தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

?எந்தெந்த காலங்களில் சிவதரிசனம் செய்யலாம்?

- சத்தியநாராயணன், அயன்புரம்.

Advertisement

எல்லாக் காலங்களிலும் சிவதரிசனம் செய்யலாம். ஆனால் சில குறிப்பிட்ட காலங்களில் செய்யப்படும் சிவ தரிசனங்களுக்குப் பலன்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன. காலை சிவ தரிசனம் நோயைத் தீர்க்கும், நண்பகல் சிவதரிசனம் செல்வத்தைப் பெருக்கும், மாலை சந்தியாகாலத்திலே சிவதரிசனம் செய்வது பாவத்தை நீக்கும், அர்த்த ஜாமத்தில் சிவ தரிசனம் செய்வது சிவபதத்தை அளிக்கும்.

?குடியிருக்கும் வீட்டில் நாவல்பழ மரம் வளர்க்கக் கூடாது என்று  சொல்கிறார்களே, ஏன்?

- பா.பாலசுப்ரமணியன், தூத்துக்குடி.

நாவல் மரம் என்பது மருத்துவ குணங்கள் அதிகம் கொண்டது என்றாலும் அதனை வீட்டில் வளர்ப்பதில்லை. பண்ணைத் தோட்டங்கள், நிலங்கள், வயல்வெளிகளில் வளர்த்தார்கள். அது அளவில் பெரியது என்பதாலும் வளர்வதற்கு அதிப்படியான இடம் தேவை என்பதாலும், அந்த மரமானது அதிகப்படியான குளிர்ச்சியைத் தருவது என்பதால் அதனைத் தேடி நிறைய கருவண்டுகள் வருவதோடு கருநாகங்களும் குடிகொள்ளும் என்பதாலும் நாவல்பழ மரங்களை வீட்டில் வளர்ப்பதில்லை.

?பாண லிங்கம் என்றால் என்ன?

- துரை. இராமகிருஷ்ணன், எரகுடி.

வைஷ்ணவத்தில், நதியில் கிடைக்கும் சாளக்கிராம கற்களை பூஜிப்பார்கள். அதேபோல சைவத்தில் பாணலிங்கம் என்பது நர்மதை நதியில் கிடைக்கும் லிங்கமாகும். 2000 கைகளைப் பெற்றிருந்த பாணாசுரன் ஒவ்வொரு நாளும் 2000 சிவலிங்கங்களைச் செய்து பூஜித்து அவற்றை நர்மதையில் விடுத்தான். இப்படிப் பல்லாண்டு காலம் அவன் செய்த பூஜையில் விடுக்கப்பட்ட லிங்கங்கள், இன்றும் நர்மதையில் பாணலிங்கங்களாகக் கிடக்கின்றன. நர்மதையில் இவற்றைத் தேடி எடுத்து வழிபடுகின்றனர். இவை சிவ வழிபாட்டுக்குச் சிறந்தவை. நர்மதை நதிக்கரையில்தான் ஜோதிர்லிங்கத் தலமான ஓம்காரேஸ்வரம் இருக்கிறது.

?மேகராகக் குறிஞ்சி என்றால் என்ன?

- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

தமிழில் பாடப்படும் பண்களில் ஒன்று மேகராகக் குறிஞ்சி. இந்த ராகத்தைப் பாடினால் மழை வரும். இன்றைய கர்நாடக சங்கீதத்தில் மேகராகக் குறிஞ்சி ராகத்தை அமிர்த வர்ஷினி என்று சொல்கிறார்கள். மழை நீருக்கு அம்ருதம் என்று பெயர் உண்டு. வர்ஷித்தல் என்றால் பெய்தல். மழை பெய்வதற்கான ராகம் என்பதால் இதற்கு அமிர்தவர்ஷினி என்று பெயர் வைத்தார்கள்.

?ஒருவர் வீட்டில் எல்லோரும் ஒரே நட்சத்திரமாக அமைவது தோஷமா?

- சரண்யா, வேலூர்.

ஒரு குடும்பத்தில் பல்வேறு உறவுகளில் பலரும் இருந்தாலும், அவர்கள் அனைவரும் தங்களுடைய கர்ம அடிப்படையில் பிறவி எடுத்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில்தான் கிரகங்களும் நட்சத்திரங்களும் பிறக்கும் போது அமைகின்றன. இதில் தோஷம் என்கிற பேச்சுக்கே இடம் இல்லை. சிலர் “ஒரே நட்சத்திரம் என்பதால் அஷ்டமச்சனி, ஏழரைச்சனி எல்லாம் ஒரே நேரத்தில் எல்லோருக்கும் நடக்கும், கஷ்டப்படுவார்கள்” என்பார்கள். நட்சத்திரம் ஒன்றாக இருந்தாலும், கிரக அமைப்புகளும் தசாபுத்திகளும் வேறுபடும். எனவே எல்லோருக்கும் ஒரே மாதிரியாக அஷ்டமச் சனி செயல்படாது. எனவே அச்சப்பட வேண்டாம். இறைவன் திருவருள் என்று எடுத்துக் கொள்ளுங்கள்.

?கோயில் கர்ப்ப கிரகத்தின் முன்னால் விழுந்து வணங்கக் கூடாது என்று சொல்கிறார்களே, ஏன்?

- மகேஸ்வரி, சிவகங்கை.

