கடவுள் தரும் வாய்ப்புகளைபயன்படுத்திக் கொள்ளுங்கள்!!

ஒரு கிராமத்தில், கடவுள் பக்தர் ஒருவர் இருந்தார். அவருக்கு எப்போதுமே கடவுளின் நினைப்பு மட்டும்தான். எந்நேரமும் கடவுளை மட்டுமே வேண்டிக் கொண்டிருப்பார். ஒருநாள், அவருடைய கிராமத்தில் பயங்கர மழை, புயல், வெள்ளம் வந்துவிட்டது. இதைப் பார்த்து பயந்த கிராம மக்கள், அந்த ஊரையே காலி செய்துவிட்டு செல்கிறார்கள். அப்போது ஒருவர், கடவுள் பக்தரிடம் வந்து, ``ஐயா!...

ஒற்றுமை வாழ்வளிக்கும் ஒழுகைமங்கலம் மாரியம்மன்

By Nithya
4 hours ago

ஆறு வகையான இறை வழிபாட்டில் சக்தியை கடவுளாக வழிபடும் நெறி ‘சாக்தம்’ என்பதாகும். சக்தி வழிபாட்டில் உலகின் ஆதிசக்தியான அன்னை பராசக்தியே மூலக்கடவுளாக போற்றப்படுகிறாள். கிராம தேவதைகள் எனப்படும் காவல் தெய்வங்களை வழிபடுவது என்பது, கிராம மக்கள் தொன்றுதொட்டு கடைபிடித்து வரும் மரபுகளில் ஒன்று. இத்தகைய கிராம தேவதைகளில் பெரும்பாலான கிராமங்களில், அம்பாள் முதலிடத்தையும், அய்யனார்...

கேட்டது வரமா சாபமா?

By Nithya
4 hours ago

பகவானிடம் நமக்கு வேண்டியதைக் கேட்கிறோம். இப்படிக் கேட்பதில் மிகுந்த கவனம் வேண்டும். அதைவிடக் கேட்காமல் இருப்பது ஒருவகையில் சிறந்தது. மாணிக்கவாசகரிடம் சிவபெருமான், ‘‘உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டபொழுது, ‘‘எனக்கு என்ன வேண்டுமோ அதை நீ தந்து விடுவாய்” என்று சொல்வதாக ஒரு பாடல் இருக்கிறது. வேண்டத் தக்க தறிவோய்நீ வேண்ட முழுதும் தருவோய்நீ வேண்டும்...

அன்னமிட்டவர்களுக்கு நீங்கும் பிரச்னைகள்

By Nithya
4 hours ago

பல வருடங்களுக்கு முன்பு, காஞ்சி மகா ஸ்வாமிகள் கலவையில் தங்கியிந்த நேரம். அன்று ஞாயிற்றுக்கிழமை. தரிசனத்துக்கு ஏகக் கூட்டம். ஒவ்வொருவராக நமஸ்கரித்து ஸ்வாமிகளிடம் ஆசி பெற்று நகர்ந்தனர். ஒரு நடுத்தர வயதுத் தம்பதி, ஆச்சார்யாளை நமஸ்கரித்து எழுந்து, கை கூப்பி நின்றனர். அவர்களைக் கூர்ந்து ேநாக்கிய ஸ்வாமிகள், “அடடே… யாரு… பாலூர் கோபாலனா! ஒரு வருஷத்துக்கு...

புட்டுக்கு நோய் தீர்க்கும் பிட்டாபுரத்தி அம்மன்!

By Nithya
5 hours ago

அகிம்ஸா ஆலயங்களான சிவன், விஷ்ணு கோயில்கள் ஏற்படுவதற்கு முன் பாரத தேசமெங்கும் முக்கியமான ஊர்களில் எல்லாம் இம்சை-ரத்த பலிகளை அடிப்படையாகக் கொண்ட காளி கோயில்களே சமூகத்தில் பேராதிக்கம் செலுத்தி வந்தன.சிவமதம் எனும் சைவ சமயம் தோன்றி காளி மதத்தைக் கட்டுக்குள் வைத்தது. இதையே சிவனுடைய ஊர்த்துவத் தாண்டவம், காளியின் தலை குனிவு என்று கற்பனையாகச் சொல்லப்பட்டது....

