தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்த வார விசேஷங்கள்

18-10-2025 - சனிக்கிழமை

Advertisement

தேவகோட்டை மணிமுத்தாறு

விசு உற்சவம்

ஐப்பசி முதல்நாளான இன்று, தேவகோட்டை நகர் மற்றும் பிற பகுதி சுவாமிகள் எல்லையில் உள்ள விருசுழியாறு என்றழைக்கப்படும் மணிமுத்தாறில் தீர்த்தம் கொடுக்க சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயில், நகர மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், கைலாசநாதர் கோயில், கோதண்டராமஸ்வாமி கோயில், ரங்கநாத பெருமாள் கோயில், கிருஷ்ணர் கோயில், காட்டூர் நயினார் வயல் அகத்தீஸ்வரர் கோயில்களிலிருந்து சுவாமிகள் ஒரு சேர மணிமுத்தாறில் எழுந்தருளி தீர்த்தவாரி செய்வர். சிறப்பு அபிஷேகங்களுக்குப் பிறகு தீபாராதனை நடைபெறும். சுவாமிகள் அனைத்தும் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். வழி நெடுகிலும், பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபடுவர். ஐப்பசி கடைசி நாளன்று குட முழுக்கு தீர்த்தவாரி நடைபெறும் .நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர். கோட்டூர் பெரிய காரை நயினார் வயல் பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் சுவாமியுடன் பாத யாத்திரையாக மணிமுத்தாறு வருவர்.

18-10-2025 - சனிக்கிழமை

துலா ஸ்நானம்

துலா மாதம் என்பது ஐப்பசி மாதம். ஐப்பசி மாதம் முதல் தேதி தொடங்கி மாதம் முழுவதும் புனித நதிகளில் நீராடுவது குறிப்பாக காவிரியில் நீராடுவது துலா ஸ்நானம் எனப்படும். இந்த துலா ஸ்நான மகிமை பற்றி துலா காவிரி மகாத்மியத்தில் விரிவாக விளக்கப்பட்டு இருக்கிறது. நதிகளிலே கங்கை நதியை விட புனிதமான நதியாக கருதப்படுவது காவிரி நதி. இதை தொண்டரடிப்பொடியாழ்வார் கங்கையின் புனிதமாய் காவிரி என்று மங்களாசாசனம் செய்திருக்கிறார். காவிரி நதி இரண்டாகப் பிரிந்து ஒரு தீவாக மாறி பகவான் நித்திய வாசம் செய்யும் ரங்கத்தை வளைத்திருக்கிறது. அங்கே பகவானின் திருமுடி தொடங்கி திருவடி வரை ஒரு மாலை போல் காவிரியும் கொள் ளிடமும் ஓடுகின்றன. இத்தனைப் புனிதம் வாய்ந்த காவிரி பூமியில் உள்ள 66 கோடி தீர்த்தங்களும் துலா மாதத்தில் சங்கமிப்பதாகவும் அந்த நேரத்தில் காவிரியில் நீராடுவது 66 கோடி தீர்த்தங்களில் நீராடுவதற்கு சமம் என்றும் சொல்லப் படுகிறது. இந்த துலா ஸ்நானம் செய்வதன் மூலம் பாவங்கள் நீங்கி மன நிம்மதி கிடைக்கும். அனைத்து விருப்பங்களும் நிறைவேறி வாழ்வில் நிறைவாக முக்தியும் கிடைக்கும். பக்தர்கள் ஐப்பசி மாதத்தில் ஏதேனும் ஒரு நாளாவது காவிரி ஓடும் புனிதமான திருத்தலத்திற்குச் சென்று அதிகாலையில் பூக்களால் நதியை அர்ச்சனை செய்து சங்கல்பம் செய்து கொண்டு நீராட வேண்டும். நீராடிவிட்டு முன்னோர்களுக்கு செய்யப்படும் சிராத்தம் பிண்ட தானம் தர்ப்பணம் முதலியவை கல்பகோடி வருஷம் பித்ருக் களைச் சந்தோஷப்படுத்தும். அவர்களுடைய ஆசியைப் பெற்றுத் தரும். சகல தேவதைகளும் ஐப்பசி மாதத்தில் காவிரியில் வந்து நீராடுவதாக துலா காவிரி மகாத்மியத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

