காரிய வெற்றி தரும் கரணம் வழிபாடு
கரணம் என்றால் என்ன?
பஞ்சாங்கத்தின் ஐந்தாவது அங்கம் கரணம் ஆகும். கரணம் என்பது ஒரு திதியின் பாதி அளவை குறிக்கும்.6 பாகை கொண்டது ஒரு கரணம் ஆகும். இரண்டு கரணம் கொண்டது ஒரு திதியாகும். பஞ்சபூத தத்துவங்களில் கரணம் நில தத்துவத்திற்கு உரியதாகும்.
கரணத்தின் பெயர்கள்
கரணம் மொத்தம் 11 வகைப்படும்.
* பவம்.
* பாலவம்
* கௌலவம்
* தைதுலை
* கரசை
* வணிசை
* பத்திரை (விஷ்டி)
* சகுனி
* சதுஷ்பாதம்
* நாகவம்
* கிம்ஸ்துக்னம்
சுபகரணங்கள்
-----------------------------
பவம், பாலவம், கௌலவம், தைதுலை, கரசை
மத்திமமான சுப தன்மையுடைய
கரணங்கள்
-----------------------
வணிசை, சதுஸ்பாதம்.
அசுபகரணங்கள்.
-------------------------------
பத்திரை, சகுனி, நாகவம், கிம்ஸ்துக்னம்
சர கரணங்கள்.
---------------------------
பவம், பாலவம், கௌலவம், தைதுலை, கரசை, வணிசை, பத்திரை
ஸ்திர கரணங்கள்
----------------------------------
சகுனி, சதுஷ்பாதம், நாகவம், கிம்ஸ்துக்னம்
வாழ்வை வளமாக்கும் கரணநாதனை இயக்குவது எப்படி?
------------------------------------
கரணம் என்றால் காரிய வெற்றி ஆகும். மேற்கூறிய கரணங்களில் ஏதாவது ஒரு கரணத்தில்தான் நாம் அனைவரும் பிறந்திருப்போம். உங்களுடைய பிறந்த ஜாதகத்தில் உங்களின் ஜென்ம கரணத்தைப்பற்றி குறிப்பிட்டிருப்பார்களே தவிர, உங்களின் பிறந்த விவரங்களைக் கொண்டு கம்ப்யூட்டர் ஜாதகக் குறிப்பு எடுக்கும்போது அதில் உங்களின் பிறந்த கரணம் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆதலால், ஒவ்வொருவரும் அவரவர் பிறந்த கரணத்தை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.இந்தக் கரணத்தைக் கொண்டு ஒருவரின் குணநலன்களை எளிதாக அறியலாம். கரணத்திற்கு உரிய வழிபாடுகளை செய்வதன் மூலம் நாம் நினைத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கலாம்.ஒவ்வொரு கரணத்திற்கும் உரிய கிரகம் என்று ஒன்று உள்ளது. அது கரணநாதன் எனப்படும். உங்களது ஜாதகத்தில் லக்னாதிபதி எவ்வளவு முக்கியமோ அதேபோன்றுதான் இந்த கரணநாதனும். கரணநாதன் சுய ஜாதகத்தில் வலிமை இழக்கக் கூடாது.
கரணநாதன்கள்
பவம் - செவ்வாய்
பாலவம் - ராகு
கௌலவம் - சனி
தைதுலை - சுக்கிரன்
கரசை - சந்திரன்
வணிசை - சூரியன்
பத்திரை - கேது
சகுனி - சனி
சதுஷ்பாதம் - குரு
நாகவம் - ராகு
கிம்ஸ்துக்னம் - புதன்
கரணத்தை எப்படி இயக்குவது?
