கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
அரூர், ஜூலை 6:அரூர் அருகே, கோபிநாதம்பட்டி இன்ஸ்பெக்டர் லட்சுமி, ராமியம்பட்டி பகுதியில் சோதனை நடத்தியபோது, ஒரு வீட்டின் பின்புறம் சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரித்ததில், அவர் 300 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவர் அதே ஊரை சேர்ந்த அசோக்குமார் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை...
ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் துவக்க விழா
அரூர், ஜூலை 5: மொரப்பூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில், ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் என்ற திட்டத்தை முதலமைச்சர் காணொளி மூலம் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மொரப்பூர் வட்டார உதவி இயக்குனர் (பொ) ஜீவகலா மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குனர் ராஜேஷ்கண்ணன் தலைமை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மொரப்பூர் வட்டார முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு...
திருமண ஆசை காட்டி பெண்ணை ஏமாற்றிய வாலிபருக்கு வலை
பாலக்கோடு, ஜூலை 5: காரிமங்கலம் அருகே பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்த வாலிபர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து, தேடி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள மாட்லாம்பட்டி பெரியபுதூரை சேர்ந்தவர் அனிதாதேவி(28). பெற்றோர் இறந்துவிட்ட நிலையில், தனது தம்பி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு மாரவாடி...
ரயில்வே பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்
தர்மபுரி, ஜூலை 5: தர்மபுரி ரயில்வே பாதுகாப்புபடை மற்றும் தர்மபுரி மாவட்ட குழந்தைகள் உதவி மையம் சார்பில், ரயில்வே பாதைகளுக்கு அருகில் அமைந்துள்ள கிராமங்கள் மற்றும் பள்ளிகளில் ரயில்வே பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. தர்மபுரி ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் சந்தோஷ் காவோன்கர் தலைமை வகித்தார். ரயில் பாதைகளில் நடப்பது அல்லது அத்துமீறி நுழைதல்,...
தர்மபுரி எஸ்பி ஆபீசில் காதல் ஜோடி தஞ்சம்
தர்மபுரி, ஜூலை 4: பாலக்கோடு அருகே மாரண்டஅள்ளி பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜாஜஹான் மகள் ஷர்மிளா(20). இவர் நேற்று தர்மபுரி எஸ்பி அலுவலகத்தில் போலீசாரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் கடந்த 6 வருடங்களாக, மாரண்டஅள்ளியை சேர்ந்தவர் முருகன் பிரதீப்(22) என்பவரை காதலித்து வந்தேன். கடந்த 26ம் மாதம் தேதி வீட்டை விட்டு வெளியேறி,...
15 கிலோ பிளாஸ்டிக் கேரிபேக் பறிமுதல்
பாப்பாரப்பட்டி, ஜூலை 4: பாப்பாரப்பட்டி வாரச்சந்தை கடைகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரிபேக் பயன்படுத்துவது அதிகரித்து உள்ளதாக புகார்கள் வந்தது. இதையடுத்து, நேற்று பேரூராட்சி அலுவலர்கள், வாரச்சந்தை வளாகத்தில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அங்கு பயன்பாட்டுக்கு வைத்திருந்த அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரிபேக்குகள், கப்புகள் என 15 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல்...
ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை
அரூர், ஜூலை 4: பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் மண், மொழி, மானம் காத்திட ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில், வீடு வீடாக சென்று புதிய உறுப்பினர் சேர்க்கை பணி தொடங்கியது. தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பழனியப்பன், இப்பணியை தொடங்கி வைத்தார். அவரது சொந்த கிராமமான மோளையானூரில் வீடு, வீடாக சென்று மண், மொழி, மானம்...
பாலக்கோடு போலீஸ் ஸ்டேஷனில் தீக்குளிக்க முயன்ற விவசாயி
தர்மபுரி, ஜூலை 3:பாலக்கோடு, குண்டன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் நித்யானந்தன் (41). விவசாயியான இவர் நேற்று முன்தினம் மதியம், பாலக்கோடு காவல் நிலையத்துக்கு மனு கொடுப்பதை போல, கையில் ஒரு ‘கட்டை’ பையுடன் வந்துள்ளார். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், பையில் இருந்து பெட்ரோல் கேனை எடுத்து, தீக்குளிக்க முயன்றார். போலீசார் அவரை தடுத்தி நிறுத்தி, பெட்ரோல்...
ஆனந்த நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன விழா
தர்மபுரி, ஜூலை 3: தர்மபுரி குமாரசாமிப்பேட்டை ஆனந்த நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன விழாவையொட்டி 2 டன் பழங்களால் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவில் வளாகத்தில் உள்ள சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன திருவிழா கடந்த 30ம்தேதி தொடங்கியது. விழாவையொட்டி மாணிக்கவாசகர் குருபூஜையும், திருவாசகம் முற்றோதல்...