18-10-2025 - சனிக்கிழமை

விஷு புண்ணிய காலம்

சித்திரை மாதம், ஆடி மாதம், ஐப்பசி மாதம், தை மாதம் விஷு புண்ணிய காலம் என்று வழங்கப்படுகிறது. இந்த நான்கு மாதங்களில் துலா மாதமாகிய ஐப்பசி மாதம் இரவும் பகலும் சமமாக விளங்கும். ஐப்பசி மாதத்தில் விசு புண்ணியகால வழிபாடு சாலச் சிறந்தது. இக்காலத்தில் விடியலின் நீராடி சங்கல்பம் செய்து கொண்டு இறைவனை வழிபடுவது சாலச் சிறந்தது. நான்முகனுக்கு உரிய நான்கு மாதங்களில் இது ஒன்று.

18-10-2025 - சனிக்கிழமை

சனி பிரதோஷம்

ஒவ்வொரு மாதத்திலும் இரண்டு பிரதோஷம் வரும். அதில் சனிக்கிழமை வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதனை சனி பிரதோஷம் என்பார்கள். சிவ வழிபாட்டிற்கான மிக முக்கியமான நாளாகும். இந்த நாளில் பிரதோஷ விரதம் இருந்து மாலையில் சிவ பெருமானை வணங்கி விரதத்தைப் பூர்த்தி செய்வதன் மூலமாக சிவபெருமான் அருளோடு சனியின் அருளையும் பெற்று மிகப் பெரிய முன்னேற்றத்தை அடையலாம். பிரதோஷ காலம் என்பது மாலை 4:30 மணி முதல் ஆறு மணிக்குள். சனி பிரதோஷ வழிபாடானது 120 சாதாரண பிரதோஷ வழிபாட்டின் பலனைத் தரும். பிரதோஷமாகிய திரயோதசி திதியில் தான் பாற்கடல் கடையப்பட்டு தேவர்களுக்கு அமுதம் வழங்கப்பட்டது . பாற் கடலில் வந்த விஷத்தை சிவபெருமான் உண்டு தன்னுடைய கண்டத்தில் நிறுத்தி நீலகண்டன் என்ற பெயரைப் பெற்றார். அப்பொழுது அவர் ஆடிய தாண்டவம் ஆனந்த தாண்டவம் எனப்படுகிறது. இந்த நாளில் மாலை நேரத்தில் நந்தியை தரிசனம் செய்ய வேண்டியது முக்கியம்.

19-10-2025 - ஞாயிற்றுக்கிழமை மாத சிவராத்திரி

பிரதோஷ நாளுக்கு அடுத்த நாள் சதுர்த்தசி திதி சிவராத்திரி தினமாகக் கொண்டாடப்படுகிறது. மகா சிவராத்திரி மாசி மாதத்தில் வந்தாலும் ஒவ்வொரு சதுர்த்தசி திதியும் சிவபெருமானுக்கு விரதம் இருந்து அனுசரிக்க வேண்டிய நாளாகும். இந்த நாளில் விரதம் இருந்து வில்வ இலைகளால் சிவ பெருமானை அர்ச்சனை செய்வது சாலச் சிறந்தது.