நவகிரகங்களும் நவமணிகளும்

By Porselvi
18 Sep 2025

நவமணிகள் என சொல்லக்கூடிய ரத்தினக்கற்களை மனிதன் அறிந்தும் அறியாமலும் பயன்படுத்தி இருக்கிறான். நவமணிகளே நவகிரகங்களுடன் உள்ளதால் நவகிரகங்களின் காரகங்களாக கொண்டு அவற்றை அணிந்தால் மாற்றங்கள் உண்டாகும் என்பது மறுக்க முடியாத உண்மை. நவமணிகளுக்கு விலைமதிப்பற்ற கல் (Precious Stone) என ஆங்கிலத்தில் சொல்லப்படுகிறது. இதன் பொருள் என்னவென்றால் இவ்வுலகில் நம் கண்முன் ஏராளமான கற்கள் உள்ளன....

தெளிவு பெறுவோம்!!

By Porselvi
18 Sep 2025

?சீர்காழியில் உள்ள இறைவனுக்கு தோணியப்பர் என்ற பெயர் எப்படி வந்தது? - சண்முகம், மும்பை. தோணி என்பது சிறிய படகு ஆழமான நீர்நிலையைக் கடந்து செல்ல உதவும். இக்கரையில் இருந்து அக்கரையை அடைய உதவுவதுதான் படகு (தோணி) சாதாரண நீர் நிலையை இப்படி ஒரு தோணியால் கடந்துவிட முடியும். ஆனால், தொடர்ந்து வருகின்ற பிறவி என்னும்...

மழலை வரமருளும் பத்மநாப பெருமாள்

By Porselvi
18 Sep 2025

அனந்தகோடி கல்யாண குணங்கள் கொண்ட பரம்பொருளாகிய மஹாவிஷ்ணுவை, ஆழ்வார்களும், மகான்களும், ரிஷிகளும் நேரில் கண்டுகளித்தனர். நம்மைப் போன்றவர்கள் வணங்கி அருள் பெற இப்பூவுலகில் ஸ்ரீமன் நாராயணன் சில தலங்களில் அர்ச்சாரூபமாய் விளங்கி சேவை சாதிக்கின்றார். அதில் செந்தலை எனும் இத்தலமும் ஒன்று. கிருதயுகத்தில் பிரம்மாவும், துவாபரயுக ரிஷிகளும், பிருகத்தச்சனும், கலியுகத்தில் சந்திரலேகை என்ற தேவதாசியும் பூஜித்துள்ளனர்....

ஏழு மலைத்தாண்டி வரோமம்பா வெங்கடேசா!

By Porselvi
18 Sep 2025

அலிபிரி முதல் திருமலை வரை பயணத்தின் தொகுப்பு உலகில் எத்தனையோ மலைகள் இருந்தாலும், திருப்பதியில் இருக்கும் `திருமலை’ என்று சொன்னால் மனதிற்குள் ஒருவித உற்சாகம் பிறந்திடும். காரணம், அங்கு வீற்றிருக்கும் திருமலைவாசன்... வேங்கடவன்.. ஆபத்பாந்தவன்.. அநாதரட்சகன்.. கோவிந்தன்.. நமது உடல் கவலைகளையும், மனக்கவலைகளையும் போக்கி அருள்வான் என்கின்ற திடமான நம்பிக்கையாகும். பலருக்கும் குலதெய்வமாக தனது அருட்கடாட்சத்தை...

புரட்டாசி பிறந்தது புண்ணியம் கிடைத்தது

By Porselvi
18 Sep 2025

புரட்டாசி மாதம் புண்ணிய மாதம். எண்ணியது நிறைவேறும் இனிய மாதம். விரதங்கள் நிறைந்த அற்புத மாதம். புரட்டாசி மாதத்தின் அதிதேவதையாக உள்ளவர் இருடீகேசன். பெரியாழ்வார் விஷ்ணுவை இருடீகேசன் என்று போற்றும் பாசுரம் இது. அண்டக் குலத்துக் கதிபதியாகி அசுரரிராக்கதரை இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகேசன் தனக்கு தொண்டக் குலத்திலுள்ளீர்! வந்தடி தொழுது ஆயிரநாமம் சொல்லி...