ஒவ்வொரு கரணத்திற்கும் உரிய அதிதேவதைகள் உண்டு. அதிதேவதைகளின் படத்தை பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு கரணத்திற்கும் உரிய மிருகம் ஒன்று உள்ளது. அவரவர் பிறந்த கரணத்திற்கு உரிய மிருகத்தை துன்புறுத்தாமல் இருக்க வேண்டும். அந்த மிருகத்தின் படத்தை ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு கரணத்திற்கும் கோயில்கள் உண்டு. உங்களது ஜென்ம கரணம் வரும் நாளில் அந்த கோயில்களுக்குச் சென்று வழிபட்டு வந்தால் வாழ்வில் உயர்வு நிச்சயம் உண்டு.கரண நாதனுக்கு உரிய உயிர் காரகத்தை அருகில் வைத்திருக்க வேண்டும் கருண நாதனாக செவ்வாய் வந்தால் சகோதரனை நல்ல முறையில் பார்த்துக் கொள்ள வேண்டும் சகோதர சகோதரி இல்லாவிட்டாலும் சகோதரராக ஒருவரை ஆத்மார்த்தமாக பாவித்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்படி சில முறைகளை பயன்படுத்தி கரண நாதனை வலுப்படுத்தலாம்.
கரணநாதனை வலுப்படுத்துவதால் என்ன நிகழும்?
உங்கள் லக்னத்திற்கு எந்த பாவத்தில் கரணநாதன் இருக்கிறாரோ... அந்த பாவத்தின் கெடுபலன் குறையும். உதாரணமாக பவ கரணத்துக்கு உரிய கரணநாதனான செவ்வாய், ஆறில் இருந்தால் நோய், கடன், எதிரி, வழக்கு நீங்கும்.செவ்வாயின் பார்வைபடும் 9, 12, 1ஆம் இடங்கள் சுபப்படும். சுய ஜாதகத்தில் எந்த கிரகம் செவ்வாய் சாரம் பெற்றுள்ளதோ அது சுபத்துவம் அடையும். இப்படி அனைத்து வகையிலும் சுபத்துவம் அடையச் செய்யும் கரணநாதனை வலுப்படுத்தி இயக்கி வாழ்வில் மேன்மை அடையுங்கள்.
கரண விலங்குகள்
பவம் - சிங்கம்
பாலவம் - புலி
கௌலவம் - பன்றி
தைதுலை - கழுதை
கரசை - யானை
வணிசை - காளை
பத்திரை - கோழி
சகுனி - காகம்
சதுஷ்பாதம் - நாய்
நாகவம் - பாம்பு
கிம்ஸ்துக்னம் - புழு
கரண தேவதைகள், கோயில்கள்
பவம்
தேவதை - நரசிம்மர்.
கோயில் - நாமக்கல் லட்சுமி நரசிம்மர் கோயில்.
பாலவம்
தேவதை - ஐயப்பன்
கோயில் - சபரிமலை ஐயப்பன் கோயில் / கிராம தேவதைகள்
கௌலவம்
தேவதை - ஸ்ரீ வராக மூர்த்தி
கோயில் - கடலூர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீ முஷ்ணம் ஸ்ரீ வராஹ மூர்த்தி
தைதுலை
தேவதை - ஜேஷ்டா தேவி
கோயில் - காஞ்சிபுரம் மாவட்டம் பெரு நகரில் உள்ள ஜேஷ்டாதேவி கரசை
தேவதை - விநாயகர்
கோயில் - பிள்ளையார்பட்டி
விநாயகர் கோயில்
வணிசை தேவதை - நந்தி
கோயில் - அரியலூர் மாவட்டம் திருமழபாடியில் உள்ள சிவன் கோயிலில் வீற்றிருக்கும் நந்தி பகவான்
பத்திரை
அதிதேவதை - முருகன்
கோயில் - திருச்செந்தூர் முருகன் கோயில்
சகுனி
தேவதை - சனீஸ்வரன்
கோயில் - திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில்
சதுஷ்பாதம்
தேவதை - பைரவர்
கோயில் - கும்பகோணம் குத்தாலம் சேத்திர பாலபுரத்தில் உள்ள கால
பைரவர்
நாகவம் தேவதை - நாகராஜா
கோயில் - நாகர்கோவில் நாகராஜா கோயில்
கிம்ஸ்துக்னம்
தேவதை - தன்வந்திரி
கோயில் - ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் அல்லது வைத்தீஸ்வரன் கோயிலில்
இருக்கின்ற தன்வந்திரி ஜீவசமாதி.
ஜோதிடர் S.தனபாலன்