தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

யோக மார்க்கத்தை அருளும் நாமம்

குலாம் ருதைக ரஸிகா குலஸங்கேத பாலிநீ

Advertisement

அப்படி இந்த யோக சக்கரங்களில் என்னதான் இருக்கிறது? நாம் ஜென்ம ஜென்மாந்திரமாக எடுத்திருக்கிற பிறவிகள் இருக்கிறதல்லவா? இந்தப் பிறவியிலிருந்து நமக்கு கிடைத்த அனுபவம். நமக்குக் கிடைத்த அறிவு. நமக்குக் கிடைத்த கர்மா. நம்முடைய கர்ம வினைகள். இவை எல்லாமே சூட்சுமமாக இந்த சக்கரத்திற்குள்தான் பதிவாகி இருக்கின்றது. குண்டலினி ரூபமாக இருக்கக்கூடிய அம்பாள், மூலாதாரத்திலிருந்து இந்த சக்தியானது, சுஷும்னா நாடி வழியாக ஏழு சக்கரங்களின் ஊடாக சஹஸ்ராரத்தை அடைகின்றது. இப்படி அடையும்போது சாதகனுடைய ஜென்ம ஜென்மாந்திர கர்ம வாசனைகள் எல்லாம் அழிக்கப்பட்டுவிடுகின்றன. இப்படி மேலான நிலைக்குச் செல்லச்செல்ல நினைத்துப் பார்க்க முடியாத சித்திகள், அனுபவங்களெல்லாம் கிடைக்கின்றன. இப்படி மூலாதாரத்திலிருந்து சுஷும்னா நாடி வழியாகச் சஹஸ்ராரத்திற்கு செல்வதையே யோக மார்க்கத்தில் குலம் என்று சொல்கிறோம். இந்த மார்க்கத்திற்கு குல மார்க்கம் என்று பெயர். மேலும், இந்த சரீரத்தை தாண்டி இருக்கக் கூடிய விஷயத்திற்கு அகுலம் என்று பெயர்.

இந்த சரீரத்தை தாண்டி இந்த மூலாதாரம்தான் நமது அடிப்படையாக நினைக்கிறோம். ஆனால், இந்த மூலாதாரத்தைத் தாண்டி சூட்சுமமாக கீழே ஒரு இடம் இருக்கிறது. அது இந்த சரீரத்திற்கு உட்படாத ஒரு ஸ்தானம். அந்த ஸ்தானத்திற்கு அகுல சஹஸ்ராரம் என்று பெயர். அம்பாள் குல குண்டலினியாக இருக்கிறாள். இதேபோல சஹஸ்ராரத்திற்கு மேலே ஒரு சக்தி இருக்கிறது. இந்த சக்தியானது நமது தலைக்கு மேல், சரீரத்தை தாண்டி இருக்கிறது. அந்த இடத்திற்கு அகுல குண்டலினி என்று பெயர். மேலே இருக்கிற சஹஸ்ராரத்திற்கு குல சஹஸ்ராரம் என்று பெயர். இன்னும் எளிமையாகச் சொன்னால், கீழே இருக்கிற அதாவது முதுகுத் தண்டுவடத்தில் கீழே இருக்கிற மூலாதார சக்திக்கும் கீழே இருக்கிற அகுல சஹஸ்ராரத்தில் அம்பிகை குல குண்டலினியாக இருக்கிறாள். அப்படியே உச்சந்தலைக்கு மேலே குல சஹஸ்ரராத்திற்கு பக்கத்தில் அகுல குண்டலினி என்கிற சக்தியாக இருக்கிறாள்.இப்போது இந்த குலகுண்டலினி போய் அகுல குண்டலினியை தொடும்போது, இந்த யோகிக்கு சஹஸ்ராரத்திலிருந்து அம்ருதப் பிரவாஹம் நடக்கின்றது. அந்த அம்ருத பிரவாஹத்தினால் அவனுடைய கர்ம வாசனைகளினால் அழிக்கப்படும்போது, அவனுடைய சரீரம் கர்ம சரீரம் அல்ல. ஞான சரீரமாக மாறத் தொடங்குகிறது. அங்கிருந்து பெருகக் கூடிய அம்ருதத்தை அம்பாளே பருகுகிறாள். அந்த அம்ருதத்தை பருகிவிட்டு மீண்டும் மூலாதாரத்திற்கு வந்து, மீண்டும் சஹஸ்ராரம் என்று ஒரு பிரதட்சணமே நடக்கின்றது.