ஒவ்வொரு ஆலயமும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். அந்த ஆலயத்தின் வழிபாட்டு விதிகளை நாம் தெரிந்து கொண்டு வழிபாடு நடத்தினால், மிகச் சிறப்பாக இருக்கும். கருவறைக்கு முன்னால் நேரடியாக விழுந்து வணங்குகின்ற முறை ஒரு சில சிறிய கோயில்கள் தவிர வேறு எங்கும் இல்லை. பிராகாரத்தை வலம் வந்து கொடிமரம் பலி பீடம் முன்னால்தான் விழுந்து வணங்க வேண்டும். பலி பீடத்தின் முன்னால் “என் கெட்ட எண்ணங்கள் அத்தனையையும் பலி கொடுத்துவிட்டேன்; உன்னையே நம்பி உன் காலடியில் விழுந்து விட்டேன்” என்று சொல்வது போல விழுந்து வணங்க வேண்டும். இன்னொரு விஷயம். மிக அதிகமான கூட்டம் இருக்கக்கூடிய கோயிலில், கருவறைக்கு முன்னால் விழுந்து வணங்குவது என்பது நிர்வாக ரீதியிலும் பல சிரமங்களைத் தரும் அல்லவா. எல்லா அம்சங்களையும் யோசித்துத் தான் சில ஆகம விதிகளைக் கூட நம்முடைய பெரியவர்கள் வகுத்துத் தந்திருக்கிறார்கள். நம்முடைய வழிபாடு மற்றவர்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது.

?வீடு கட்ட கடகால் போட்டபின் எத்தனை மாதத்தில் கட்டி முடித்துவிட வேண்டும்?

- பொன்விழி, அன்னூர்.

அது நாம் கட்டும் வீட்டின் அளவைப் பொறுத்தது. பொதுவாக குடியிருப்பதற்காக ஒரு வீட்டைக் கட்டும்போது கடகால் போட்ட நாளில் இருந்து பஞ்ச பக்ஷம் என்று சொல்லப்படும் 75 நாட்கள் முதல் ஐந்து பஞ்ச பக்ஷம் வரை அதாவது 25 பக்ஷம் என்ற கால அளவில் 375 நாட்களுக்குள் வீடு கட்டி முடித்து க்ருஹப்ரவேசம் செய்துவிட வேண்டும். கால தாமதம் ஆகும் பட்சத்தில் மீண்டும் ஒருமுறை அதற்குரிய பிராயச்சித்த பூஜைகளைச் செய்துவிட்டு பணியைத் தொடர வேண்டும். கடகால் போட்ட நாளில் இருந்து மூன்று மாதம் முதல் அதிக பட்சமாக ஒரு வருடத்திற்குள் வீட்டை கட்டி முடித்துவிட வேண்டும் என்று நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளலாம்.

?தீபத்தை வாயால் ஊதி அணைக்கலாமா?

- ராமகிருஷ்ணன், திருச்சி.

தீபத்தை மட்டுமல்ல எரிகின்ற அக்னி எதுவாக இருந்தாலும் அதனை வாயால் ஊற்றி அணைக்கக் கூடாது. நம் எச்சில் அக்னி, ஜுவாலை, விளக்கு தீபம் போன்றவற்றில் படக்கூடாது. அந்தக் காலத்தில் வீட்டில் சமையல் முடிந்தவுடன் அடுப்பில் எரியும் விறகைத் தணிக்கும் வழிமுறையைக் கவனித்தால் தெரியும். ஒவ்வொரு விறகாக வெளியே இழுப்பார்கள் அதன் பிறகு தண்ணீரை, அதுவும் சுத்தமான தண்ணீரைத் தெளித்து நெருப்பைக் குளிர வைப்பார்கள். இதில்கூட ஒரு விஷயத்தைக் கவனிக்கலாம். விளக்கை அணைத்தல் என்பதுகூட சொல்வது கிடையாது. விளக்கை குளிர வைத்தல் என்று மங்களமாகச் சொல்வார்கள்.

?பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம் இருப்பதாகச் சொல்லுகின்றார்களே. வாத்சல்யம் என்றால் என்ன?

- பாலகுமாரன், சென்னை.

குற்றம் குறைகளுடன் தம் அடியார்கள் இருந்த போதிலும், அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்ளும் குணம்தான் வாத்சல்யம் என்று பொருள். அதாவது, பிறந்த கன்றிடம் தாய் பசு காட்டும் அபரிமிதமான அன்பை வாத்சல்யம் என்று சொல்வார்கள். கன்று பிறந்தவுடன், அழுக்காக இருக்கும். தாய் பசு தன்னுடைய நாக்கால் அந்த அழுக்குகளை எல்லாம் துடைத்துச் சுத்தப்படுத்தும். அதனை பரம போக்கியமாகக் கருதும். அப்படிக் குற்றங்களை நற்றமாக ஏற்றுக்கொண்டு அருள்புரியும் இறைவனுடைய குணங்களைத்தான் வாத்சல்யம் என்று சொல்லுகின்றார்கள். அதனால் பகவானுக்கு பக்தவத்சலன் என்று ஒரு திருநாமம் உண்டு. பக்தர்களிடம் வாத்சல்யம் மிகுந்தவன் என்று பொருள்.

அருள்ஜோதி

Advertisement

Related News