சுபகாரியங்கள் ஆடி மாதத்தில் செய்வதில்லை, ஏன்?
12 தமிழ் மாதங்களில் ஆடி, புரட்டாசி, மார்கழி ஆகிய மாதங்களில் சுபகாரியங்கள் செய்யக்கூடாது என புராணம் கூறுகிறது. அதிலும் முக்கியமாக ஆடி மற்றும் மார்கழி மாதத்தில் திருமணம் செய்யக்கூடாது என்பதை நம் இன்றும் வழிவழியாக பின்பற்றி வருகிறோம். அறிவியல் யுக காலத்திலும் கூட இந்துக்கள் ஆடி மற்றும் மார்கழி மாதத்தில் திருமணம் போன்ற எவ்வித சுப நிகழ்ச்சியும் வைத்துக் கொள்வதில்லை. அதற்கான காரணம் இதோ…
இந்து மதத்தில் ஆடி மாதத்தை சுபகாரியம் செய்வதற்கு பயன்படுத்துவதில்லை. ஆடி மாதத்தில்தான் குருக்ஷேத்திரப் போரும் நடைபெற்றது. அறிவியல் ரீதியாகப் பார்க்கப் போனால் ஆடி மாதத்தில் திருமணம் நடத்தி அம்மாதத்தில் கர்ப்பம் தரித்தால் பிறக்கப்போகும் குழந்தை சித்திரை மாதத்தில் பிறக்கும்.
சித்திரை மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இளவயதுடையவர்களுக்குக் கூட சித்திரை வெயிலின் தாக்கத்தை பொறுத்துக் கொள்ள இயலாத கால கட்டத்தில் பிறந்த குழந்தையினால் தாங்கிக் கொள்ள இயலுமா?
சித்திரை மாதத்தில் பிறக்கும் குழந்தையை வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாத்து வளர்ப்பது கடினமாக இருக்கின்ற காரணத்தினால் ஆடி மாதத்தில் திருமணம் செய்வதைத் தவிர்த்தனர். மாதம் மும்மாரி மழை பொழியும் அக்காலத்திலேயே இது போன்ற விஷயங்களை நம் முன்னோர்கள் கடைபிடித்திருக்கிறார்கள்.
- டி.லதா, நீலகிரி.