இது ஒரு யோகியினுடைய சரீரத்தில் நடக்கக் கூடிய மாபெரும் நிகழ்வாகும். இப்படி இந்த அம்ருத பிரவாஹத்தினால் கர்ம வாசனைகள் அழிக்கப்பட்டுவிட்ட யோகியானவன் நினைத்தால் மற்றவர்களுக்கும் இந்த அனுபவத்தை அளிக்க முடியும். இப்படி இருப்பவன் தன்னுடைய இருப்பினாலேயே ஞானத்தையும், பக்தியையும் அளிக்க முடியும். அதனால்தான் மகான்களை தேடித்தேடி போய் பார்க்கிறோம். மகான்களின் ஜீவ சமாதி மற்றும் அதிஷ்டானங்களை போய் பார்ப்பதற்கு காரணமே அந்த இடத்தில் இந்த சக்தியானது அபரிமிதமாக இருக்கின்றது. நாம் அந்த இடத்திற்கு போனாலே நம்முடைய சரீரத்திற்குள் அந்தச் சக்தியானது செயல்படத் தொடங்கி விடும். இப்போது குண்டலினியை எழுப்புகிறோம் என்றெல்லாம் சொல்கிறார்கள். அப்படியெல்லாம் technic ஐ பயன்படுத்தியெல்லாம் இந்த சக்தி பிரவாஹத்தை தூண்டி எழுப்பமுடியாது. இது ஒரு நிகழ்வு. அது மகான்களின் முன்னிலையில் தூண்டலால் அந்த சக்தியின் கிளர்ச்சியால் நிகழும். அந்த நிகழ்வு நடக்கும்போது அம்பாள் அந்த சக்தியை இந்த சாதகனுக்குள் அபரிமிதமாக வெளிப்படுத்துகிறாள். அப்படி வெளிப்படுத்தும்போது, அந்த சாதகனுடைய சஹஸ்ராரத்திலிருந்து வரக்கூடிய குலாம்ருதம் என்று சொல்லக் கூடிய அம்ருதத்தை அம்பாள் பருகியபடி இருக்கிறாள். இப்படி சாதகனுடைய சரீரத்தில் குண்டலினி ரூபமாக அம்பாள் சஞ்சாரம் செய்து கொண்டிருக்கிறாள்.

இப்படி சஞ்சாரம் செய்வதால் என்ன பலன்கள்?

நிறைய பலன்களை சொல்லலாம். ஆனால், உச்சபட்சமான பலன் என்னவெனில், ஞான மார்க்கத்தில் பார்த்தோமே, இந்த ஜீவனின் திரிபுடி (தியானிப்பவன், தியானிக்கப்படும் வஸ்து, தியானம்) என்கிற முன்றும் மறைகின்றது. உதாரணமாக இந்த திரிபுடி போய்விட்டதெனில் அவனுக்கு பூரண ஞானம் சித்திக்கிறது. அப்போது யோகத்தினுடைய உச்சபட்ச பலன் என்னவெனில், ஞானமே ஆகும். அந்த ஞானத்தைத்தான் ஜீவன் முக்தி என்று என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். நம்முடைய சம்பிரதாயத்தில் யோகத்தினால் ஞானம், சில நேரங்களில் ஞானத்தினால் கூட யோகம் சித்திக்கலாம். ஜே. கிருஷ்ணமூர்த்தி போன்ற மகான்கள் பூரணமான ஞானத்திலிருந்து பேசுகிறார்கள். அதேபோன்றுதான் ஸ்ரீரமண பகவான், ஸ்ரீசீரடி சாய்பாபா போன்றோரின் ஞான உபதேசத்தைக் கேட்கும்போதே யோகரீதியாக நமக்குள்ளும் மாற்றம் தெரியும். அந்தக் காலத்தில் நேரில் கேட்டிருக்கலாம். அல்லது இப்போது வீடியோ அல்லது புத்தகம் மூலமாக அந்த உபதேசங்களை கேட்கலாம். நிச்சயம் மாற்றம் நிகழும்.

