தனியார் நிதி நிறுவன மேலாளர் வீட்டில் கொள்ளை முயற்சி
தர்மபுரி, நவ. 28: தர்மபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் வன்னியகுலம் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகன் (40). தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியும் வேலைக்கு சென்று வருகிறார். நேற்று முன்தினம் கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு, வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளனர். மாலையில் வீட்டுக்கு வந்து பார்த்த போது, பூட்டு...
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா
தர்மபுரி, நவ.28: தர்மபுரியில் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஆ.மணி எம்பி தலைமை வகித்தார். நகர பொறுப்பாளர்கள் நாட்டான் மாது, கவுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தர்மபுரி 4 ரோடு, உழவர்...
மாரியம்மன் கோயிலில் மண்டல பூஜை நிறைவு
காரிமங்கலம், நவ.27: காரிமங்கலம் வெள்ளையன் கொட்டாவூர் மகாசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா, கடந்த மாதம் நடந்தது. இதையொட்டி நாள்தோறும் மண்டல பூஜை நடத்தப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் மற்றும் அன்னதானம் நடந்தது. மண்டல பூஜை நிறைவு நாளான நேற்று காலை அம்மனுக்கு மகா அபிஷேகம், வெள்ளி சாத்துபடி, மகா...
315 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
தர்மபுரி, நவ.27: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாயக்கனஅள்ளி ஊராட்சி சோலைக்கொட்டாய் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். விழாவில், பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி, பள்ளியில் படிக்கும் 315 மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினார். இதில், முன்னாள் ஒன்றிய...
கலெக்டர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
தர்மபுரி, நவ.27: தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், 76வது இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு, உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் தலைமையில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை அனைத்து துறை அலுவலர்களும் வாசித்தனர். இந்திய மக்களாகிய நாம், இந்திய நாட்டின் இறையாண்மையும், சமநலச்சமுதாயமும், சமயச்சார்பின்மையும் மக்களாட்சி முறையும்...
வாராகி அம்மனுக்கு பஞ்சமி சிறப்பு பூஜை
காரிமங்கலம், நவ.26: காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளி தானப்ப கவுண்டர் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அஷ்ட வாராகி அம்மன் கோயிலில், வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு ஹோமம் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம், பூஜைகள், தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தேங்காய் தீபம் ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை...
அரூர் அருகே தடுப்புச்சுவரில் டூவீலர் மோதி வாலிபர் பலி
தர்மபுரி, நவ.26: தர்மபுரி மாவட்டம், அரூர் ஜடையம்பட்டி பகுதியைச் சேர்ந்த மோகன் மகன் பிரசாத் (25). இவர் நேற்று முன்தினம், தனது நண்பர் தரண் என்பவரை தனது டூவீலரில் ஏற்றி கொண்டு, ஜடையம்பட்டி- மொரப்பூர் சாலையில் உள்ள மளிகை கடைக்கு பொருட்களை வாங்க சென்றுள்ளார். பின்னர், மொரப்பூர்- திருப்பத்தூர் சாலையில் வந்து கொண்டிருந்த போது, பிரசாத்தின்...
ஒகேனக்கல் காவிரியில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் சடலமாக மீட்பு
பென்னாகரம், நவ. 26: பீகார் மாநிலம், பாட்னா சம்ரான் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹரிகர் பிரசாத் மகன் முன்னாகுமார்(30). பெரியாம்பட்டியில் உள்ள ஹாலோ பிரிக்ஸ் கம்பெனியில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த 23ம் தேதி, நண்பர்கள் 8 பேருடன் ஒகேனக்கல்லுக்கு சென்றார். ஊட்டமலை பரிசல் துறை காவிரி ஆற்றில் குளித்த போது, முன்னாகுமார் ஆற்றில்...
வாணியாறு அணையில் இருந்து உபரிநீர் திறப்பு
பாப்பிரெட்டிப்பட்டி, நவ. 25: பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வாணியார் அணையில் இருந்து, உபரிநீர் திறந்து விடப்பட்டதை அடுத்து ஆற்றங்கரையோரத்தில் உள்ள வெங்கடாசமுத்திரம் ஊராட்சி உட்பட்ட பகுதியில் உள்ள வாணியாற்றின் பாலம் அருகே பாப்பிரெட்டிப்பட்டி மில்லில் இருந்து, பொம்மிடி சாலை வரை பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது. ஊராட்சி செயலாளர் கோவிந்தராஜ், மண்டல...