19-10-2025 - ஞாயிற்றுக்கிழமை எம தீபம்

தீபாவளிப் பண்டிகைக்கு முந்தைய நாள் அதாவது ஐப்பசி மாதம் தேய்பிறை திரயோதசி திதி “தனத் திரையோதசி” என்று கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் வீட்டிற்கு வெளியே தெற்கு நோக்கி எம தீபம் ஏற்றும் வழக்கம் உண்டு. இது மறைந்த முன்னோர்களுக்கு செய்யப்படும் ஒரு விதமான அஞ்சலி என்று எடுத்துக் கொள்ளலாம். அவர்களுக்கு வெளிச்சம் தருவதற்காகவும் நரகத்திலிருந்து வெளிச்சமாகிய சொர்க்கத்திற்கு வருவதற்காகவும் இந்த தீபம் ஏற்றப்படுகிறது. இதன் மூலம் அவர்கள் நல்லாசி கிடைத்து குடும்பத்தில் செல்வமும் தொழிலில் முன்னேற்றமும் ஏற்படுவதோடு சுப காரியத் தடைகள் நீங்குகின்றன. மகாளய பட்சத்தில் நம்மைத் தேடி வரும் முன்னோர்கள் நம்முடைய உபசாரத்தை ஏற்றுக் கொண்டு திரும்ப தென்திசை நோக்கி தங்கள் உலகத்திற்கு பயணிக்கின்றனர் அவர்களுக்கு வெளிச்சம் தருவதற்காக இந்த தீபம் ஏற்றப்படுகிறது. இதற்கு மற்ற எண்ணெய் விளக்குகள் பயன்படாது. எள் எண்ணெய் அதாவது நல்லெண்ணெய் மட்டும் விளக்குக்குப் பயன்படுத்த வேண்டும். வீட்டில் எத்தனை நபர்கள் இருக்கிறார்களோ அத்தனை விளக்குகளை ஏற்ற வேண்டும். குறைந்தபட்சம் 5 விளக்காவது ஏற்ற வேண்டும். மாலை பிரதோஷ வேளையான 6:00 மணி முதல் 7.00 மணி வரை இந்தத் தீபத்தை ஏற்ற வேண்டும். இந்த நாள் தனத் திரையோதசி நாளாகவும் கொண்டாடப்படுவதால் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் போன்ற பொருட்களை வாங்கு வதும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த நாளில் மகா லட்சுமி பூஜை விநாயகர் மற்றும் குபேர தன்வந்திரி பூஜைகள் செய்வதும் வழக்கம்.

20-10-2025 - திங்கட்கிழமை தீபாவளி

இன்று தீபாவளித் திருநாள். இருளை நீக்கி ஒளி தரும் ஒரு முக்கியப் பண்டிகை நாள். நரக சதுர்த்தசி என அழைக்கப்படும் இந்த நாளில் அதிகாலை எழுந்து எண்ணெய் தேய்த்து நீராடி, புத்தாடை அணிந்து, தீபங்களை ஏற்றி, இனிப்புகள் செய்து குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கொண்டாட வேண்டும். வாழ்க்கையின் தீய சக்திகளை அழித்து நன்மையை வென்றதைக் குறிக்கும் இந்தத் திருநாள், பல்வேறு மதத்தினரால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. நாமும் மகிழ்ச்சியுடன் இந்த தீபாவளி திருநாளை நண்பர்களுடனும் உறவினர்களுடனும் கொண்டாடுவோம். வாழ்த்து தெரிவிப்போம். வீடு முழுக்க தீபம் ஏற்றுவோம். இந்த நாளில் லட்சுமி குபேர பூஜை மாலை நேரத்தில் செய்வது செல்வச் செழிப்பை அதிகரிக்கும். மங்களகரமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

