மூச்சுத்திணறலால் பெண் குழந்தை சாவு
காரிமங்கலம், நவ.25: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த திண்டல் ஊராட்சி தெள்ளனஅள்ளியை சேர்ந்தவர் ஸ்ரீமதி(25). இவரது கணவர் தனசேகர்(30). இவர்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. கடந்த சில நாட்களாக குழந்தைக்கு சளி தொந்தரவு இருந்த நிலையில், மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குழந்தையை காரிமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர்,...
ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கரடு முரடான தார்சாலை
பாப்பாரப்பட்டி, நவ.22: பாப்பாரப்பட்டி ஒன்றியம் பாலவாடி ஊராட்சிக்கு உட்பட்ட பையூரான் கொட்டாய் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். பள்ளிப்பட்டி - சவுளூர் சாலையில் இருந்து செல்லும் இணைப்பு தார்ச்சாலையானது போதிய பராமரிப்பு இல்லாமல் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கரடு முரடாக மாறியுள்ளது. சைக்கிள், டூவீலர் உள்ளிட்டவை செல்ல முடியாத அளவுக்கு உள்ளது. அடிக்கடி டயர்...
மண் கடத்திய பொக்லைன், டிப்பர் லாரி பறிமுதல்
காரிமங்கலம், நவ.22: தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏரிகளில் சட்ட விரோதமாக சிலர் மண் வெட்டி கடத்துவதாக புகார்கள் வந்தது. பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை வசம் உள்ள ஏரியில், அதிகாரிகள் சிலரின் ஆசியுடன் மண் கடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் காரிமங்கலம் அடுத்த பைசுஅள்ளி குண்டலபட்டி ஏரியில் மண் எடுக்க, பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும்...
சாலையை கடந்த விவசாயி டூவீலர் மோதியதில் பலி
தர்மபுரி, நவ.22: தர்மபுரி மாவட்டம் அரூர் எல்லைப்புடையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (51). விவசாயியான இவர் கடந்த 8ம்தேதி அதே பகுதியை சேர்ந்த தனபால் என்பவருடன் பைக்கில், அரூர் நோக்கி சென்றார். வேடியப்பன் கோயில் அருகே வந்த போது, ராஜமாணிக்கம் வாகனத்தில் இருந்து கீழே இறங்கியுள்ளார். பஸ் நிறுத்தம் செல்வதற்காக ரோட்டை கடக்க முயன்றபோது, எதிரே...
சிதிலமான சாலையை சீரமைக்க நடவடிக்கை
பாப்பாரப்பட்டி, நவ.21: சித்தனஅள்ளி கிராமத்துக்கு செல்லும் தார்சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர். பாப்பாரப்பட்டி அருகே உள்ள சித்தனஅள்ளி கிராமத்தில், சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் பயன்பாட்டில் உள்ள தார்சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கரடுமுரடாக உள்ளது. பாப்பாரப்பட்டி பாலக்கோடு நெடுஞ்சாலையில் இருந்து ஜெர்தலாவ் கிளை கால்வாய் வரை செல்லும்,...
தொடர் மழையால் நிரம்பிய நீர்நிலைகள்
பென்னாகரம், நவ. 21: பென்னாகரம் சுற்றுவட்டாரத்தில் இரவில் பெய்யும் கனமழையால், ஏரி, குளம் மற்றும் குட்டைகள் நிரம்பி, தடுப்பணை வழியாக உபரிநீர் வழிந்தோடுகிறது. தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த 3 நாட்களாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள ஏரி, குளம், குட்டைகள் என நீர்நிலைகள் அனைத்தும் நிரம்ப...
5 வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை
தர்மபுரி, நவ.21: தர்மபுரியில் ஒரு தாழ்தள பேருந்து உள்ளிட்ட 5 புதிய பேருந்து சேவையை கலெக்டர் தொடங்கி வைத்தார். விழாவில் எம்பி, எம்எல்ஏ பங்கேற்றனர். தர்மபுரி மண்டல அரசு போக்குவரத்து கழக சார்பில், தர்மபுரி-பென்னாகரம் வழித்தடத்தில், ஒரு புதிய தாழ்தள நகரப் பேருந்து சேவை மற்றும் புதிதாக 5 மகளிர் விடியல் பயண பேருந்து சேவைகள்...
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தர்மபுரி, நவ.19: தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நாளை (20ம்தேதி) முற்பகல் 10 மணிக்கு, கலெக்டர் அலுவலகத்தில் அதியன் கூட்டரங்கில் நடக்கிறது. இக்கூட்டத்திற்கு கலெக்டர் சதீஸ் தலைமை வகிக்கிறார். எனவே, தர்மபுரி மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு, வேளாண்மை தொடர்பான தங்களது குறைகள், கருத்துகளை எடுத்துக்...
அரூர் வணிகர் சங்க நிர்வாகிகள் தேர்வு
அரூர், நவ.19: அரூர் பஸ் நிலைய சிறு வணிகர் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம், நேற்று சங்க தலைவர் சரவணன் தலைமையில் நடந்தது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக சரவணன், செயலாளராக செந்தில், பொருளாளராக நாகராஜ், ஆலோசகராக ஓய்வுபெற்ற ஆசிரியர் லோகநாதன், கவுரவ தலைவர்களாக வெங்கடேசன், பர்கத், செய்தி தொடர்பாளராக மணவாளன்...