எஸ்ஐஆர் பணிகளை பிடிஓ நேரில் ஆய்வு
காரிமங்கலம், டிச. 2 : காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 30 ஊராட்சிகளில், எஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பூமாண்டஅள்ளி, காளப்பனஅள்ளி, மல்லிக்குட்டை ஆகிய ஊராட்சிகளில் உள்ள பல்வேறு கிராமங்களில் வீடு வீடாக சென்று எஸ்ஐஆர் பணிகள் குறித்து, பிடிஓ சர்வோத்தமன் ஆய்வு செய்தார். மேலும் எஸ்ஐஆர் விண்ணப்பங்கள் குறித்த காலத்திற்குள் பொதுமக்களிடம் இருந்து பெற,...
குட்கா கடத்தல் வழக்கில் வாலிபர் கைது
பாப்பாரப்பட்டி, டிச.2: பாப்பாரப்பட்டி அருகே சரக்கு வாகனத்தில் 200 கிலோ குட்கா கடத்திய வழக்கில் தேடப்பட்ட வாலிபரை நேற்று போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த ஆலமரத்துப்பட்டி எட்டிக்குட்டையை சேர்ந்தவர் பாண்டுரங்கன் மகன் அருள்(25). இவர் பெங்களூருவில் இருந்து சரக்கு வாகனம் ஒன்றில் குட்கா கடத்தி வருவதாக பாப்பாரப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல்...
உலக எச்ஐவி தின விழிப்புணர்வு
தர்மபுரி, டிச.2: தர்மபுரி நகர பேருந்து நிலையத்தில், உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து கையெழுத்து இயக்க தொடக்க விழா நேற்று நடந்தது. இப்பிரசாரத்தை மாவட்ட கலெக்டர் சதீஸ் தொடங்கி வைத்தார். முன்னதாக எச்ஐவி குறித்து கல்லூரி மாணவிகள், பாடலுக்கு நடனமாடி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இப்பேரணியானது தர்மபுரி...
ரூ.2.46 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள்
பாப்பிரெட்டிப்பட்டி, டிச. 1: பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடி அருகேயுள்ள பையர்நத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி நூறு ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாக, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம் மூலம் ரூ.7.30 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவருடன் கூடிய நூற்றாண்டு வளைவு அமைக்கும் பணி, பையர்நத்தம்- போதக்காடு வரை சுமார் ரூ.2.39 கோடியில்...
வியாபாரியின் டூவீலர் திருட்டு
தர்மபுரி, டிச. 1: பாலக்கோடு அருகே தளவாய்அள்ளி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை(45). இவர் பெங்களூருவில் குடும்பத்துடன் வசித்து கொண்டு, பழ வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 27ம் தேதி வேலை விஷயமாக, குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்திருந்தார். பின்னர், குடும்பத்தினரை பெங்களூருவில் விட்டு விட்டு மறுபடியும் ஊருக்கு வந்த போது, வீட்டிற்கு...
மண் குவியலை அகற்ற நடவடிக்கை
தர்மபுரி, டிச. 1: தர்மபுரி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள மண் குவியலை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலத்தில் இருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலை, தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் இருந்து காரிமங்கலம் வழியாக கிருஷ்ணகிரி- பெங்களூரு செல்கிறது. காரிமங்கலத்திலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில்,...
கஞ்சா விற்ற வாலிபர் கைது
பாப்பாரப்பட்டி, நவ. 29: தர்மபுரி மாவட்டம், இண்டூர் அருகே பி.எஸ்.அக்ரஹாரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக, இண்டூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு ெசன்று சோதனை செய்தனர். அப்போது ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. அந்த வீட்டில் போலீசார்...
மாரியம்மன் கோயிலில் தீர்த்தக்குட ஊர்வலம்
பாப்பாரப்பட்டி, நவ. 29: பாப்பாரப்பட்டி அருகே மாதேஅள்ளி கிராமத்தில், ஊர் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா, கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி பல்வேறு ஹோமம் நடத்தி விழாக்குழுவினருக்கு காப்பு கட்டுதல் நடந்தது. காளியம்மன் கோயில் முதல் பாப்பாரப்பட்டி திரௌபதி அம்மன்கோயில் வரை மேள தாளங்களுடன் தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. இரவு வாண வேடிக்கை...
நெடுஞ்சாலை துறை ஊழியர் விஷம் குடித்து தற்கொலை
தர்மபுரி, நவ.29: தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அருகே டி.துரிஞ்சிப்பட்டியைச் சேர்ந்தவர் பூபதி(53). பாப்பிரெட்டிப்பட்டி நெடுஞ்சாலை துறையில், சாலை பணியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு உடல் நலக்குறைவு பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 12ம் தேதி விடுமுறை கேட்பதற்காக, பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள நெடுஞ்சாலை துறை அலுவலகத்துக்கு காரில் சென்றுள்ளார். கூனையூர் அருகே கார் சென்று கொண்டிருந்த...