21-10-2025 - செவ்வாய்கிழமை சர்வ அமாவாசை

இன்று ஐப்பசி மாத அமாவாசை தினம். சந்திரனும் சூரியனும் சேரும் தினம். ஐப்பசி மாதத்தில் சூரியன் துலா ராசியில் நீசம் அடைவார். அதனால்தான் வெளிச்சம் கிடைப்பதற்காக நிறைய விளக்குகளை ஏற்றுகின்றோம். மகாலயம் முடிந்து வரும் அமாவாசை என்பதால் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது விசேஷ பலனைத் தரும். அமாவாசை பூமி காரகனாகிய செவ்வாய் நட்சத்திரமாகிய சித்திரை நட்சத்திரத்தில் செவ்வாய்க் கிழமை வருவது சாலச் சிறந்தது. சூரியன் திங்களாகிய சந்திரன், செவ்வாயாகிய பூமிகாரகன் இணைந்து இருக்கும் அற்புதமான நாளில் முன்னோர்களை வழிபட்டு முன்னேற்றம் பெறுவோம். காலை தர்ப்பணாதிகளைச் செய்து விட்டு மதியம் தலைவாழை இலை போட்டு முன்னோர்களுக்கு உணவு படைத்து காக்கைக்கு வைத்து விட்டு உண்ண வேண்டும். அதுவரை விரதம் இருக்க வேண்டும். மாலை பூஜை அறையில் விளக்கேற்றி இறைவனை வழிபட வேண்டும்.

21-10-2025 - செவ்வாய்கிழமை கேதார கௌரி விரதம், கந்த சஷ்டி

கேதார கௌரி விரதம் என்பது சிவபெருமானுக்குரிய முக்கியமான விரதங்களில் ஒன்றாகும், இது பார்வதி தேவி சிவனை நோக்கி விரதமிருந்து இடப்பாகத்தைப் பெற்றதால் உருவானது. இந்த விரதம் புரட்டாசி மாதத்தில் சுக்கிலபட்ச தசமி தொடங்கி, ஐப்பசி மாத தீபாவளி அமாவாசை வரை 21 நாட்கள் கடைபிடிக்கப்படுகிறது. கணவன்-மனைவி ஒற்றுமையையும், தீர்க்க சுமங்கலி பாக்கியத்தையும், ஆனந்தமான வாழ்வையும் தரும் என்பது நம்பிக்கை. ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும். இந்த ஆறு நாளையும் விரத நாட்களாக கருத வேண்டும். விரதம் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் காலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு வீட்டில் முருகப்பெருமானை நினைத்து தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். ஆறு நாட்களும் வெறும் தண்ணீர் மட்டுமே குடிக்க வேண்டும்.இந்த விரதம் தொடங்கும் நாளில் காலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு வீட்டில் முருகப்பெருமானை நினைத்து தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். காலை மாலை என இரண்டு வேலையும் கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டும். கந்த சஷ்டி விரதம் இருந்தால் திருமண தடைகள் நீங்கும் குழந்தை பாக்கிய வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எதிரிகள் தொல்லை ஒழியவும், நோய், கடன் பிரச்சினை தீரவும் சஷ்டி விரதம் இருந்தால் கை மேல் பலன் கிடைக்கும்.

23-10-2025 - வியாழக்கிழமை எம துவிதியை

ஐப்பசி மாத வளர்பிறை துவிதியை யமத் துவிதியை என்றழைக்கப்படுகிறது. யமத் துவிதியை அன்றுதான் யம தர்மராஜன் தனது சகோதரி வீட்டிற்கு சென்று உணவருந்தி சகோதரியை ஆசீர்வதித்த நாளாகும். எனவே அன்றைய தினம் சகோதரர்கள் சகோதரிகளின் வீட்டிற்குச் சென்று உணவருந்தி பரிசுப் பொருட்களைப் பரிமாறி சகோதரியை ஆசீர்வாதம் செய்ய வேண்டும். இன்று சகோதரன் சகோதரியின் அழைப்பின் பேரில் சகோதரியின் வீட்டிற்கு சென்று வாழை இலையில் உணவு அருந்தி பரிசுகளைப் பரிமாறிக் கொண்டு அசீர்வாதம் செய்தால் சகோதர சகோதரிகளின் அன்பு என்றும் நிலைத்திருக்கும். மேலும் சகோதரனுக்கு தீர்க்காயுளும் சகோதரிக்கு தீர்க்காயுளுடன் தீர்க்க சுமங்கலி யோகமும் உண்டாகும் என எமதர்மராஜன் கூறுகிறார்.

 

Advertisement