நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க நெறிமுறைகள் அறிவிப்பு
தர்மபுரி, ஆக.4: தர்மபுரி மாவட்ட நீர்நிலைகளில் சுற்றுச்சூழலை பாதிக்காத விநாயகர் சிலைகளை மட்டுமே கரைக்க அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முழுமுதற் கடவுளான விநாயகர் அவதரித்த தினம், விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் ஆண்டுதோறும் ஆவணி மாதம், வளர்பிறை சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் கொண்டாடப்படும் பிரதான பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தியும் ஒன்றாகும். நாடு முழுவதும் பல...
மண்புழு உர உற்பத்தி விளக்க பயிற்சி
தர்மபுரி, ஆக.3: தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டார வேளாண்மை துறை சார்பில், மண்புழு உற்பத்தி குறித்த அட்மா திட்ட பயிற்சி துணை வேளாண் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில், சோமனஅள்ளி கிராமத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தர்மபுரி மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சித்ரா கலந்துகொண்டு துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம்,...
ஜிஎஸ்டி பில் இல்லாமல் வந்த ஆயில் வாகனம் சிறைபிடிப்பு
தர்மபுரி, ஆக.3: முன்னணி நிறுவனத்தின் பெயர் கொண்ட இன்ஜின் ஆயிலை, ஜிஎஸ்டி பில் இல்லாமல், சேலத்தில் இருந்து தர்மபுரிக்கு கொண்டு வந்த வாகனத்தை, சிறை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். சேலம் மாவட்டத்தில் இருந்து, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு ஜிஎஸ்டி பில் இல்லாமல், வாகனங்களுக்கு தேவையான போலியான இன்ஜின் ஆயில் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதாக புகார்...
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பட்டதாரி வாலிபரிடம் ரூ.9 லட்சம் மோசடி
தர்மபுரி, ஆக.3: தர்மபுரி அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, பட்டதாரி வாலிபரிடம் ரூ.9 லட்சம் வாங்கி மோசடியில் ஈடுபட்ட கடலை மிட்டாய் வியாபாரியை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி அருகே நாயக்கனஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் திருமுருகன்(36). எம்ஏ., பிஎட் பட்டதாரி. தர்மபுரி ஹரிகரநாதர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மாதவன்(57). இவர் கடைகளுக்கு...
புற்று கோயிலில் திரண்ட பக்தர்கள்
தர்மபுரி, ஆக.2: தர்மபுரி எம்ஜிஆர் நகர் நாகாத்தம்மன், நாகபத்தரகாளி புற்று கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சுமங்கலி பூஜை நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் வளையல், ஜாக்கெட் பிட், தாலி சரடு, குங்குமம் படைத்து அம்மனை வழிபட்டனர். மேலும், பெண்கள் அம்மனுக்கு நெய் விளக்கேற்றி வழிபட்டனர். விழாவையொட்டி நாகாத்தம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில்...
விதிமீறி எதிர்திசையில் செல்லும் வாகனங்கள்
தர்மபுரி, ஆக.2: பெங்களூரு- சேலம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டது முதல், நாள்தோறும் சுமார் 40 ஆயிரம் வாகனங்கள் தர்மபுரி வழியாக செல்கின்றன. இந்த சாலையில் தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் ஆண்டுதோறும் 300 விபத்துகள் நடக்கின்றன. விபத்தில் சிக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பெங்களூரு -சேலம் தேசிய நெடுஞ்சாலையில்,...
கோயில் கட்டியதில் முறைகேடு
தர்மபுரி, ஆக.2: தர்மபுரி அருகே புதிதாக கோயில் கட்டியதில் முறைகேடு நடந்துள்ளதாக கிராம மக்கள் திரண்டு வந்து எஸ்பியிடம் புகார் மனு அளித்தனர். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி மிட்டா தின்னஅள்ளி கோம்பேரி கிராமத்தைச் சேர்ந்த பூபால் மற்றும் கிராம மக்கள் நேற்று எஸ்பி ஆபீசுக்கு திரண்டு வந்து மனு அளித்தனர். அதில், அவர்கள் கூறியிருப்பதாவது: எங்கள்...
பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம்
காரிமங்கலம், ஆக.1: காரிமங்கலம் பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளில் தற்போது நடந்து வரும் மக்கள் நலத்திட்ட பணிகள் மற்றும் குடிநீர் விநியோகம், தூய்மை பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தெருவிளக்கு, கழிவுநீர் கால்வாய், சாலை பணிகள் உட்பட பல்வேறு அடிப்படை...
வரத்து சரிவால் நெல் கொள்முதல் நிறுத்தம்
அரூர், ஆக.1: அரூர், நரிப்பள்ளி நிலையங்களில் வரத்து சரிவால் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக கலெக்டர் சதீஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டத்தில், நடப்பு(2024-2025) சம்பா பருவத்தில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம், அரூர் மற்றும் நரிப்பள்ளியில் கடந்த மார்ச் 11ம் தேதி முதல் நேரடி...