ஆடி மாதத்தில் அம்மன் வழிபாடு!
*சிவகங்கை மாவட் டம் நாட்டரசன் கோட்டை கண்ணுடை நாயகி அம்மன் கோவிலில், ஆடி மாதம் நடை பெறும் முளைக் கொட்டு திருவிழாவின் 10வது நாளில், அம்மன் சிரசில் தனுகப் பாத்திரத்தில் முளைப்பாறையுடன் காட்சி தருவாள். விளைச்சல் பெருக இந்த வழிபாடு நடக்கிறது.
*தஞ்சை அருகேயுள்ள புன்னை நல்லூர் மாரியம்மன், ஆடி மாதத்தில் முத்துப் பல்லக்கில் வலம் வருவது அற்புதமான நிகழ்ச்சியாகும்.
*நெல்லை காந்திமதி அம்மனுக்கு ஆடிப்பூர விழாவின் போது வளைகாப்பும், சீமந்தமும் நடைபெறும்.
*ராமேஸ்வரம் கோயிலில் எழுந்தருளியுள்ள பர்வதவர்த்தினி அம்மனுக்கு ஆடி மாதம் திருக்கல்யாண விழா சிறப்பாக நடைபெறும்.
- எஸ்.ராஜம், ஸ்ரீரங்கம்.