எஸ்எஸ்ஐ.,களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா
அரூர், ஜூலை 2: அரூர் அருகே கோபிநாதம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ.,க்களாக பணிபுரிந்த பிரகாசம், கமலநாதன், ஆனந்தன் ஆகியோருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா, கோபிநாதம்பட்டியில் நடந்தது. இதில், அரூர் போலீஸ் டி.எஸ்.பி., ராமமூர்த்தி (பொ), இன்ஸ்பெக்டர் லட்சுமி ஆகியோர், கமலநாதன், ஆனந்தன், பிரகாசம் ஆகியோருக்கு சால்வை அணிவித்து கவுரவித்தனர். விழாவில், போலீசாரின் உறவினர்கள் கலந்து...
டூவீலர் மோதி பள்ளி சிறுமி பலி
பாலக்கோடு, ஜூலை 2: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வேலாவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சித்தன். இவரது மகள் சஷ்மிதா (9). தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று முன்தினம், வீட்டுக்கு அருகில் பள்ளி பஸ்சிற்காக சிறுமி காத்து கொண்டிருந்தாள். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த டூவீலர், அந்த சிறுமி மீது மோதி விட்டு...
பூட்டிய வீட்டில் திடீர் தீ விபத்து
அரூர், ஜூலை 2: தர்மபுரி மாவட்டம், அரூர் பெரியமண்டி தெருவில் விஜயா என்பவர் தனியாக வசித்து வருகிறார். இவர் நேற்று காலை, வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். பிற்பகல் 12 மணி அளவில், திடீரென வீட்டில் ஜன்னல் வழியாக புகை வருவதை, அருகில் வசிப்பவர்கள் பார்த்து, விஜயாவுக்கு செல்போனில் தகவல் கொடுத்தனர். இதையடுத்து...
நாய்கள் கடித்து குதறி மான் சாவு
அரூர், ஜூலை 1: அரூரில் அனைத்து பகுதிகளிலும் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் வாகனங்களில் செல்வோர், பள்ளி செல்லும் மாணவர்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் தெருநாய்களால் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். அரூர் பகுதியை ஒட்டிய காப்புகாடு பகுதியில், அதிக அளவில் மான்கள் உள்ளது. அவ்வபோது வழி தவறி, நகர் பகுதிக்கும், சாலைக்கும் வந்து விடுகிறது....
ரூ.29லட்சத்திற்கு பருத்தி ஏலம்
அரூர், ஜூலை 1: அரூர் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கத்தில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் பருத்தியை இந்த அரூர் வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு விற்பனைக்கு எடுத்து வந்தனர். நடப்பு வாரம் நடந்த ஏலத்தில், 168க்கும் மேற்பட்ட விவசாயிகள், 1050 பருத்தி மூட்டைகளை...
ரூ.18 லட்சத்திற்கு தேங்காய் விற்பனை
காரிமங்கலம், ஜூலை 1: காரிமங்கலம் வாரச்சந்தை செவ்வாய்க்கிழமை தோறும் நடந்து வருகிறது. அதற்கு முன்னதாக திங்கட்கிழமை காலை முதல் தேங்காய் சந்தை நடக்கிறது. நேற்று நடந்த சந்தையில், சுமார் 1 லட்சத்து 50ஆயிரம் தேங்காய் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், தேங்காய் அளவை பொறுத்து ரூ.14 முதல் ரூ.21வரை பல்வேறு ரகங்களில் தேங்காய் விற்பனை நடந்தது....
சாலை விரிவாக்க பணிகள் மும்முரம்
தர்மபுரி, ஜூன் 27: தர்மபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் சாலை வழியாக தினமும் 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் செல்கின்றன. இப்பகுதியில் அடிக்கடி நிகழும் விபத்துகளை தவிர்க்கும் விதமாக, தர்மபுரி மாவட்டம், தொப்பூரில் ரூ.775 கோடியில் உயர்மட்ட நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதையொட்டி, பழைய போலீஸ் குடியிருப்புகள் அருகே, உயரமான நெடுஞ்சாலை...
சங்கத்தினர் வேலை நிறுத்தம்
அரூர், ஜூன் 27: அரூர் பைபாஸ் ரோட்டில், அரூர் வட்டாரத்தில் உள்ள பொக்லைன் வாகன உரிமையாளர்கள் சங்கம் சார்பில், உதிரி பாகங்கள் விலை உயர்வு, புதிய வாகனங்கள் விலை உயர்வு, டீசல் விலை உயர்வு, இன்சூரன்ஸ் மற்றும் சாலை வரி உயர்வு உள்ளிட்டவற்றை வாபஸ் பெறுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இரண்டு நாள்,...
டாக்டரின் டூவீலர் திருடியவர் கைது
தர்மபுரி, ஜூன் 27: தர்மபுரி குமாரசாமிப்பேட்டையை சேர்ந்தவர் திருவரசன் (33). தர்மபுரி மாவட்ட சுகாதார அலுவலகத்தில் மருத்துவராக உள்ளார். கடந்த 23ம் தேதி இரவு, தனது வீட்டின் முன் டூவீலரை நிறுத்தியிருந்தார். மறுநாள் காலை பார்த்த போது, டூவீலரை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த திருவரசன், தர்மபுரி டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்...