இப்படி யோகத்தின் முடிவு ஞானமாக இருக்கிறது. ஞானத்தின் முடிவு யோகமாக இருக்கிறது. இந்த இரண்டும் நடைபெறுவதற்கு பக்தி என்பது தேவைப்படுகின்றது. பக்தியும் ஞானத்திலும் யோகத்திலும் கொண்டுபோய் விடுகின்றது. இப்படி ஞானம், பக்தி, யோகம் எல்லாமுமே ஒன்றோடு ஒன்றாக பிணைந்து இருக்கிறது. இதை நாம் பிரித்தெல்லாம் பார்க்கவே முடியாது. அதனாதான் சஹஸ்ரநாமம் பக்தி, யோகம், ஞானம் என்று எல்லாவற்றையும் கலந்து கலந்தேதான் சொல்கிறது. எதையும் பிரித்துச் சொல்லவில்லை. இதை காண்பித்துக் கொடுப்பதுதான் இந்த குலாம் ருதைக ரஸிகா என்கிற நாமம். இதற்கு அடுத்துள்ள நாமமானது குல ஸங்கேத பாலிநீ என்பதாகும். நாம் மேலே சொன்னவை அனைத்துமே கிட்டத்தட்ட குலம் என்கிற பதத்தின் விளக்கமேயாகும். நம்முடைய சரீரத்திற்குள்ளேயே நம்முடைய சிற்றறிவைக் கொண்டு புரிந்துகொள்ள முடியாத விஷயமாக இருக்கிறது. அதுபோன்று எத்தனையோ ரகசியங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது. அதே அளவிற்கு நம்முடைய சரீரத்திற்குள்ளும் ஒவ்வொரு வினாடியும் எத்தனையோ ரகசியங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அது நமக்கு பிடிபடவில்லை. இப்படி நடப்பது அனைத்திற்கும் காரணம் குலம் என்று பார்த்தோம். இப்படி நம்முடைய சரீரத்திற்குள் நடைபெறுகின்ற ரகசியங்களுக்கு குல ஸங்கேதம் என்று பெயர். ஸங்கேதம் என்றால் ரகசியம் என்று அர்த்தம். ஸங்கேதம் என்பதற்கு சந்திக்கும் இடம் என்றொரு அர்த்தமும் உண்டு.

ஒரு சாலையில் போய்க்கொண்டிருக்கும்போது நான்கு சாலைகளும் சந்திக்கும் இடம் வருகிறது. ரவுண்டானா என்று ஆங்கிலத்தில் சொல்வோம். இப்படி நான்கு சாலைகளும் சந்திக்கும் இடத்திற்கு ஸங்கேதம் என்று பெயர். நமக்கு சரீரம் இருக்கின்றது என்பதால் மட்டுமே இந்த விஷயங்களெல்லாம் தெரிந்து விடவில்லை. சரீரத்திற்குள் நமக்கு தெரியாமல் எவ்வளவோ விஷயங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அந்த ரகசியத்திற்கு குல ஸங்கேதம். குல ரகசியம் என்று பெயர். இந்த குல ரகசியத்தை எப்படி தெரிந்து கொள்ள முடியும்? ஞானியாக இருக்கக் கூடிய குருநாதர் இந்த சாதகனுக்கு குல ரகசியத்தை உணர்த்தும்போது குல ரகசியம் தெரியும். அம்பிகையே குருநாதர் மூலமாக உணர்த்தி இந்த குலரகசியங்களை தெரிய வைப்பாள். சேரும் இடம். சந்திக்கும் இடத்திற்கும் குல ஸங்கேதம் என்று பார்த்தோம். அப்படி இது என்ன சேரும் இடம். இடகலை, பிங்கலை, சுஷும்னா என்கிற மூன்று நாடிகளும் எங்கெங்கு சேருகின்றதோ அங்கெல்லாம் இந்த சக்கரங்கள் இருக்கின்றன.

அதென்ன ஏழு சக்கரங்கள். மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுக்தி, ஆக்ஞை, சஹஸ்ராரம் அல்லது சஹஸ்ரஹாரம் போன்றவை ஆகும். இந்த மூன்று நாடிகளும் சேருகின்ற இடங்களே இந்த ஏழு சக்கரங்கள். இப்படி இந்த நாடிகள் சேரக்கூடிய சக்கர ஸ்தானங்களுக்கு சங்கேதம் என்று பெயர். இப்படி குல மார்க்கமாக இருப்பதாலும் குல சங்கேதம் என்று பெயர். இப்படி குல சங்கேதமாக இருக்கின்ற சக்கரங்களை, குல சங்கேதமாக இருக்கக் கூடிய ரகசியங்களை காப்பாற்றுபவளாக அம்பாள் இருக்கிறாள். ஒரு யோகிக்கு, சஹஸ்ராரத்திலிருந்து பெருகக் கூடிய குலாம்ருதத்தை அம்ருதத்தை அம்பாள் பருகுகிறாள். அதனால், குலாம் ருதைக ரஸிகா. அதற்கு அடுத்து அந்த யோகியினுடைய சரீரத்தில் நடக்கக் கூடிய யோக மார்க்கமான விஷயங்களை, ரகசியங்களை காப்பாற்றுகிறாள் அதனால் அவளுக்கு குல ஸங்கேத பாலிநீ. இந்த சக்கர ஸ்தானங்களையெல்லாம் காப்பாற்றுகிறாள், அதனால் குல சங்கேத பாலிநீ என்கிற நாமம். இவை அனைத்தையும் அம்பிகை குண்டலினி ரூபமாக இருந்து செய்து கொண்டிருக்கிறாள்.

