி, ஜூலை 18: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே நார்த்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சாலம்மாள்(62). விவசாயம் செய்து வரும் இவர், ஆடு, மாடுகளையும் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம், மேய்ச்சலுக்கு பிறகு ஆடு -மாடுகளை வழக்கம்போல் வீட்டின் அருகில் உள்ள பட்டியில் கட்டி வைத்து விட்டு சென்றார். நேற்று காலை பட்டிக்கு சென்று பார்த்தபோது அங்கிருந்த...
நடப்பாண்டு 1,088 டன் விதைகள் வழங்க இலக்கு
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் 2025 -2026ம் ஆண்டிற்கு 1.088 டன் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருத்தி சான்று விதைகள் உள்ளிட்டவை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் வரை 40 டன் விதைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி விவசாயத்தை பிரதானமாக கொண்ட மாவட்டமாகும். இங்கு சின்னாறு மற்றும் வாணியாறு, தொப்பையாறு,...
ஒரு மணிநேரம் நீடித்த மழை
தர்மபுரி, ஜூலை 17: தர்மபுரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக பகலில் அனல் காற்று வீசியது. மாலை நேரங்களில் கருமேகம் வானில் திரண்டு வந்த நிலையில், நேற்று மாலை 5.30 மணியளவில் திடீரென மழை பெய்தது. இந்த மழை ஒருமணி நேரம் நீடித்தது. ஒரு மணிநேரம் பெய்த மழையால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தர்மபுரி...
தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம்
தர்மபுரி, ஜூலை 17: தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (18ம்தேதி) நடக்கிறது. இதுகுறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியார்துறை நிறுவனங்களும் - தனியார்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் கலந்துகொள்ளும்...