இந்த இரண்டு நாமங்களிலிருந்து தொடங்கி அடுத்த ஏழு நாமாக்கள் இந்த குலம் என்கிற விஷயத்தையும், குண்டலினி விஷயத்தையும், யோக விஷயத்தையும்தான் நாம் பார்க்கப் போகிறோம். இதற்கான கோயிலையும் பார்ப்போம் வாருங்கள். யோக மார்க்கமான க்ஷேத்ரங்களாக திருவாரூர், மதுரை, சிதம்பரம், திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார் கோவில் போன்றவை ஆகும். மதுரை என்று எடுத்துக் கொண்டால் துவாத சாந்தம். திருவாரூர் மூலாதாரத்தை விட சூட்சுமமான அகுல சஹஸ்ராரம். காஞ்சி புரம் மூலாதாரம். சிதம்பரம் அனாகத ஸ்தானம். அப்படிப் பார்க்கும்போது, திருப்பெருந்துறை என்று ஆவுடையார் கோவிலைச் சொல்லலாம். சிவ பெருமான் மாணிக்கவாசகருக்கு உபதேசம் செய்த தலமாகும். மாணிக்கவாசகராலேயே கட்டப்பட்ட கோயிலும் ஆகும். மாணிக்கவாசகரின் சொரூபம் யோக மார்க்கத்தில் தொடங்கியிருக்கும். ஆனால், திருவாசகத்தில் அவர் வெளிப்படுத்திய நிலையானது உயர்ந்த ஞானமாக இருந்தது. அவரது மார்க்கம் யோக மார்க்கம். அவரது நிலை உயர்ந்த ஞானநிலை. இது ஒவ்வொரு சாதகனுக்குள் நிகழக் கூடியது. யோகத்திலிருந்து ஞானத்திற்கு சென்றடைவது.

இந்த யோகப் பூர்வமான திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார் கோவிலில் அம்பாளின் திருப்பெயரே யோகாம்பாள்தான். யோக சொரூபிணியாக அருள்கிறாள். இங்கு அம்பாளின் சந்நதியில் உருவம் கிடையாது. ஒரு பத்ம பீடத்திற்கு மேல் அம்பாளின் இரு பாதங்கள் இருக்கும். இந்த பத்ம பீடம் என்று சொல்வது சஹஸ்ராரம். இதற்கும் மேலே அம்பாளினுடைய பாதங்கள் இருக்கின்ற இடமானது, துவாத சாந்தம் அல்லது ஷோட சாந்தம் என்று சொல்வர். ஷோட சாந்தம் ரூபமாக அம்பிகையின் பாதங்கள் இருக்கும். இதுவே யோகாம்பிகையின் சந்நதியாகும். இந்த சந்நதியையே பலகணி என்று சொல்லக் கூடிய ஜன்னல் வழியாகத்தான் தரிசனம் செய்ய முடியும். அப்படி இந்த சந்நதியை தரிசனம் செய்யும்போது அந்த சந்நதிக்கு கீழே நாம் நின்று கொண்டு அம்பிகையை பார்க்கும்போது அந்த பலகணிக்கு கீழே ஒரு உருவம் இருக்கும். அந்த உருவத்தை பல பேர் கவனித்திருக்க மாட்டார்கள். சிறிய அம்பாள் அமர்ந்திருப்பாள். இந்த உருவமே நம்முடைய ஒவ்வொரு சரீரத்தில் இருக்கும் சாட்சாத் குண்டலினி ஆகும். அம்பிகையின் சந்நதிக்கு முன்னால் அந்த குண்டலினி உருவம் பிரதிஷ்டையாகி இருக்கும். இன்றைக்கும் ஆவுடையார்கோவிலில் தரிசனம் செய்யலாம்.

மாணிக்கவாசகரும் அம்பாள் யோகாம்பிகையும் இங்கு நேருக்கு நேராக இருப்பார்கள். இங்கு இவர்களை சேர்த்தபடி தரிசனம் செய்வதும் வழக்கம். சிவனுக்கு ஆத்மநாதர் என்று பெயர். இவர் தனிச் சந்நதியில் தனியே வெறும் வெளியாக காட்சி தருவார். மறக்காமல் ஆவுடையார் கோவிலுக்குச் சென்று குண்டலினி ரூபமாக உள்ள அம்பிகையைத் தரிசனம் செய்து வாருங்கள்.

(சுழலும்...)

Advertisement

Related News